MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!

கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!

Karthigai Deepam Serial Today 1170th Episode Highlights: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கின் மனைவி ரேவதி பழைய நினைவுகளை மறந்த நிலையில் அதை வைத்து அவருக்கு 2ஆவது திருமணம் செய்து வைக்க சாமுண்டீஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 07 2026, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Karthigai Deepam Revathi Second Marriage Promo
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Revathi Second Marriage Promo

கார்த்திகை தீபம் சீரியலானது ரசிகர்களுக்கு போர் அடித்து விடக் கூடாது என்பதற்காக சீரியலின் இயக்குநர் ரேவதிக்கு பழைய நினைவுகளை மறக்க செய்துள்ளார். இதை வைத்து கொஞ்ச நாட்கல் எப்படியும் சீரியலை ஓட்டி விடலாம் என்று திட்டம் போட்டுள்ளார். மேலும், ஏற்கனவே ரேவதிக்கு பழைய நினைவுகள் மறந்துவிட்டது. குறிப்பாக கார்த்திக் உடன் நடந்த திருமணமே அவருக்கு நினைவில் இல்லை. இதை வைத்து அவருக்கு 2ஆவதாக திருமணம் செய்து வைத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுள்ளார். அதோடு அதற்கான பேச்சுவார்த்தையும் இப்போது ஆரம்பித்துள்ளார். மாப்பிள்ளையும் ரெடி. ஆனால், அந்த மாப்பிள்ளை யார் என்று தான் இன்னும் தெரியவில்லை.

26
கார்த்திகை தீபம் ரேவதி திருமணம்
Image Credit : Zee Tamil you Tube

கார்த்திகை தீபம் ரேவதி திருமணம்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடான 1170ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பதை ஹைலைட்ஸாக பார்க்கலாம். அதற்கு முன்னதாக சீரியலின் வில்லி சந்திரகலா எங்கு சென்றார் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அவர் ரேவதிக்கு பூர்ணமாக குணமானால் திருப்பதிக்கு நடந்தே வருவதாக சாமியிடம் வேண்டியிருந்தார் என்று ஒரு சில காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுவதும் சீரியலில் சந்திரகலாவின் காட்சிகள் இடம் பெறாது. அதற்கு பதிலாகத்தான் புதிய வில்லியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சூரியகலா நேற்றைய எபிசோடில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

36
Chamundeeswari plan in Karthigai Deepam
Image Credit : Zee Tamil You Tube

Chamundeeswari plan in Karthigai Deepam

சூரியகலாவை வைத்து தான் இனி கார்த்திகை தீபம் சீரியலின் ஒவ்வொரு காட்சிகளும் நகரும் என்று தெரிகிறது. அதற்கும் முன்னதாக இந்த சூரியகலா வேறு யாருமில்லை. கடந்த சீசனில் கார்த்திக்கின் அண்ணனாக நடித்திருந்த ஆனந்திற்கு 2ஆவது மனைவியாக ரியா என்ற ரோலில் நடித்திருந்தார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் என்ற சீரியலில் வில்லியாக சத்யாவாக நடித்து வருகிறார். இவரது உண்மையான பெயர் மௌனிகா சுப்பிரமணியன். இப்போது கார்த்திகை தீபம் சீரியலில் சூரியகலா என்ற ரோலில் எண்ட்ரி கொடுத்துள்ளார். இனி வரும் காலங்களில் கார்த்திக்கிற்கு இவர் தான் வில்லியாக இருப்பார் என்று தெரிகிறது.

46
Karthigai Deepam serial Revathi and Chamundeeswari
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam serial Revathi and Chamundeeswari

ஏற்கனவே சூரியகலாவின் அண்ணனுக்கும் தனது மகளுக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றி சாமுண்டீஸ்வரி பேசியிருந்தார். அதற்காக சூரியகலாவை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். அதன்படி 1170ஆவது எபிசோடின் படி சூரியகலாவும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் கையோடு ரேவதிக்கு என்று புதிய மொபைல் போன் ஒன்றையும் வாங்கி வந்திருந்தார். அதனை ரேவதிக்கு பரிசாக கொடுத்தார். இந்த வீட்டிலேயே நீ தான் ரொம்ப அழகாக இருக்க. அதனால் இந்த பரிசு உனக்கு தான் என்று சொல்லி கொடுத்தார்.

56
Karthigai Deepam Serial Suriyakala Entry
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Suriyakala Entry

ரேவதியும் அதனை வாங்கிக் கொண்டார். ரேவதிக்கு விபத்து ஏற்பட்ட போது அவர் வைத்திருந்த மொபைல் போன் உடைந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், குடும்பத்திலுள்ளவர்களை சாமுண்டீஸ்வரி அறிமுகம் செய்து வைத்தார். பின்னரும் இருவரும் தனியாக சென்று பேசினர். அதில், ரேவதிக்கும் சூரியகலாவின் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றி சாமுண்டீஸ்வரி பேச, சூரியகலாவிற்கும் அதில் சம்மதம். அதற்கு முன்னதாக ரேவதிக்கு நடந்த முதல் திருமண வாழ்க்கை பற்றி சாமுண்டீஸ்வரி எல்லாவற்றையும் சூரியகலாவிடம் சொல்லிவிட்டார். இதே போன்று ரோகிணி மற்றும் ராஜராஜன் இருவரும் தங்களது வீட்டிற்கு வந்த சூரியகலாவை பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டனர்.

66
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட், Karthigai Deepam today episode,
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட், Karthigai Deepam today episode,

அதுமட்டுமின்றி சந்திரகலா அவ்வளவு சீக்கிரம் வேறெங்கும் போகமாட்டாங்க. அவர்கள் அப்படி போகும் ஆளும் கிடையாது என்றும் பேசிக் கொண்டனர். இறுதியாக சூரியகலா, கார்த்திக்கின் போட்டோவை பார்க்க ஆசைப்பட்டுள்ளார். சாமுண்டீஸ்வரியும் அவரது போட்டோவை காண்பிக்கவே அதை பார்த்த சூரியகலா அதிர்ச்சி அடைந்தார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலின் 1170ஆவது எபிசோடு முடிவுக்கு வந்தது. இனிமேல் ஆட்டம் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. முதல் சீசனில் ரியாவாக நடித்து சீரியலில் எல்லோரையும் பிரமிக்க வைத்தார். அதே போன்று இப்போது கார்த்திகை தீபம் சீரியலில் சூரியகலாவாக எண்ட்ரி கொடுத்துள்ள நிலையில் கார்த்திக் மற்றும் சூரியகலாவின் காட்சிகள் எப்படி அமையும் என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈஸ்வரிக்கு தெரியவரும் உண்மை; குணசேகரன் முன்பே உடைக்கப்பட்ட சீக்ரெட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
மரண பயத்தை காட்டிய சிந்தாமணி... நாமினேஷன் வாபஸ் வாங்கும் முடிவில் மீனா..! சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved