- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss-ல் டபுள் எவிக்ஷன்... இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ஜூட் விடப்போகும் அந்த 2 போட்டியாளர்கள் யார்?
Bigg Boss-ல் டபுள் எவிக்ஷன்... இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ஜூட் விடப்போகும் அந்த 2 போட்டியாளர்கள் யார்?
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளது. அதில் எலிமினேட் ஆகப்போகும் 2 போட்டியாளர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10
டிவியில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி உள்ளது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கிய இந்த சீசன், தற்போது நான்காவது வாரத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் டாஸ்க்குகள் மற்றும் அதனால் உருவாகும் கருத்து வேறுபாடுகள் நிகழ்ச்சியின் பரபரப்பை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்று வரும் ரோப் டாஸ்க் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
ரோப் டாஸ்க்
குமரன் – லக்ஷ்மி பிரியா, அஸ்மிதா – சாவன்யா வேலு மற்றும் ஜாவித் – தன்யா என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கில் பங்கேற்றனர். டாஸ்க்கின் ஒரு கட்டத்தில் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு குமரன் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். இதையடுத்து அஸ்மிதா – சாவன்யா மற்றும் ஜாவித் – தன்யா என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே ரோப் டாஸ்க்கில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். ரோப் டாஸ்க் தொடங்கியதிலிருந்தே சாவன்யா மற்றும் அஸ்மிதா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
முற்றும் மோதல்
டாஸ்க்கில் யார் எப்படி விளையாட வேண்டும் என்பது தொடங்கி, பல்வேறு விஷயங்களிலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டாஸ்க் நடைபெறும் நேரத்தில் மட்டுமல்லாமல், பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் மற்ற செயல்பாடுகளிலும் இருவருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் இவர்களது பிரச்சினை இந்த வார நிகழ்ச்சியின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வார இறுதியில் டபுள் எவிக்ஷன் நடைபெற இருக்கிறது. அதில் யார்.. யார் வெளியேறப்போகிறார்கள் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
ஓட்டிங் நிலவரம்
அதுமட்டுமின்றி இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ரீ பாஸ் யாருக்கு கிடைக்கப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், நிகழ்ச்சியில் புதிதாக வைல்டு கார்டு போட்டியாளர்களும் களமிறங்க உள்ளனர். அவர்களின் எண்ட்ரிக்கு பின் ஆட்டம் மேலும் சூடுபிடிக்க தொடங்கும். இந்த நிலையில், இந்த வாரம் ஓட்டிங்கில் யார்... யார் எந்த இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, குமரன் தான் அதிகப்படியான வாக்குகள் வாங்கி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் லட்சுமி பிரியா உள்ளார். மூன்றாவது இடத்தில் ஜாவித்தும், நான்காம் இடத்தில் அஸ்மிதாவும் உள்ளனர். எஞ்சியுள்ள தன்யா மற்றும் சாவின்யா தான் கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர். அதனால் இந்த வாரம் அவர்கள் இருவரும் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளன. கடைசி நேரத்தில் ட்விஸ்ட் நடந்தால் அஸ்மிதாவும் எலிமினேட் ஆக வாய்ப்பு உள்ளது.
Bigg Boss : பணப்பெட்டியோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்? அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்

