- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பிக் பாஸ் வீட்டில் அப்பாவை நினைத்து கண்கலங்கிய தன்யா... அவரின் கண்ணீருக்கு பின்னால் இருக்கும் வலி என்ன?
பிக் பாஸ் வீட்டில் அப்பாவை நினைத்து கண்கலங்கிய தன்யா... அவரின் கண்ணீருக்கு பின்னால் இருக்கும் வலி என்ன?
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஃபேமிலி வீக்கில் தன்யாவின் குடும்பத்தார் இன்று வீட்டுக்குள் வந்துள்ளனர். அப்போது தன் தந்தை பற்றி உருக்கமாக பேசி உள்ளார்.

Bigg Boss Tamil Season 10
தமிழ் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக் பாஸ் தமிழ் சீசன் 10 . நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 80 நாட்களைக் கடந்து 81வது நாளை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் போட்டியில், அடுத்தடுத்த எவிக்ஷன்களைத் தொடர்ந்து தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இதுவரை 11 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து டபுள் எவிக்ஷன் நடைபெற்று வருவது போட்டியாளர்கள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, 12வது வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் ஃபேமிலி வீக் நடைபெற்று வருகிறது.
ஃபேமிலி வீக்கில் மிஸ்ஸான ஃப்ரீஸ் டாஸ்க்!
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃபேமிலி வீக் என்றாலே ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வரும்போது அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, பாசம், கண்ணீர் எனப் பல உணர்ச்சிகரமான தருணங்கள் இந்த வாரத்தில் இடம்பெறும்.
கடந்த சீசன்களில் குடும்பத்தினர் வருகையின்போது நடத்தப்படும் ஃப்ரீஸ் டாஸ்க் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. குடும்பத்தினரைப் பார்த்ததும் போட்டியாளர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைப் பார்க்கவே பலரும் ஆர்வமாகக் காத்திருப்பார்கள். ஆனால், இந்த சீசனில் வழக்கமான ஃப்ரீஸ் டாஸ்க் இடம்பெறாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுவரை நான்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து இன்று மேலும் இரண்டு போட்டியாளர்களின் குடும்பத்தினரும், நாளை இரண்டு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வீட்டிற்குள் வரவுள்ளதாகத் தெரிகிறது.
அப்பாவை நினைத்து கண்கலங்கிய தன்யா
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 81வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. இந்த புரோமோவில் போட்டியாளர் தன்யாவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தனது குடும்பத்தினரைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைக்கும் தன்யா, குறிப்பாகத் தனது தந்தை குறித்து மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார். அப்போது அவர் வெளிப்படுத்தும் அன்பும் பாசமும் பார்ப்பவர்களையும் நெகிழ வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
போட்டியின் பரபரப்பான சூழலில் குடும்பத்தினரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தன்யா தனது மனதில் இருந்த பல உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார். இந்தக் காட்சிகள் தற்போது பிக் பாஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், 81வது நாள் முதல் புரோமோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Divya Ganesh : சர்ச்சையில் சிக்கிய திவ்யா கணேஷ்.. திருவண்ணாமலை கோவிலில் தடையை மீறி இப்படி செய்யலாமா?















