- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக் டாஸ்க்கில் வென்று அட்வாண்டேஜ் வென்றது யார் என்பதை பார்க்கலாம்.

Ticket To Finale Build Up Week
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 10. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 75 நாட்களைக் கடந்து, 11-வது வாரத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கு இடையேயான போட்டியும் மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே பில்டப் வீக் டாஸ்க்குகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெறும் போட்டியாளர் அடுத்த வாரம் நடைபெறும் டிக்கெட் ரூ பினாலே டாஸ்கில் அட்வாண்டேஜ் பெறலாம் என்பதால் ஒவ்வொரு டாஸ்க்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்க்கில் வெடித்த மோதல்!
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்க்கில் சாதிகா, முனியம்மாள், பிருத்வி மற்றும் டிடிஎஃப் வாசன் ஆகிய நான்கு பேர் இறுதிக்கட்டம் வரை முன்னேறினர். இந்தப் போட்டியில் தன்னை கான்ட்ராக்ட் கில்லாடியாகத் தேர்ந்தெடுத்த பிருத்வியையே வாசன் சுட்டதால், அவர் கடும் கோபமடைந்தார். இதையடுத்து வாசனின் விளையாட்டு குறித்து பிருத்வி அதிருப்தி தெரிவித்தார். அவருடன் இணைந்த ஜேசனும் வாசனின் ஆட்டத்தை விமர்சித்தார். இதனால் போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாசனுக்கு ஆதரவாகப் பேசிய முனியம்மாள்!
இந்த விவகாரத்தில் தலையிட்ட முனியம்மாள், வாசன் விளையாடியதில் எந்தத் தவறும் இல்லை என்று தனது கருத்தைத் தெரிவித்தார். அந்த இடத்தில் யாராக இருந்தாலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இதே முடிவைத்தான் எடுத்திருப்பார்கள் என்றும் கூறினார். இதனால் முனியம்மாளுக்கும் பிருத்வி மற்றும் ஜேசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்க்கின் அடுத்தகட்டத்தில் தற்போது டிடிஎஃப் வாசன், முனியம்மாள் மற்றும் சாதிகா ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் யார் டிக்கெட் டூ ஃபினாலேவை வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
டாஸ்க்கில் வென்றது யார்?
தற்போது கசிந்துள்ள தகவலின்படி இந்த டாஸ்க்கில் சாதிகா மற்றும் முனியம்மாள் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே புள்ளியை பெற்றிருந்ததால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த பில்டப் வீக்கில் நடைபெற்ற அனைத்து டாஸ்க்குகளும் இத்துடன் முடிவடைந்து உள்ளது. இதன்மூலம் இந்த வாரம் நடைபெற்ற அனைத்து டாஸ்க்குகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெறும் போட்டியாளருக்கு அந்த அட்வாண்டேஜ் கிடைக்கும். அதன்படி தன்யா தான் அதிக புள்ளிகளை பெற்று, அட்வாண்டேஜை தட்டிச் சென்றுள்ளார். அது அவருக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பதை அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்க்கலாம்.














