- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss : ஜேசனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஹவுஸ்மேட்ஸ்... இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கியது யார்... யார்?
Bigg Boss : ஜேசனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஹவுஸ்மேட்ஸ்... இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கியது யார்... யார்?
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் 7 போட்டியாளார்கள் நாமினேட் ஆகி உள்ளனர். அவர்கள் யார்... யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil Season 10
தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 10 வாரங்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது 11-வது வாரத்திற்குள் நுழைந்துள்ளது பிக்பாஸ் வீடு. ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத எவிக்ஷன், போட்டியாளர்களுக்கு இடையிலான மோதல் என நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான திருப்பங்களை அளித்து வருகிறது.
டபுள் எவிக்ஷன்
குறிப்பாக, கடந்த 9-வது வாரம் தீபாவளி பண்டிகையின்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதையடுத்து 10-வது வாரத்தில் 12 போட்டியாளர்களுடன் போட்டி தொடர்ந்து வந்தது. இந்த வாரம் முத்தழகி வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்க்காத நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய எபிசோடில் அவர் எவிக்டாகி வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையே மற்றொரு அதிர்ச்சியாக அவினாஷும் வெளியேற்றப்பட்டார். அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியதால் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த எவிக்ஷன் பேசுபொருளானது.
கேப்டன் ஆன தன்யா
இதன் மூலம் தற்போது 11-வது வாரத்தில் 10 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் எஞ்சியுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான கேப்டனாக தன்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், கேப்டன் பதவி கிடைத்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குள் அவருக்கு புதிய தலைவலி காத்திருக்கிறது போல தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் தன்யாவின் கேப்டன்ஸை சோதிக்க முடிவு செய்திருப்பதுதான். ஏற்கனவே மற்றவர்கள் கேப்டன்களாக இருந்தபோது தன்யா விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தற்போது அவர் தலைவராக இருக்கும்போது தாங்களும் விதிகளை மீறி அவரைச் சோதிக்கப் போவதாகத் தெரிகிறது.
நாமினேஷனில் சிக்கியது யார்?
அதிலும் குறிப்பாக, கடந்த வார கேப்டனாக இருந்த ஜேசன், தன்யா கேப்டனாக அறிவிக்கப்பட்ட உடனேயே விதிமுறைகளை மீறி செயல்படத் தொடங்குகிறார். இதனால் தன்யாவை வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறாரா அல்லது அவரது தலைமைப் பண்பைச் சோதிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தன்யா, இந்தச் சவால்களை எப்படிச் சமாளிக்கப் போகிறார்? வீட்டில் விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவாரா? அல்லது போட்டியாளர்களின் எதிர்ப்பால் புதிய பிரச்சினைகள் உருவாகுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த வாரம் நாமினேஷனில் 7 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர். தன்யா கேப்டன் ஆனதால் அவர் நாமினேஷனில் இல்லை. அடுத்ததாக கடந்த வாரம் ஜூனியர் பாஸ் ஆக செயல்பட்ட வினோத் பாபு மற்றும் அன்சர் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெறவில்லை. எஞ்சியுள்ள ஜேசன், டிடிஎஃப் வாசன், லட்சுமி பிரியா, ஷாதிகா, முகேஷ், முனியம்மா, பிருத்வி ஆகிய 7 பேரும் நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அநேகமாக இந்த வாரம் ஜேசன் டேஞ்சர் ஜோனில் சிக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.









