MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss Lakshmi Priya Salary : 18 நாட்களில் எலிமினேட் ஆன லட்சுமி பிரியா... பிக் பாஸ் வாரிவழங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?

Bigg Boss Lakshmi Priya Salary : 18 நாட்களில் எலிமினேட் ஆன லட்சுமி பிரியா... பிக் பாஸ் வாரிவழங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?

Lakshmi Priya Eliminated from Bigg Boss : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி உள்ள லட்சுமி பிரியா எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 25 2026, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Lakshmi Priya Salary
Image Credit : jiohotstar

Bigg Boss Lakshmi Priya Salary

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் ஆகும் நிலையில், தற்போது தான் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. முதல் இரண்டு வாரம் மந்தமாக சென்றுகொண்டிருந்த நிலையில், மூன்றாவது வாரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக லட்சுமி பிரியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் லீடர் எக்ஸிட் லிஸ்ட்டில் லட்சுமி பிரியாவின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார் கேப்டன் அவினாஷ். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் லட்சுமி பிரியா, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்.

Lakshmi Priya : எலிமினேட் ஆகும் முன் அவினாஷை லெஃப்ட் ரைட் வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா... ஷாக் ஆன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அவினாஷை வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா
Image Credit : jiohotstar

அவினாஷை வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா

லட்சுமி பிரியாவின் எவிக்‌ஷன், யாரும் எதிர்பார்க்காத ஒன்று. மேலும் இது நியாயமில்லாத எவிக்‌ஷன் என அவரது ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவினாஷ் கேப்டன் ஆக வேண்டும் என்பதற்காக கடுமையாக டாஸ்குகளை செய்திருந்தார் லட்சுமி பிரியா. அப்படி தனக்கு ஹெல்ப் பண்ணியவரை, பதவியில் ஏறியதும் தூக்கி எறிந்துவிட்டார் அவினாஷ். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன் அவினாஷை வெளுத்து வாங்கினார். இதுவரை எந்த ஒரு போட்டியாளரும் வெளியேறும் முன் இப்படி ஆக்ரோஷமாக பேசியதில்லை.

34
கதறி அழுத ஷாதிகா
Image Credit : jiohotstar

கதறி அழுத ஷாதிகா

உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம், அவனை மட்டும் ஜெயிக்க விட்றாதீங்க என கேட்டுக் கொண்ட லட்சுமி பிரியா, பிக் பாஸ் வரலாற்றிலேயே நீ தான் மோசமான பிளேயர் என சொல்லிவிட்டு விறுவிறுவென நடையைக் கட்டினார். லட்சுமி பிரியாவின் எவிக்‌ஷனை தாங்கிக் கொள்ள முடியாத அவரது தோழிகளான முத்தழகி, ஷாதிகா ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவினாஷ் குரூப்பிசம் செய்வதாகவும், குரூப்பாக சேர்ந்துகொண்டு லட்சுமி பிரியாவை டார்கெட் செய்து எலிமினேட் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார் ஷாதிகா.

44
லட்சுமி பிரியா சம்பளம் எவ்வளவு?
Image Credit : jiohotstar

லட்சுமி பிரியா சம்பளம் எவ்வளவு?

பிக் பாஸ் வீட்டுக்குள் குரூப்பிசம் நடப்பதாக புது புகார் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் குறித்து நாளை விஜய் சேதுபதி பேச அதிகம், வாய்ப்புள்ளது. எலிமினேட் ஆகும் முன் ஆக்ரோஷமாக பேசிய லட்சுமி பிரியா, நாளை விஜய் சேதுபதி முன்னிலையில், ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸையும் எவ்வாறு ரோஸ்ட் செய்யப் போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமி பிரியா வாங்கிய சம்பளம் பற்றிய தகவலும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதன்படி, லட்சுமி பிரியாவுக்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில், அவர் ஒட்டுமொத்தமாக 18 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்தார். அதைவைத்துப் பார்த்தால் அவருக்கு இந்த 18 நாட்களுக்கு மட்டும் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர்களில் லட்சுமி பிரியாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத எவிக்‌ஷன்... இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டது இவரா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lakshmi Priya : எலிமினேட் ஆகும் முன் அவினாஷை லெஃப்ட் ரைட் வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா... ஷாக் ஆன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத எவிக்‌ஷன்... இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டது இவரா?
Recommended image3
Bigg Boss : ஆளவிடுங்கடா சாமி... கதவை திறக்கச் சொல்லி கதறி அழுத ஆனந்தி... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா?
Related Stories
Recommended image1
Varshini Venkat : பிக் பாஸ் நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்... புழல் சிறையில் அடைக்கப்பட்டதன் ஷாக்கிங் பின்னணி
Recommended image2
Bigg Boss : ஆளவிடுங்கடா சாமி... கதவை திறக்கச் சொல்லி கதறி அழுத ஆனந்தி... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved