MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam: மயில்வாகனத்தின் மாஸ் அவதாரம்! ஹோட்டல் அதிபரான காமெடி நடிகர்!

Karthigai Deepam: மயில்வாகனத்தின் மாஸ் அவதாரம்! ஹோட்டல் அதிபரான காமெடி நடிகர்!

Mayilvaganam Transformation into Businessman in Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் சும்மாவே இருந்த மயில்வாகனத்தை சந்திரகலா தேவையே இல்லாமல் அவமானப்படுத்தவே அவரோ இப்போது மாமியார் பெயரில் புதிதாக ஹோட்டல் திறந்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 23 2026, 06:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mayilvaganam new hotel opening in Karthigai Deepam
Image Credit : Zee Tamil You Tube

Mayilvaganam new hotel opening in Karthigai Deepam

கார்த்திகை தீபம் சீரியலில் இதுவரையில் காமெடியனாகவே இருந்த மயில்வாகனம் இப்போது பிஸினஸ்மேனாகியுள்ளார். இந்த சீரியலில் லேடி கெட்டப், சிங் கெட்டப், கூர்கா கெட்டப், வெளிநாட்டுக்காரன் கெட்டப் என்று அவர் போடாத வேஷங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா வேடங்களிலும் மயில்வாகனம் நடித்துள்ளார். மேலும், இந்த சீரியலில் காமெடியனாகவும் வலம் வந்தார்.

25
Chandrakala makes Mayilvaganam a businessman,
Image Credit : Zee Tamil You Tube

Chandrakala makes Mayilvaganam a businessman,

சீரியல் ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரையில் வீட்டோட மாப்பிள்ளையாகவே இருந்தார். எப்படி ரோகிணி குழந்தை பெற்றுக் கொள்ளாமல் புருஷனை தனது கண்ட்ரோலில் வைத்திருந்து அதன் பிறகு திருந்தினாரோ அதே போன்று தான் இப்போது மயில்வாகனமும் சின்ன மாமியாரான சந்திரகலாவின் உதவியால் இப்போது பிஸினஸ் மேனாகியுள்ளார்.

35
Karthigai Deepam serial March 2026 twist
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam serial March 2026 twist

ஆம், வீட்டோட மாப்பிள்ளையாக எந்த வேலையும் செய்யாமல் தண்டத்துக்கு உட்கார்ந்து தண்டச்சோறு மாதிரி சாப்பிடுறீரியே அப்படி இப்படி என்று மயில்வாகனத்தை சந்திரகலா அவமானப்படுத்தினார். அப்போதுதான் அவருக்கு ஞானோதயம் பிறந்தது. அதன் பிறகு ஒருஹோட்டலில் சர்வர் வேலை செய்தார். அவரை தேடி கண்டுபிடித்த கார்த்திக் அவருக்கு என்று சொந்தமாக பிஸினஸ் செய்து கொடுக்க முன் வந்தார். அதன்படியே அவருக்கு வங்கி லோன் ஏற்பாடு செய்து கொடுக்க சொந்தமாக ஹோட்டல் பிஸினஸூம் தொடங்கினார்.

45
Zee Tamil Karthigai Deepam latest promo
Image Credit : Zee Tamil You Tube

Zee Tamil Karthigai Deepam latest promo

இதைப் பற்றியும் சந்திரகலா தனது அக்கா சாமுண்டீஸ்வரியிடம் கொழுத்திப் போட, அவரும் இதைப் பற்றி மயில்வாகனத்திடம் விசாரித்தார். அவரும், ஆமாம், அத்தை, எல்லா வேலைகளும் முடிந்த பிறகு நானே உங்களிடம் இதைப் பற்றி சொல்லலாம் என்று இருந்தேன். அதற்குள் நீங்களே கேட்டுட்டீங்க. நீங்கள் தான் ஹோட்டலை திறந்து வைக்க வேண்டும். இப்போது குழந்தை பிறக்க போகுது… இன்னும் சும்மாவே இருக்க கூடாது அல்லவா. அதன் பிறகு செலவு நிறைய இருக்கிறது. அதனால் தான் சொந்தமாக பிஸினஸ் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

55
Mayilvaganam Transformation into Businessman in Karthigai Deepam
Image Credit : Zee Tamil You Tube

Mayilvaganam Transformation into Businessman in Karthigai Deepam

இதற்கு வங்கி லோன் ஏற்பாடு செய்து கொடுத்தது ரேவதியின் வீட்டுக்காரர் கார்த்திக் தான் என்றார். அதன் பிறகு ஹோட்டலை சாமுண்டீஸ்வரி கையால் திறந்தனர். ஹோட்டலுக்கு மாமியாரின் பெயரை வைத்திருந்தனர். இதைப் பார்த்த சாமுண்டீஸ்வரிக்கு என்ன ஒரு ஆனந்தம். பின்னர், ஹோட்டலில் சாப்பிட்டு கல்லாப்பெட்டியில் பணம் போட்டார். மயில்வாகனமும் கம்பீரமாக முதலாளி என்ற தோரணையோடு கல்லாவில் அமர்ந்தார். இத்தனை நாட்கள் வெறும் காமெடியனாக சீரியலில் வலம் வந்து கொண்டிருந்த மயில்வாகனம் இப்போது முதலாளிதாக அவதாரம் எடுத்திருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
மீனா தங்கமயில் பேசுவதை பார்த்து ஷாக்கான ராஜீ – உண்மை தெரிந்து சாமிகிட்ட வேண்டிக் கொள்ளும் தங்கை!
Recommended image2
பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஜனனிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பத்தியில் காத்திருந்த ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image3
அந்தர் பல்டி அடித்த நிலா... காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சோழன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved