- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Bigg Boss Vijay Sethupathi Controversy : பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தலைமைப் பண்பு பற்றி பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், விஜய் டிவி அதுபற்றி விளக்கம் அளித்துள்ளது.

பிக் பாஸ் சர்ச்சை
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது சர்ச்சையான நிலையில், அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவி ஒரு விளக்கம் கொடுத்திருக்கு. 'இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. இதில் பேசப்படும் விஷயங்கள், போட்டிகளின் ஒரு பகுதிதான். எந்தவொரு தனி நபரையும், இயக்கத்தையும், சித்தாந்தத்தையும் ஆதரிப்பதோ, விமர்சிப்பதோ எங்கள் நோக்கம் இல்லை'னு விஜய் டிவி தெளிவுபடுத்தியிருக்கு. சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்ததால், இந்த விளக்கம் வந்திருக்கு.
Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி
பின்னணி என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில தலைமைப் பண்பு பத்தி விஜய் சேதுபதி பேசினது, நடிகர் விஜய்யை விமர்சிப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதமே கிளம்பியது. 'தலைமைன்னா என்னன்னே தெரியாம வாக்குறுதி கொடுக்கிறதும், பிரச்சினை வரும்போது எதிராளியைக் குறை சொல்லிவிட்டு ஓடிப் போறதும் தலைமைப் பண்பு இல்லை'னு விஜய் சேதுபதி பேசினார். இது நடிகர் விஜய்யை மறைமுகமாகத் தாக்குவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவிச்சாங்க. திமுகவை திருப்திப்படுத்ததான் விஜய் சேதுபதி இப்படி விஜய்யை மறைமுகமாகத் தாக்கிப் பேசுறார்னு தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம் சாட்டுறாங்க.
ரசிகர்கள் மோதல்
ரசிகர்கள் மோதல்
விஜய், அரசியல் கட்சி தொடங்கியபோதுகூட விஜய் சேதுபதி வாழ்த்து சொல்லல என்பதையும் அவங்க சுட்டிக்காட்டுறாங்க. ஆனா, விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ன சொல்றாங்கன்னா, 'அவர் பிக் பாஸ் வீட்டுக்குள்ள நடந்த சம்பவங்களை வெச்சுதான் பேசினார். இதுக்கு தேவையில்லாம அரசியல் சாயம் பூச வேண்டாம்'னு வாதம் பண்றாங்க. பிக் பாஸ் வீட்டுல முதல் வாரம் தலைவரா இருந்த ஷாதிகா, தன்னை சுற்றி ஏராளமானோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததும் அதை தாங்கிக் கொள்ள முடியாம, தனக்கு அந்த பதவியே வேண்டாம்னு சொல்லிட்டு போனாங்க. அதைப் பத்தி அவர் பேசியது தான் தற்போது மிகப்பெரிய விவாதப் பொருளா மாறிருக்கு.
மாஸ்டர் டீம்
விஜய் சேதுபதி, விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்துல நடிச்சிருந்தாரு. அந்த படத்துல விஜய்க்கு வில்லனாக பவானி என்கிற கேரக்டரை திறம்பட நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அப்படம் ரிலீஸ் சமயத்தில் போஸ்டரின் விஜய் சேதுபதி பெயர் இடம்பெறாமல் இருந்த நிலையில், அவரது பெயரையும் சேர்க்க சொல்லி விஜய் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் தன்னுடன் சக நடிகராக நடித்தது மட்டுமின்றி, மாஸ்ட பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு தன்னுடைய சிக்னேச்சர் முத்தத்தையும் கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி.

