MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss : பணப்பெட்டியோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்? அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்

Bigg Boss : பணப்பெட்டியோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்? அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்

Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து குமரன் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 30 2026, 07:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Tamil Season 10
Image Credit : jiohotstar

Bigg Boss Tamil Season 10

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் தமிழ் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 9 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது 10-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், 8-வது சீசன் முதல் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

Bigg Boss : அஸ்மிதாவிடம் அடிதடியில் இறங்கிய சாவின்யா... குமரனுக்கு செம டோஸ் கொடுத்த லட்சுமி பிரியா - சூடுபிடிக்கும் பிக் பாஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பிக் பாஸ் ரூல்ஸ்
Image Credit : jiohotstar

பிக் பாஸ் ரூல்ஸ்

பொதுவாக 100 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுகின்றனர். வாரந்தோறும் நடைபெறும் போட்டிகள், நாமினேஷன் மற்றும் எவிக்ஷன் என அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறும் நிலையில், இறுதியில் வெற்றியாளரை ரசிகர்கள் தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி நகர்கிறது. தினமும் விஜய் டிவியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ், ஓடிடி தளத்திலும் தொடர்ந்து நேரலை ஒளிபரப்புடன் ரசிகர்களை சென்றடைகிறது.

35
ரீ எண்ட்ரி கொடுத்த 3 பேர்
Image Credit : jiohotstar

ரீ எண்ட்ரி கொடுத்த 3 பேர்

அந்த வகையில் சீசன் 10 தொடங்கிய முதலே போட்டியாளர்களின் நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி 23 நாட்கள் நிறைவடைந்து, 24-வது நாளை எட்டியுள்ளது. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இரண்டு வைல்ட்கார்ட் போட்டியாளர்களும் ஏற்கனவே வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 18 பேர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். மேலும், இந்த வார எவிக்ஷன் தொடர்பாகவும் பரபரப்பு நிலவி வருகிறது.

45
இந்த வாரம் 3 எலிமினேஷன்
Image Credit : jiohotstar

இந்த வாரம் 3 எலிமினேஷன்

ஏனெனில் இதுவரை லீடர் எக்ஸிட் போல் மூலம் வெளியேறிய லட்சுமி பிரியா, ஜாவித், சாவின்யா ஆகிய மூன்று பேர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று, அங்கிருக்கும் மூவரை தேர்வு செய்துள்ளனர். அதன்படி ஜாவித், தன்யாவையும், சாவின்யா, அஸ்மிதாவையும், லட்சுமி பிரியா குமரனையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் 6 பேர் தான் இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளனர். இதில் மக்களிடையே கம்மியான வாக்குகளை வாங்கும் 3 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட உள்ளனர். அதனால் யார் அந்த 3 பேர் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

55
வெளியேறிய குமரன்
Image Credit : instagram/vijaytelevision

வெளியேறிய குமரன்

இந்த மூன்று போட்டியாளர்களும் தாங்கள் தேர்வு செய்த 3 நபர்களுடன் கையில் கயிறு கட்டிக் கொண்டு ஜோடியாக சுற்ற வேண்டும். அந்த கயிற்றை கழட்டினால் அவர்கள் எலிமினேட் செய்யப்படுவர். அந்த வகையில் லட்சுமி பிரியாவுடன் கயிறு கட்டுக் கொண்டு சுற்றி வந்த குமரன் கயிற்றை கழற்றிக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணப்பெட்டி வைக்கப்பட்டதாகவும், அதில் இருந்த 5 லட்சம் தொகையை எடுத்துக் கொண்டு குமரன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

Bigg Boss 10 : நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஜெயிப்பவர்களுக்கு பிக் பாஸ் வைத்துள்ள மெகா ட்விஸ்ட் பற்றி தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : அஸ்மிதாவிடம் அடிதடியில் இறங்கிய சாவின்யா... குமரனுக்கு செம டோஸ் கொடுத்த லட்சுமி பிரியா - சூடுபிடிக்கும் பிக் பாஸ்
Recommended image2
Bigg Boss 10 : நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஜெயிப்பவர்களுக்கு பிக் பாஸ் வைத்துள்ள மெகா ட்விஸ்ட் பற்றி தெரியுமா?
Recommended image3
Bigg Boss 10 : தந்தை மரணம்... பிக் பாஸ் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய போட்டியாளர் - ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்
Related Stories
Recommended image1
Lakshmi Priya : எலிமினேட் ஆகும் முன் அவினாஷை லெஃப்ட் ரைட் வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா... ஷாக் ஆன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
Recommended image2
Bigg Boss Lakshmi Priya Salary : 18 நாட்களில் எலிமினேட் ஆன லட்சுமி பிரியா... பிக் பாஸ் வாரிவழங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved