MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : அருணை அவமானப்படுத்திய சீதாவின் அம்மா... மீனாவின் வாழ்க்கையை மாற்றும் ஆபரேஷன்..!

Siragadikka Aasai : அருணை அவமானப்படுத்திய சீதாவின் அம்மா... மீனாவின் வாழ்க்கையை மாற்றும் ஆபரேஷன்..!

Siragadikka Aasai Serial 28 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் கூறி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 28 2026, 09:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : Jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் அருண், சீதாவை தொடர்புகொள்ள முயற்சி செய்து போன் செய்கிறார். ஆனால், அந்த அழைப்பை சீதாவின் அம்மா எடுத்து பேசுகிறார். அருணிடம் கடும் கோபத்தில் பேசும் அவர், "என் மகளை இப்படி கஷ்டப்படுத்த உங்களுக்கு எப்படி மனசு வந்தது?" என்று சரமாரியாக கேள்வி கேட்கிறார். அதோடு, "மீனாவை முத்து எவ்வளவு அன்பாக பார்த்துக்கொள்கிறார், அதுபோல் நீங்களும் இருந்திருக்க வேண்டாமா?" என்று முத்துவை புகழ்ந்து, அருணை ஒப்பிட்டு பேசுகிறார்.

Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அருணை நினைத்து ஃபீல் பண்ணும் சீதா
Image Credit : Jiohotstar

அருணை நினைத்து ஃபீல் பண்ணும் சீதா

சந்திராவின் இந்த வார்த்தைகள் அருணை மிகவும் பாதிக்கின்றன. மனவேதனையுடன் போனை கட் பண்ணிவிட்டு, சீதாவின் போட்டோவை பார்த்துக்கொண்டே, "ஒருநாள் நீயே என்னிடம் திரும்பி வருவ" என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அருண். மறுபுறம், சீதாவும் அருணைப் பற்றியே சிந்திக்கிறார். "அருண் உண்மையில் நல்ல மனிதர். சில சூழ்நிலைகளால்தான் மாறிவிட்டார். என்ன நடந்தாலும் அவரை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்று மனதில் உறுதியாக இருக்கிறார். இந்த உரையாடலை வெளியே நின்று மீனாவும் முத்துவும் கேட்டு விடுகிறார்கள்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Related image2
Siragadikka Aasai : டைவர்ஸ் கேட்ட மனோஜை அதிரவைத்த ரோகிணியின் பதில்... மீனாவுக்காக பதறிய முத்து...!
35
மீனாவுக்கு ஆபரேஷன்
Image Credit : Jiohotstar

மீனாவுக்கு ஆபரேஷன்

இதற்கிடையில், மீனாவின் உடல்நிலை காரணமாக, முத்து, மீனா மற்றும் சீதா மூவரும் ஒரு சிறப்பு மருத்துவரை சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அனைத்து மருத்துவ பரிசோதனை ரிப்போர்டுகளையும் ஆய்வு செய்த மருத்துவர், ஆபரேஷன் செய்வதே சிறந்த தீர்வு என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து, "ஆபரேஷன் செய்தால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உறுதியா?" என்று அவர்கள் கேட்க, மருத்துவர் ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். இந்த ஆபரேஷன் சக்சஸ் ஆக 50-50 தான் சான்ஸ் இருக்கு என்றும், வெற்றி பெறாவிட்டாலும் பின்னர் டெஸ்ட் டியூப் பேபி போன்ற மாற்று மருத்துவ முறைகள் உள்ளன என்றும் கூறுகிறார்.

45
வேண்டுதலை நிறைவேற்றிய முத்து
Image Credit : Jiohotstar

வேண்டுதலை நிறைவேற்றிய முத்து

ஆனால் அதற்கு அதிக செலவு தேவைப்படும் என்பதையும் விளக்குகிறார். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, முதலில் ஆபரேஷன் செய்து பார்க்கலாம் என்ற முடிவை குடும்பத்தினர் எடுக்கிறார்கள். இந்த முடிவு மீனாவை மிகவும் கவலையில் ஆழ்த்துகிறது. மறுநாள், மீனாவின் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்ற வேண்டுதலுடன், முத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் சேவையில் ஈடுபடுகிறார். இது அவரது அன்பையும், மீனாவுக்கான அக்கறையையும் வெளிப்படுத்தும் காட்சியாக அமைகிறது.

55
பார்வதிக்கு வந்த சந்தேகம்
Image Credit : Jiohotstar

பார்வதிக்கு வந்த சந்தேகம்

இதே நேரத்தில், விஜயா, பார்வதி ஆன்ட்டியிடம் ரோகிணி மற்றும் மனோஜ் தொடர்பான விஷயங்களை விவரமாக கூறுகிறார். ஆனால், பார்வதி ஆன்ட்டி, "ரோகிணி சொல்வதில்தான் உண்மை இருக்கலாம்" என்ற கருத்தை தெரிவிக்கிறார். இதனால் இந்த விவகாரம் அடுத்த கட்டத்தில் எந்த திசைக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. மொத்தத்தில், அருண்–சீதா உறவில் புதிய திருப்பம், மீனாவின் சிகிச்சை முடிவு, முத்துவின் மனிதநேயம் மற்றும் ரோகிணி–மனோஜ் விவகாரத்தில் உருவாகும் புதிய சந்தேகங்கள் ஆகியவை இன்றைய எபிசோடை பரபரப்பாக மாற்றின.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Recommended image2
Siragadikka Aasai : டைவர்ஸ் கேட்ட மனோஜை அதிரவைத்த ரோகிணியின் பதில்... மீனாவுக்காக பதறிய முத்து...!
Recommended image3
Siragadikka Aasai : மனோஜை மடக்கிய விஜயா... கனகாவின் செயலால் ஷாக் ஆன மீனா, முத்து!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Recommended image2
Siragadikka Aasai : டைவர்ஸ் கேட்ட மனோஜை அதிரவைத்த ரோகிணியின் பதில்... மீனாவுக்காக பதறிய முத்து...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved