MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Lakshmi Priya : எலிமினேட் ஆகும் முன் அவினாஷை லெஃப்ட் ரைட் வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா... ஷாக் ஆன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

Lakshmi Priya : எலிமினேட் ஆகும் முன் அவினாஷை லெஃப்ட் ரைட் வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா... ஷாக் ஆன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

Bigg Boss Lakshmi Priya : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட லட்சுமி பிரியா, தற்போது எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் வெளியேறும் முன் தரமான சம்பவம் செய்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 25 2026, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Lakshmi Priya Eliminated
Image Credit : jiohotstar

Bigg Boss Lakshmi Priya Eliminated

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது பிக்பாஸ். கடந்த 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் 10-வது சீசன், கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

19 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 தற்போது மூன்றாவது வாரத்தை நிறைவு செய்யும் கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கிய முதலே போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் என பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதனால் நிகழ்ச்சிக்கு ஆதரவும் விமர்சனங்களும் கலவையாக கிடைத்து வருகின்றன.

Bigg Boss : ஆளவிடுங்கடா சாமி... கதவை திறக்கச் சொல்லி கதறி அழுத ஆனந்தி... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
புதிய எவிக்‌ஷன் முறை
Image Credit : jiohotstar

புதிய எவிக்‌ஷன் முறை

இந்த சீசனில் வழக்கமான நாமினேஷன் முறையுடன் மாறுபட்ட வகையில் ‘லீடர் எக்சிட் லிஸ்ட்’ என்ற முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த வாரம் ஜாவித் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மூன்றாவது வாரத்தில் லட்சுமி பிரியா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த வாரம் வீட்டின் தலைவராக அவினாஷ் அசோக் இருந்த நிலையில், அவரது முடிவின் அடிப்படையில் லட்சுமி பிரியா லீடர் எக்சிட் லிஸ்டில் இடம்பெற்றிருந்தார். பின்னர் சக போட்டியாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

34
வெளியேறும் முன் அவினாஷுடன் மோதல்!
Image Credit : jiohotstar

வெளியேறும் முன் அவினாஷுடன் மோதல்!

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு லட்சுமி பிரியா, அவினாஷ் அசோக்கை கடுமையாக விமர்சித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த புரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில், அவினாஷை குறிப்பிட்டு லட்சுமி பிரியா தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். மேலும், “அவரை யாரும் ஜெயிக்கவிடாதீர்கள், எனக்காக அதைச் செய்யுங்கள்” என மற்ற போட்டியாளர்களிடம் கூறுகிறார். தொடர்ந்து, இந்த சீசனில் அவினாஷ்தான் மிகவும் மோசமான லீடர் என்றும், அவருக்காக விளையாடியதுதான் தனது மிகப்பெரிய தவறு என்றும் காட்டமாக பேசுகிறார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் வரலாற்றிலேயே மோசமான போட்டியாளர் நீ தான் என கூறிவிட்டு ஆக்ரோஷமாக வெளியேறி இருக்கிறார் லட்சுமி பிரியா.

அவினாஷ் மீது இருந்த கோபத்தை மறைக்காமல் லட்சுமி பிரியா பேசிய இந்த காட்சிகள், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

44
விஜய் சேதுபதி ஆக்‌ஷன் எடுப்பாரா?
Image Credit : jiohotstar

விஜய் சேதுபதி ஆக்‌ஷன் எடுப்பாரா?

மூன்றாவது வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டுள்ள லட்சுமி பிரியா, அடுத்த எபிசோடில் விஜய் சேதுபதி மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்திக்க உள்ளார். அந்த சந்திப்பின்போது வீட்டிற்குள் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் என்ன பேசப்போகிறார் என்பதுதான் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பாக அவினாஷ் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு விஜய் சேதுபதி முன்னிலையில் என்ன விளக்கம் அளிக்கிறார், வீட்டில் யாரிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் என்பதையும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனிடையே, லட்சுமி பிரியா அடுத்த எபிசோடில் யாரையெல்லாம் கேள்வி கேட்பார் என்பதை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் வெளியாகி வருகின்றன.

Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத எவிக்‌ஷன்... இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டது இவரா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத எவிக்‌ஷன்... இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டது இவரா?
Recommended image2
Bigg Boss : ஆளவிடுங்கடா சாமி... கதவை திறக்கச் சொல்லி கதறி அழுத ஆனந்தி... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா?
Recommended image3
Bigg Boss : “சிம்ப்ளி வேஸ்ட்”... பிக்பாஸ் வீட்டில் சாந்தினியை கதறி அழவைத்த டாஸ்க்!
Related Stories
Recommended image1
Bigg Boss Eviction : பிக் பாஸ் சீசன் 10-ல் நடந்த ஷாக்கிங் எலிமினேஷன்... இந்த வாரம் எவிக்ட் ஆனது இவரா?
Recommended image2
Bigg Boss : ஷமாவின் கேப்டன் பதவி பறிபோகிறதா? பிக் பாஸ் டெமாகிரசி ரூமில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved