MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam : ஆசை காட்டிய மயில்வாகனம்... சிக்கப் போகும் சிவனாண்டி; கார்த்திக்கின் அடுத்த மூவ் என்ன?

Karthigai Deepam : ஆசை காட்டிய மயில்வாகனம்... சிக்கப் போகும் சிவனாண்டி; கார்த்திக்கின் அடுத்த மூவ் என்ன?

Karthigai Deepam Serial 31 July 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் சிவனாண்டியிடம் பணத்தாசை காட்டி அவரை சிக்கலில் சிக்க வைக்க பிளான் போடுகிறார் மயில்வாகனம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 31 2026, 11:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
Karthigai Deepam Serial Today Episode
Image Credit : Zee Tamil

Karthigai Deepam Serial Today Episode

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியலில் இன்றைய எபிசோட் பல எதிர்பாரா திருப்பங்களுடன் உள்ளது. ரேவதியின் அன்பான முயற்சியும், சிவனாண்டியை குறிவைத்து நடக்கும் ரகசிய திட்டமும் கதையை மேலும் பரபரப்பாக்குகின்றன. கார்த்திக்கிற்காக ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் ரேவதி, சமையலறைக்குச் சென்று யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ரோகிணி மற்றும் சுவாதியை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். கார்த்திக்கிற்காக சமைக்க ஆரம்பிக்கிறார்.

Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!

சதி செய்யும் சந்திரகலா

அதன் பிறகு கார்த்திக்குப் பிடித்த சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை அக்கறையுடன் சமைக்கத் தொடங்குகிறார். சமையல் முடிந்ததும், தோழியை சந்திக்கச் செல்வதாக சாமுண்டீஸ்வரியிடம் கூறி வீட்டை விட்டு கிளம்புகிறார். பின்னர் சந்திரகலாவை சந்திக்கும் ரேவதி, தான் தயாரித்த உணவு அனைத்தும் கார்த்திக்கிற்காகத் தான் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறார். இந்த தகவலை உடனே சாமுண்டீஸ்வரியிடம் கூறும் சந்திரகலா, உண்மையை நம்ப வைக்க முயற்சிக்கிறார்.

யார் இந்த சூரியகலா? கார்த்திக்கின் பரம எதிரி ரியா மீண்டும் வந்தாச்சு! கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
புதிய வேடத்தில் மயில்வாகனம்
Image Credit : Zee Tamil

புதிய வேடத்தில் மயில்வாகனம்

ஆனால் சந்திரகலாவின் பேச்சை சாமுண்டீஸ்வரி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவர் மீது எரிச்சலை வெளிப்படுத்துகிறார். மற்றொரு பக்கம், மயில்வாகனம் புதிய வேடத்தில் களமிறங்குகிறார். வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர் போல் நடித்து முத்துவேலை சந்திக்கும் அவர், சிவனாண்டியுடன் இணைந்து தொழில் செய்ய விருப்பம் இருப்பதாக கூறுகிறார். இதை நம்பிய முத்துவேல், மயில்வாகனத்தை சிவனாண்டியிடம் அறிமுகப்படுத்துகிறார். அந்த சந்திப்பில், கோவில் நகைகளை கைப்பற்ற உதவினால் ரூ.5 கோடி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறுகிறார்.

கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!

புதிய திட்டம் தீட்டும் கார்த்திக்

இதன்மூலம் சிவனாண்டியை தனது திட்டத்தில் சிக்க வைக்க மயில்வாகனம் முயற்சிக்கிறார். இந்த முக்கிய தகவல் கார்த்திக்கிற்குச் சென்றடைய, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அவர் புதிய திட்டத்தை வகுக்கத் தொடங்குகிறார். இதே நேரத்தில், கார்த்திக்காக அன்புடன் தயாரித்த உணவுகளை எடுத்துக்கொண்டு ரேவதி அவரை சந்திக்க வருகிறார். இந்த சந்திப்பு எப்படி அமையும்? மயில்வாகனத்தின் திட்டத்தில் சிவனாண்டி சிக்குவாரா? கார்த்திக்கின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் நகர்கிறது.

ரேவதியை காப்பாற்ற ஏன் ஆம்புலன்ஸ் வரவில்லை: இயக்குநர் வச்ச பெரிய டுவிஸ்ட் – கார்த்திகை தீபம் சீரியல் பகீர் ரகசியம்!

Related Articles

Related image1
Karthigai Deepam : சந்திரகலாவுக்கு நேரடியாக சவால் விட்ட ரேவதி... ஊரையே கூட்டி அதிரடி முடிவு எடுத்த கார்த்திக்!
Related image2
Karthigai Deepam: மயில்வாகனத்தின் மாஸ் அவதாரம்! ஹோட்டல் அதிபரான காமெடி நடிகர்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!
Recommended image2
Karthigai Deepam : சந்திரகலாவுக்கு நேரடியாக சவால் விட்ட ரேவதி... ஊரையே கூட்டி அதிரடி முடிவு எடுத்த கார்த்திக்!
Recommended image3
Siragadikka Aasai : அருணிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சீதா... முத்துவின் செயலால் கதறி அழுத மீனா..!
Related Stories
Recommended image1
Karthigai Deepam : சந்திரகலாவுக்கு நேரடியாக சவால் விட்ட ரேவதி... ஊரையே கூட்டி அதிரடி முடிவு எடுத்த கார்த்திக்!
Recommended image2
Karthigai Deepam: மயில்வாகனத்தின் மாஸ் அவதாரம்! ஹோட்டல் அதிபரான காமெடி நடிகர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved