MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • பிளாக் பாண்டி போல் முதல் வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் யார்... யார்? முழு லிஸ்ட் இதோ

பிளாக் பாண்டி போல் முதல் வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் யார்... யார்? முழு லிஸ்ட் இதோ

Bigg Boss Walkout Contestants : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அந்நிகழ்ச்சியில் இருந்து பிளாக் பாண்டி வெளியேறி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 09 2026, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Walkout Contestants
Image Credit : jiohotstar

Bigg Boss Walkout Contestants

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் களமிறங்கி 19 போட்டியாளர்களில் ஒருவர் தான் பிளாக் பாண்டி. இவர் இந்த சீசனில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் பிளாக் பாண்டி. மருத்துவ காரணங்களுக்காக அவர் இந்நிகழ்ச்சியில் தொடர முடியாது என பிக் பாஸ் அறிவித்ததும். அங்கிருந்த சக போட்டியாளர்கள் அவரை கண்ணீர்மல்க வழியனுப்பி வைத்தனர். பிளாக் பாண்டிக்கு முன் தமிழ் பிக் பாஸில் முதல் வாரமே வெளியேறிய போட்டியாளர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

Bigg Boss 10 : பிளாக் பாண்டிக்கு பதில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஸ்ரீ - பிக் பாஸ் சீசன் 1
Image Credit : X

ஸ்ரீ - பிக் பாஸ் சீசன் 1

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட்ட முதல் சீசனிலேயே இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. அந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகர் ஸ்ரீ, உள்ளே வந்த முதல் நாளில் இருந்தே தனக்கு இங்கு இருக்க முடியவில்லை என சொல்ல, பின்னர் வேறுவழியின்றி அவரை வெளியேற அனுமதித்தார் பிக் பாஸ். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் ஹீரோவாக நடித்தவர் ஆவார்.

Related Articles

Related image1
Bigg Boss : சட்டசபையாக மாறிய பிக் பாஸ் வீடு... ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சியாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ் - அனல்பறக்கும் மோதல்...!
Related image2
Bigg Boss Hosts Salary : பிக் பாஸ் தொகுப்பாளர்களில் யாருக்கு அதிக சம்பளம்? நம்ம விஜய் சேதுபதி எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?
35
நமிதா மாரிமுத்து - பிக் பாஸ் சீசன் 5
Image Credit : jiohotstar

நமிதா மாரிமுத்து - பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளர்களும் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் திருநங்கை போட்டியாளராக கலந்துகொண்டார் நமிதா மாரிமுத்து. இவர் நிகழ்ச்சி தொடங்கி ஒருவாரம் முடிவதற்குள்

சக போட்டியாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் இந்நிகழ்ச்சியை விட்டு விலகியதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் உண்மை காரணம் என்ன என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிடவில்லை.

45
ஜிபி முத்து - பிக் பாஸ் சீசன் 7
Image Credit : jiohotstar

ஜிபி முத்து - பிக் பாஸ் சீசன் 7

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஜிபி முத்து. அந்த சீசனில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அவருக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. ஓப்பனிங் எபிசோடில் கமல்ஹாசனையே கதறவிட்டிருந்தார் ஜிபி முத்து. அவர் உள்ளே சென்று ஒரு வாரம் முடிவதற்குள்ளாகவே தன் மகனை பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை என கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

55
நந்தினி - பிக் பாஸ் சீசன் 9
Image Credit : jiohotstar

நந்தினி - பிக் பாஸ் சீசன் 9

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே வந்த வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறினார் நந்தினி. அவர் இந்நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் ஆக்ரோஷமாக கத்தி ரகளை செய்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் அவரைப் பார்த்து மிரண்டு போனார்கள். பின்னர் வேறுவழியின்றி அவரை பாதியிலேயே வெளியேற்ற அனுமதித்தார் பிக் பாஸ்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிளாக் பாண்டிக்கு பதில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா?
Recommended image2
Bigg Boss Nomination: ஊரோடு ஒத்துபோகனும்..சத்தம் மட்டும்தான் இருக்கு - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image3
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை.. போட்டியாளர்கள் இடையே மோதல்!
Related Stories
Recommended image1
Bigg Boss : சட்டசபையாக மாறிய பிக் பாஸ் வீடு... ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சியாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ் - அனல்பறக்கும் மோதல்...!
Recommended image2
Bigg Boss Hosts Salary : பிக் பாஸ் தொகுப்பாளர்களில் யாருக்கு அதிக சம்பளம்? நம்ம விஜய் சேதுபதி எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved