- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரேவதியை காப்பாற்ற ஏன் ஆம்புலன்ஸ் வரவில்லை: இயக்குநர் வச்ச பெரிய டுவிஸ்ட் – கார்த்திகை தீபம் சீரியல் பகீர் ரகசியம்!
ரேவதியை காப்பாற்ற ஏன் ஆம்புலன்ஸ் வரவில்லை: இயக்குநர் வச்ச பெரிய டுவிஸ்ட் – கார்த்திகை தீபம் சீரியல் பகீர் ரகசியம்!
Reason Behind Ambulance Not Coming to Revathi Accident Spot: கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரேவதியை காப்பாற்ற கூடியிருந்த யாரும் ஆம்புலன்ஸூக்கு போன் பண்ணவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Karthigai Deepam Serial
கார்த்திகை தீபம் சீரியலானது இப்போது ரசிகர்களை கண்ணீர் மழையில் நனைய வைத்துள்ளது. இதற்கு காரணம் கார்த்திக்கின் காதல் மனைவியான ரேவதி கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றி கார்த்திகை தீபம் சீரியலின் 1160ஆவது எபிசோடில் என்ன நடந்தது? ஏன் நடந்தது அதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.
Karthigai Deepam Serial Ambulance Not Coming
கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் தங்களது முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடினார். இது மாமியாருக்கும், சின்ன மாமியாருக்கும் பிடிக்கவில்லை. ஏற்கனவே கார்த்திக் பல முறை எடுத்து சொல்லியும் கேட்காத ரேவதி கேட்க் வெட்டி தங்களது திருமண நாளை கொண்டாடினார். இதைத் தொடர்ந்து இது எல்லாவற்றிற்கும் காரணம் கார்த்திக் தான் என்று மாமியார் சாமுண்டீஸ்வரி கார்த்திக் மீது கோபம் கொண்டார்.
Revathi Car Accident
இந்த நிலையில் தான் காதலர் தினத்தன்று தனக்கு சர்ஃப்ரைஸ் செய்த கணவர் கார்த்திக்கிற்கு இப்போது திருமண நாளுக்கு நான் சர்ஃப்ரைஸ் செய்ய வேண்டும் என்று எண்ணினார். இதற்கு என்ன வாங்கலாம் என்று யோசிக்க பைக் வாங்கும் ஆசை வந்தது. அவர் பைக் ஓட்டியதை பார்க்கவே இல்லை என்பதற்காக அவருக்காக புதிய பைக்கும் புக் செய்தார். அந்த பைக் ஷோரூமிற்கு வந்துவிட்டதாக மேனேஜர் சொல்லவே ரேவதியும் உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.
Karthigai Deepam Serial
ஆனால், அதற்கும் முன்னதாக திருமண நாளன்று ரேவதிக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதாகவும், அந்த நாளில் ரேவதியை உன்னுடைய கண் பார்வையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கார்த்திக்கிடம் சித்தர் கூறியிருந்தார். இதன் காரணமாக ரேவதியை எங்கும் செல்ல வேண்டும் என்று கார்த்திக் பல முறை வார்னிங் செய்திருந்தார். அதையெல்லாம் பொருட்படுத்தாத ரேவதி அக்காவிடம் மட்டும் சொல்லிவிட்டு ஷோரூமிற்கு சென்றார்.
Zee Tamil Serial
ஏற்கனவே 2 முறை முருகன் (ஜவுளி கடையில் வேலை பார்த்த இளைஞன்), ரேவதியை கொலை செய்ய முயற்சித்தும் பலனில்லை. இந்த நிலையில் தான் இப்போது புதிய பைக்கை பார்த்துவிட்டு ஷோரூமிலிருந்து வெளியில் வந்த ரேவதி மீது முருகன் காரை ஏற்றியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட ரேவதி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் அக்கம் பக்கத்தினர் கூடினர்.
Karthik and Revathi Wedding Anniversary
சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டோவை வரவழைத்து மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு செல்கின்றனர். மனைவியை காணாத கார்த்திக் ஷோரூமிற்கு வந்து கேட்டார். அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டதாக மேனேஜர் கூறவே ரேவதியை தேடி அலைகிறார். இந்த நிலையில் தான் ஏன் அக்கம் பக்கத்தினர் யாரும் ஆம்புலன்ஸூக்கு போன் பண்ணவில்லை என்ற கேள்வி எழுகிறது.
ஒரே ஒரு பெயர்... ஓகோன்னு ஒரு வாழ்க்கை! நடிகைகளுக்கு பாரதிராஜா சூட்டிய ராசியான பெயர்களின் ரகசியம்!
Karthik and Revathi
பொதுவாக யாராக இருந்தாலும் ஒரு விபத்து ஏற்பட்டது என்றால் முதலில் ஆம்புலன்ஸ் அதன் பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் Call பண்ணுவாங்க. ஆனால், இங்கு யாரும் அப்படி செய்யவில்லை. மாறாக ஆட்டோவை வரவழைத்து அதில் ரேவதியை ஏற்றி கொண்டு செல்கின்றனர். இதற்கு காரணம், ரேவதி செல்லும் ஆட்டோவிற்கு பக்கத்தில் தனது மனைவியை தேடி செல்லும் கார்த்திக்கின் காரும் செல்கிறது. ஆட்டோ மற்றும் காரை பக்கத்திலேயே டிராவல் செய்ய வைத்து ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளார் இயக்குநர்.
Ambulance Not Coming
இதுவே ரேவதியை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு சென்றிருந்தால் அப்படி சீன் எடுத்திருக்க முடியாது. மேலும், ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் பார்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய 1161ஆவது எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
துளசியின் கொடூர சதி... தவிக்கும் ஆனந்தி! - 'சிங்கப்பெண்ணே' இன்றைய எபிசோட் அதிரடி!-