- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Bigg Boss : குடும்பத்திடம் இருந்து வந்த சிக்னல்.... பிக் பாஸ் சீசன் 10-ல் பணப் பெட்டியை எடுக்கப்போகும் போட்டியாளர் இவரா?
Bigg Boss : குடும்பத்திடம் இருந்து வந்த சிக்னல்.... பிக் பாஸ் சீசன் 10-ல் பணப் பெட்டியை எடுக்கப்போகும் போட்டியாளர் இவரா?
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடைபெற உள்ள மணி டாஸ்கில், பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறும் போட்டியாளர் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

Bigg Boss Tamil Season 10
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 10 தமிழில் தற்போது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 2026 செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 80 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது வெறும் 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். இந்த வாரம் ஃபேமிலி வீக் என்பதால், உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தார் ஒவ்வொருவராக உள்ளே சென்றனர்.
ஃபேமிலி வீக்
அதன்படி முதலில் வினோத் பாபு மற்றும் லக்ஷ்மி பிரியா ஆகிய இருவரின் குடும்பம் வந்தனர். அடுத்ததாக அடாவடி அன்சர் மற்றும் பிருத்வி ஃபேமிலி உள்ளே சென்றனர். மூன்றாவதாக டிடிஎஃப் வாசன் மற்றும் தன்யா குடும்பத்தினர் வந்திருந்தனர். இறுதியாக காமன்மேன் போட்டியாளர்களான ஜேசன் மற்றும் முனியம்மாள் வீட்டில் இருந்து வந்திருந்தார்கள். இதனால் இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீடு கண்ணீர் கடலில் மிதந்தது. போட்டியாளர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கள் உறவுகளை பார்த்ததால் எமோஷனலாகினர்.
டிடிஎஃப் மனைவி கொடுத்த ஹிண்ட்
பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்களின் குடும்பத்தினரிடம், வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை சொல்லக் கூடாது. அதுமட்டுமின்றி மணி பாக்ஸ் பற்றி டிஸ்கஸ் பண்ணக் கூடாது என்று ஸ்டிரிக்ட் ஆக சொல்லி தான் உள்ளே அனுப்புவார்கள். அதனால் இந்த சீசனில் உள்ளே சென்ற உறவினர்கள் மணி பாக்ஸ் பற்றி நேரடியாக சொல்லாவிட்டாலும் மறைமுகமாக ஹிண்ட் கொடுத்துவிட்டு சென்றிருந்தார்கள். டிடிஎஃப் பணப்பெட்டியை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அவருடைய மனைவி கடைசியாக வீட்டை விட்டு செல்லும்போது கப்போட வீட்டுக்கு வாங்க என சொல்லிவிட்டு சென்றார்.
அன்சருக்கு கிடைத்த கோடு வேர்டு
மறுபுறம் அடாவடி அன்சரின் மனைவி உள்ளே வந்தபோது, வீட்டு செலவை பற்றி பேசி இருந்தார். நீ வச்சிட்டு போன பணத்தை வச்சி தான் பார்த்துட்டு இருந்தேன். இப்போ அது காலியாகிடுச்சு என சொன்னார். இன்னும் நான் கடன் வாங்கல, அந்த நிலைமைக்கு நான் இன்னும் போகல என்றும் சொல்லி இருந்தார். இதெல்லாம் ஒரு கோடு வேர்டு போல தான் தெரிகிறது. மணி பாக்ஸ் எடுக்க வேண்டும் என்றால் நீ உள்ளே வரும்போது இப்படி சொல்லு என பேசி வச்சிட்டு வந்ததுபோல தான் தெரிகிறது. அன்சர் மனைவி அவரிடம் பேசுகையில் இந்த பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அவரே வாண்டடாக சொன்னது போல தெரிந்தது.
இந்த சீசனில் டிடிஎஃப் வாசன் தான் டைட்டில் ஜெயிப்பார் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனால் அன்சரை மணி பாக்ஸ் எடுக்க வைப்பதற்காக அவரது மனைவி ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கிறார். இந்த சீசனில் மணி பாக்ஸ் எடுக்கும் போட்டியாளராக அன்சர் இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அநேகமாக முனியம்மாவுக்கும் அவருக்கும் இடையே இந்த மணி பாக்ஸ் எடுப்பதில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.











