MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : அருணிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சீதா... முத்துவின் செயலால் கதறி அழுத மீனா..!

Siragadikka Aasai : அருணிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சீதா... முத்துவின் செயலால் கதறி அழுத மீனா..!

Siragadikka Aasai Serial 30 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் கராத்தே கிளாஸுக்கு அருண் திடீர் விசிட் அடித்திருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 30 2026, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : Jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்துவும், செல்வமும் முதியோர் இல்லத்துக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கெல்லாம் டிரெஸ் எடுத்துக் கொடுத்து உதவுகிறார்கள். அதே முதியோர் இல்லத்துக்கு மீனா பூ கொடுக்க வருகிறார். அந்த முதியோர் இல்லத்துக்கு பாதி விலைக்கு தான் பூ கொடுக்கிறார் மீனா. எனக்கு வசதி இருந்தால் நான் இலவசமாகவே கொடுத்திருவேன் என மீனா கூறுகிறார். அதற்கு அங்கிருந்த ஊழியர் ஒருவர், பரவாயில்லம்மா, உன்னை மாதிரி இல்லாதவங்க இப்படி உதவுவதே பெரிய விஷயம் தான். இருக்குறவங்க தான் காசே கொடுக்குறதில்ல என சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka Aasai : ரோகிணிக்கு வில்லியாக மாறும் விஜயா... கர்ப்பத்தை கலைக்க நடக்கும் சதி; தடுப்பாரா மனோஜ்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முதியோர் இல்லத்தில் முத்து
Image Credit : Jiohotstar

முதியோர் இல்லத்தில் முத்து

இப்போ கூட பாரு உன்னைய மாதிரி தான் ஒரு தம்பி, உள்ள இருக்குற முதியவர்களுக்கு இலவசமா துணிகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார் என அந்த ஊழியர் சொன்னதும், யார் அது என மீனா உள்ளே சென்று பார்க்கிறார். அப்போது முத்துவும், செல்வமும் முதியவர்களுக்கு டிரெஸ் கொடுப்பதை பார்த்து விடுகிறார். என் மனைவிக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் நாளைக்கு நடக்கப்போகுது, அது நல்லபடியா நடக்கனும்னு நீங்க சாமிக்கிட்ட வேண்டிக்கோங்க என அங்கிருக்கும் முதியவர்களிடம் முத்து வேண்டுகோள் விடுக்கிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Related image2
Siragadikka Aasai : ரோகிணிக்கு வில்லியாக மாறும் விஜயா... கர்ப்பத்தை கலைக்க நடக்கும் சதி; தடுப்பாரா மனோஜ்?
35
எமோஷனல் ஆன மீனா
Image Credit : Jiohotstar

எமோஷனல் ஆன மீனா

அந்த முதியவர்களும், கண்டிப்பா உன் மனைவிக்கு எதுவும் ஆகாதுப்பானு சொல்றாங்க. இதைக்கேட்ட மீனா, ஃபீல் பண்ணி அழுகிறார். முத்துவும் மீனாவை பார்த்துவிடுகிறார். என்னங்க இப்படியெல்லாம் பண்றீங்க என சொல்லி, முத்துவை கட்டிப்பிடித்து அழுகிறார் மீனா. இதையடுத்து வீட்டுக்கு செல்லும் முத்து - மீனா, சோஃபாவில் அமர்ந்திருக்க, அப்போது மீனா மிகவும் சோர்வாக அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு வரும் ரவி, உங்களுக்காக நான் பொங்கல் பண்றேன் என சொல்லி சமையல் வேலையை செய்யத் தொடங்குகிறார்.

45
கராத்தே கிளாஸில் சீதா
Image Credit : Jiohotstar

கராத்தே கிளாஸில் சீதா

மறுபுறம் சீதா, கராத்தே கிளாஸில் டிரெயினிங் எடுக்கிறார். அங்கு சீதாவை பார்ப்பதற்காக, மீனா செல்கிறார். அப்போது மீனாவும், சீதாவும் பேசிக் கொண்டிருக்கும் போது, அருண் மற்றொரு போலீஸ் உடன் அங்கு வருகிறார். அருணை பார்த்ததும் மீனாவும், சீதாவும் சென்று ஒளிந்துகொள்கிறார்கள். ஆனால் அருண் சீதாவை தேடி அங்கு வரவில்லை. கராத்தே கிளாசுக்கு வருபவர்கள் வண்டியை ரோட்டில் நிப்பாட்டி வைத்திருப்பதால், டிராபிக் ஜாம் ஆகுதுனு சொல்வதோடு, உங்க கிளாஸுக்கு வருபவர்களை வைத்தே டிராபிக்கையும் கிளியர் பண்ண சொல்லுங்க என கூறுகிறார்.

55
எஸ்கேப் ஆன சீதா
Image Credit : Jiohotstar

எஸ்கேப் ஆன சீதா

உடனே அந்த கராத்தே மாஸ்டர் நீங்களே 3 பேரை அதற்காக செலக்ட் பண்ணுங்க என அருணிடம் சொல்கிறார். அப்போது கராத்தே கிளாசில் உள்ள பெண்கள் அனைவரும் நிற்க, சீதா மட்டும் அருண் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மறைந்துகொள்கிறார். அருணும் வேறு 3 பெண்களை செலக்ட் பண்ணிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். கிளம்பும்போது அவர் மீனாவை பார்த்துவிடுகிறார். அவரிடம் நீங்க என்ன இங்க என அருண் கேட்கையில், நான் பூ கொடுக்க வந்தேன் என சமாளித்துவிட்டு எஸ்கேப் ஆகிறார் மீனா. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jayamani Passes Away : சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி... 'மலேசியா மாமா' நடிகர் ஜெயமணி காலமானார்!
Recommended image2
Siragadikka Aasai : ரோகிணிக்கு வில்லியாக மாறும் விஜயா... கர்ப்பத்தை கலைக்க நடக்கும் சதி; தடுப்பாரா மனோஜ்?
Recommended image3
Siragadikka Aasai : அருணை அவமானப்படுத்திய சீதாவின் அம்மா... மீனாவின் வாழ்க்கையை மாற்றும் ஆபரேஷன்..!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Recommended image2
Siragadikka Aasai : ரோகிணிக்கு வில்லியாக மாறும் விஜயா... கர்ப்பத்தை கலைக்க நடக்கும் சதி; தடுப்பாரா மனோஜ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved