- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!
Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!
Siragadikka Aasai Serial 01 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி விட்ட சவாலில் விஜயா ஜெயித்துக்காட்ட முடிவெடுத்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் பரபரப்பான திருப்பங்கள் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்துகின்றன. ரோகிணி, விஜயாவுக்கு போன் செய்து மீனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதன் உண்மையான காரணத்தை கூறுகிறார். இதைக்கேட்டு விஜயா அதிர்ச்சியடைய, தொடர்ந்து பேசிய ரோகிணி "இந்த வீட்டுக்கு வாரிசு கொடுக்கப் போவது நான்தான். மீனாவுக்கும் குழந்தை பிறக்காது, ஸ்ருதியும் குழந்தை பெற மாட்டாள்" என்று ஏளனமாக பேசுகிறாள். இந்த வார்த்தைகள் விஜயாவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!
மீனாவுக்கு அறுவை சிகிச்சை சக்சஸ்
இதற்கிடையில், மீனாவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது. இனி குழந்தை பெறுவதில் எந்த தடையும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள். இந்த நல்ல செய்தியுடன் வீட்டிற்கு திரும்பும் முத்து, குடும்பத்தினரிடம் உண்மையை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் அண்ணாமலை சந்தேகித்து கேள்வி எழுப்பியதால், மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் முத்து வெளிப்படையாக கூறுகிறார். மீனாவுக்கு இனி குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பதை அறிந்ததும் விஜயா மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.
அண்ணாமலையின் அம்மாவுக்கு என்ன ஆச்சு?
ரோகிணியின் குழந்தை மட்டுமே இந்த வீட்டின் வாரிசாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், முத்துவும் மீனாவும் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதே நேரத்தில், அண்ணாமலைக்கு அவசர தொலைபேசி அழைப்பு வருகிறது. அவரது தாயார் திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது. உடனே அண்ணாமலையும் முத்துவும் ஊருக்கு புறப்படுகின்றனர். மீனாவை அவரது தங்கையின் கவனிப்பில் விட்டுச் செல்லும் முத்து, ரவி மற்றும் ஸ்ருதியையும் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்.
சிக்கப்போகும் மனோஜ்
மறுபுறம், மனோஜ் கனகாவின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது கனகாவின் தாய், திருமணத்திற்குப் பிறகு தனது மகளை முழுமையாக கவனிப்பது மனோஜின் பொறுப்பு என்று கடுமையாக எச்சரிக்கிறார். இதனால் சங்கடமடையும் மனோஜை, கனகா வெளியே அழைத்துச் செல்லும்படி வற்புறுத்துகிறார். வேறு வழியில்லாமல் மனோஜும் அதற்கு சம்மதிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்தது. அநேகமாக கனகாவுடன் மனோஜ் வெளியே செல்லும் போது அவர்கள் இருவரும் ரோகிணியிடம் ஜோடியாக சிக்க வாய்ப்பு உள்ளது.
காத்திருக்கும் ட்விஸ்ட்
இந்நிலையில், ரோகிணியின் திட்டம் தோல்வியடையுமா? மீனாவின் வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சி தொடங்குமா? அண்ணாமலையின் குடும்பத்தில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? முத்துவின் பாட்டிக்கு என்ன ஆச்சு? விஜயாவுக்கு விட்ட சவாலில் ரோகிணி ஜெயித்துக் காட்டுவாரா? ரோகிணியின் சதி வெல்லுமா? விஜயாவின் ஆசை நிறைவேறுமா? என்பது இனி வரவிருக்கும் எபிசோட்களில் தெரியவரும்.

