- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss : ஷமாவின் கேப்டன் பதவி பறிபோகிறதா? பிக் பாஸ் டெமாகிரசி ரூமில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்
Bigg Boss : ஷமாவின் கேப்டன் பதவி பறிபோகிறதா? பிக் பாஸ் டெமாகிரசி ரூமில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் கேப்டனாகி உள்ள ஷமாவிற்கு எதிராக போட்டியாளர்கள் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர் அந்த வாரத்திற்கான வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்படுவது வழக்கம். கேப்டனாக இருப்பவருக்கு அந்த வார நாமினேஷனில் இருந்து விலக்கு கிடைப்பதால், போட்டியாளர்கள் கேப்டன்சி பதவியை கைப்பற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஒரு வாரம் கேப்டனாக தேர்வாகும் போட்டியாளர் அந்த வார நாமினேஷனில் இருந்து தப்பிப்பதுடன், அடுத்த வாரமும் வீட்டில் தொடர்வதற்கான வாய்ப்பை பெறுகிறார். இதனால் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் கேப்டன்சி போட்டி பிக்பாஸ் வீட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு வாரமும் பெண் கேப்டன்கள்
தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் ஷாதிகா வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது வாரத்திற்கான கேப்டனாக ஷமா தேர்வாகியுள்ளார். இதன் மூலம் சீசன் 10 தொடங்கிய முதல் இரண்டு வாரங்களிலும் பெண் போட்டியாளர்களே வீட்டின் தலைமை பொறுப்பை கைப்பற்றியுள்ளனர். இது நிகழ்ச்சியில் கவனம் பெற்றுள்ள நிலையில், ஷமா தலைமையில் இந்த வாரம் வீட்டிற்குள் நடைபெறும் சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
ஷமாவுக்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்?
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் ஆளும் அணி, எதிரணி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரமும் போட்டியாளர்கள் அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஷமா தலைமையிலான ஆளும் அணியில் அவரது செயல்பாடுகளில் அதிருப்தி இருப்பதாக கூறி சில போட்டியாளர்கள் எதிரணிக்கு செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், ஷமாவுக்கு ஆதரவாக மூன்று போட்டியாளர்கள் மட்டுமே ஆளும் அணியில் இருப்பது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
கேப்டனுக்கு வந்த சிக்கல்
இதனால் கேப்டனாக பொறுப்பேற்ற இரண்டாவது வாரத்திலேயே ஷமாவுக்கு வீட்டிற்குள் சவால் உருவாகியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்த காட்சிகள் தொடர்பான புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. கடந்த வாரமும் இதேபோல் எதிர்ப்பு வந்ததால், ஷாதிகா, தனக்கு கேப்டன் பதவியே வேண்டாம் என பாதியிலேயே தூக்கியெறிந்துவிட்டு சென்றார். அதேபோல் ஷமா முடிவெடுப்பாரா, அல்லது இந்த எதிர்ப்பை சமாளித்து கேப்டன் பதவியில் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

