- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Bigg Boss 10 : எஸ்கேப் ஆன முனியம்மா... எலிமினேட் ஆனது யார்? பிக் பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு எவிக்ஷனா..!
Bigg Boss 10 : எஸ்கேப் ஆன முனியம்மா... எலிமினேட் ஆனது யார்? பிக் பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு எவிக்ஷனா..!
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு எலிமினேட் ஆன முதல் போட்டியாளர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg boss Tamil 10 First Elimination
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. தொடங்கிய முதல் வாரத்திலேயே வீட்டுக்குள் சண்டைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. இந்த சீசனில் 19 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அதில் 16 பேர் பிரபலங்கள், எஞ்சியுள்ள மூன்று நபர்கள் காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து உள்ளே சென்றனர். இந்நிகழ்ச்சியின் ஓப்பனிங் எபிசோடே எலிமினேஷன் உடன் தான் நடைபெற்றது. துவக்க நாளிலேயே மொத்தம் 8 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதுபோக எஞ்சி இருந்த 19 பேர் தான் போட்டியாளராக உள்ளே சென்றனர்.
சர்ச்சையில் சிக்கிய ஷாதிகா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் வீட்டின் கேப்டனாக ஒரு நபர் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் இந்த சீசனில் முதல் கேப்டனாக ஷாதிகா தேர்வு செய்யப்பட்டார். இவர் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்தே வீட்டில் சண்டையும், சச்சரவுமாக சென்று கொண்டிருந்தது. குறிப்பாக முனியம்மாவை டார்கெட் செய்து அவரை குறைகூறிக் கொண்டிருந்தார் ஷாதிகா. கிச்சனில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, சமைத்துக் கொண்டிருந்த முனியம்மா, ஷாதிகாவை பார்த்து துப்பினார். இது பெரிய பிரச்சனையாக வெடித்தது.
உள்ளே வந்த வைல்டு கார்டு போட்டியாளர்
இதையடுத்து ஹவுஸ்மேட்ஸை கூட்டி, தான் முனியம்மா மீது ஆக்ஷன் எடுக்க உள்ளதாக கூறிய ஷாதிகா, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முனியம்மாவை ஜெயிலில் அடைத்தனர். இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில், பிளாக் பாண்டிக்கு சுகர் லெவல் அதிகரித்ததால், அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தினார் பிக் பாஸ். பிளாக் பாண்டி வெளியே சென்றதும் அவருக்கு பதிலாக காமன்மேனில் பைனலிஸ்டாக இருந்த மணிவண்ணன் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தார்.
கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஷாதிகா
இதையடுத்து டெமாகிரசி ரூமில், இந்த வாரம் கேப்டனின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது பற்றிய விவாதம் நடந்தது. அதில் ஷாதிகா மீது அடுக்கடுக்கான புகார்கள் முன் வைக்கப்பட்டதால் அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த சீசனில் தினமும் இரவு இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்து, அவர்கள், சக போட்டியாளர்களை இரவு முழுவதும் எண்டர்டெயின் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் பிக் பாஸ். அப்படி எண்டர்டெயின் செய்ய தவறினால் அவர்களில் இருந்து ஒருவர் போட்டியாளர்களால் எலிமினேட் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
எலிமினேட் ஆனது யார்?
இதன்படி இந்த வாரத்தில் எண்டர்டெயின் செய்யதவறிய போட்டியாளர்கள் லிஸ்டில் சாவின்யா, முனியம்மா, தன்யா ஆகியோர் இடம்பிடித்தனர். இவர்கள் மூவரில் இருந்து ஒருவரை எலிமினேட் செய்ய போட்டியாளர்களுக்கு பவர் உண்டு. அதன் அடிப்படையில் தற்போது சாவின்யா சக போட்டியாளர்களால் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை மக்கள் ஓட்டுகளின் அடிப்படையில் தான் எலிமினேஷன் நடந்திருக்கிறது. ஆனால் முதன்முறையாக போட்டியாளர்களே எலிமினேட் செய்த கண்டஸ்டண்ட் என்றால் அது சாவின்யா தான்.

