MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam : ரகசியமாக வளைகாப்பு ஏற்பாடு செய்த கார்த்திக்.. ரோகினியை பார்த்து சந்தோஷத்தில் ரேவதி! அடுத்து என்ன?

Karthigai Deepam : ரகசியமாக வளைகாப்பு ஏற்பாடு செய்த கார்த்திக்.. ரோகினியை பார்த்து சந்தோஷத்தில் ரேவதி! அடுத்து என்ன?

Karthigai Deepam Serial Twist : கார்த்திகை தீபம் சீரியலில் ரோகினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவருக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்திருக்கிறார் கார்த்திக். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 31 2026, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Karthigai Deepam Serial Twist
Image Credit : youtube/zeetamil

Karthigai Deepam Serial Twist

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். ரோகினியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட அவமானத்தால் ரேவதி மனமுடைந்து போன நிலையில், அவருக்கு கார்த்திக் கொடுக்கும் எதிர்பாராத சர்ப்ரைஸ் இன்றைய எபிசோட்டில் முக்கிய திருப்பமாக அமைகிறது. கடந்த எபிசோடில் ரோகினியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற ரேவதியை சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்தி வெளியே அனுப்பினார்.

Karthigai Deepam : பிறந்தநாள் கேக்கால் மாறிய கதை... சாமுண்டீஸ்வரியை சமாளித்த சுவாதி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மனவேதனையில் ரேவதி
Image Credit : youtube/zeetamil

மனவேதனையில் ரேவதி

இதனால் மனவேதனையுடன் வீட்டுக்குத் திரும்பிய ரேவதி, நடந்த சம்பவத்தை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். “அம்மா இப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை” என்று தனது வேதனையை வெளிப்படுத்துகிறார். ரேவதியை சமாதானப்படுத்தும் பரமேஸ்வரி பாட்டியும் கார்த்திக்கும், வளைகாப்பு நிகழ்ச்சியை வீடியோ கால் மூலம் பார்க்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால், அந்த நிகழ்ச்சியை பார்க்கும் மனநிலையில் தான் இல்லை என்று ரேவதி மறுத்துவிடுகிறார். இதனால் ரேவதியின் மனநிலையை மாற்ற கார்த்திக் ஒரு புதிய திட்டத்தை போடுகிறார்.

35
ரோகினியை அழைத்து செல்லும் மயில்வாகனம்
Image Credit : youtube/zeetamil

ரோகினியை அழைத்து செல்லும் மயில்வாகனம்

மயில்வாகனத்துக்கு போன் செய்யும் கார்த்திக், வளைகாப்பு முடிந்ததும் போட்டோஷூட் இருப்பதாகக் கூறி ரோகினியை ஸ்டூடியோவுக்கு அழைத்து வரும்படி சொல்கிறார். வீட்டிலேயே புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று சாமுண்டீஸ்வரி கூறினாலும், மயில்வாகனம் ஸ்டூடியோவில் போட்டோ எடுத்துவிட்டு வரலாம் என்று கூறி ரோகினியை அழைத்துச் செல்கிறார். ஆனால், உண்மையில் கார்த்திக் அவர்களுக்காக வேறொரு இடத்தில் மிகப்பெரிய ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறார். தனது புதிய வீட்டில் ரோகினியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரகசியமாக செய்து முடிக்கிறார்.

45
மனக்கசப்பு என்ன ஆச்சு?
Image Credit : youtube/zeetamil

மனக்கசப்பு என்ன ஆச்சு?

இதற்கிடையில் ரோகினியும் மயில்வாகனமும் அந்த வீட்டிற்கு வந்து சேருகின்றனர். பின்னர் கார்த்திக், சோகத்தில் இருக்கும் ரேவதியை கீழே அழைத்து வருகிறார். அங்கு ரோகினியை பார்த்ததும் ரேவதியின் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி திரும்புகிறது. அதன்பிறகு ரோகினிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வளைகாப்பு விழா உற்சாகமாக நடைபெறுகிறது. ரேவதியும் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறார். இதன் மூலம் முன்பு ஏற்பட்ட மனக்கசப்பு ஓரளவு மறைகிறது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரோகினியும் மயில்வாகனமும் கார்த்திக்கின் புதிய வீட்டிற்கு வந்திருப்பது பற்றிய தகவல் எப்படியோ சாமுண்டீஸ்வரியின் காதுகளுக்குச் சென்றுவிடுகிறது.

55
வாக்குவாதத்தில் ஈடுபடும் சாமுண்டீஸ்வரி
Image Credit : youtube/zeetamil

வாக்குவாதத்தில் ஈடுபடும் சாமுண்டீஸ்வரி

இதனால் கடும் கோபமடையும் சாமுண்டீஸ்வரி, நேராக அங்கு வந்து அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த ஏற்பாடு தன்னுடையது என்று கார்த்திக் உண்மையைச் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் அதற்குள் ரோகினி அவரைத் தடுத்து நிறுத்துகிறார். மேலும், “நாங்களாகவே விருப்பப்பட்டுத்தான் இங்கே வந்தோம்” என்று கூறி நிலைமையை சமாளிக்க முயற்சி செய்கிறார் ரோகினி. இதையடுத்து சாமுண்டீஸ்வரியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். ரேவதியின் சோகத்தைப் போக்க கார்த்திக் போட்ட இந்த திட்டம் ஒருபுறம் வெற்றியடைந்தாலும், சாமுண்டீஸ்வரிக்கு இந்த விஷயம் தெரிந்ததால் குடும்பத்தில் மீண்டும் பிரச்சினை வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இனி ரோகினி, ரேவதி மற்றும் கார்த்திக்கின் வாழ்க்கையில் என்ன திருப்பங்கள் ஏற்படப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : விஜய் சேதுபதி முன்பே வைல்டு கார்டு போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த ஹவுஸ்மேட்ஸ்... கரீஷ்மா, வாசனுக்கு வந்த சோதனை!
Recommended image2
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image3
TV Serials : அதிக நாட்கள் ஓடிய டாப் 10 தமிழ் சீரியல்கள்! 8 வருஷம் ஓடுன அந்த சீரியல் பத்தி தெரியுமா?
Related Stories
Recommended image1
Karthigai Deepam : போராட்டத்தை ஒடுக்க முயன்று பல்பு வாங்கிய சாமுண்டீஸ்வரி.. மீடியாவிடம் உண்மையை சொன்ன ரேவதி!
Recommended image2
karthigai Deepam : கார்த்திக் மீது பொய் வழக்கு... சாமுண்டீஸ்வரியிடம் நேருக்கு நேர் மோதிய ரேவதி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved