MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss 10 : பிளாக் பாண்டிக்கு பதில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா?

Bigg Boss 10 : பிளாக் பாண்டிக்கு பதில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா?

Bigg Boss Tamil Season 10 Wild Card Entry : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து பிளாக் பாண்டி வாக் அவுட் பண்ணிய நிலையில், அவருக்கு பதில் வைல்டு கார்டு போட்டியாளர் உள்ளே அனுப்பப்பட்டு உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 09 2026, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Tamil Season 10 Wild Card Entry
Image Credit : jiohotstartamil

Bigg Boss Tamil Season 10 Wild Card Entry

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6ந் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே, பொதுமக்களும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் விதமாக அவர்களை தேர்வு செய்ய காமன்மேன் என்கிற நிகழ்ச்சியை நடத்தினர். அதில் இருந்து 5 பேர் பைனலிஸ்ட் ஆக தேர்வானாலும் ஜேசன், முனியம்மா, ஷாமா ஆகிய மூன்று நபர்களை மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பிக் பாஸ் காமன்மேனில் இருந்து மற்றொரு போட்டியாளரை வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே அனுப்பி வைத்துள்ளனர்.

Bigg Boss Nomination: ஊரோடு ஒத்துபோகனும்..சத்தம் மட்டும்தான் இருக்கு - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சினிமா கனவோடு வந்த பிளாக் பாண்டி
Image Credit : youtube/jiohotstartamil

சினிமா கனவோடு வந்த பிளாக் பாண்டி

அவர் உள்ளே சென்றதற்கு முக்கிய காரணம் பிளாக் பாண்டி தான். இந்த சீசன் தொடங்கும் போது 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பிளாக் பாண்டியும் ஒருவர். இவர் சினிமாவில் காமெடியனாக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் சமீபகாலமாக தனக்கு எதிர்பார்த்த பட வாய்ப்பு கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் மக்கள் மத்தியில் புகழ் வெளிச்சம் கிடைக்கும், அதன் மூலம் பட வாய்ப்புகளை பெற்றுவிடலாம் என்கிற கனவோடு பிக் பாஸ் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார் பிளாக் பாண்டி.

Related Articles

Related image1
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை.. போட்டியாளர்கள் இடையே மோதல்!
Related image2
Bigg Boss : சட்டசபையாக மாறிய பிக் பாஸ் வீடு... ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சியாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ் - அனல்பறக்கும் மோதல்...!
35
வாக் அவுட் பண்ணிய பிளாக் பாண்டி
Image Credit : pinterest

வாக் அவுட் பண்ணிய பிளாக் பாண்டி

ஆனால் அவரின் பிக் பாஸ் பயணம் உள்ளே சென்ற மூன்று நாட்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதும் தன்னால் முடிந்த அளவு அங்கிருக்கும் போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்தார் பிளாக் பாண்டி. அவரை கிச்சன் டீமின் தலைவராக நியமித்து இருந்தார்கள். அங்கு தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பையும் சிறப்பாக செய்து வந்தார். இதனால் இந்த சீசனில் பைனல் வரை செல்லும் தகுதி உடைய போட்டியாளராக பிளாக் பாண்டி இருப்பார் என அனைவரும் யூகித்து வந்த நிலையில், அவரே வாக் அவுட் செய்திருக்கிறார்.

45
பிளாக் பாண்டி பாதியில் சென்றது ஏன்?
Image Credit : youtube

பிளாக் பாண்டி பாதியில் சென்றது ஏன்?

பிளாக் பாண்டி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல்நலம் தான். அவருக்கு மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் இருந்த காரணத்தால் அவர் வேறு வழியின்றி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். பிளாக் பாண்டியின் இந்த எதிர்பாரா முடிவு, அங்கிருந்த போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் வெளியே செல்வதை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமானோர் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளனர். அவரும் கண்ணீர்மல்க அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

55
பிளாக் பாண்டிக்கு பதில் யார்?
Image Credit : jiohotstartamil

பிளாக் பாண்டிக்கு பதில் யார்?

பிளாக் பாண்டி வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளரை உள்ளே இறக்கி விட்டுள்ளார் பிக் பாஸ். அவர் வேறுயாருமில்லை, பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் பைனலிஸ்டாக இருந்த மணிவண்ணன் தான். அவர் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றிருக்கிறார். அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதையும் இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Nomination: ஊரோடு ஒத்துபோகனும்..சத்தம் மட்டும்தான் இருக்கு - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image2
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை.. போட்டியாளர்கள் இடையே மோதல்!
Recommended image3
Bigg Boss : சட்டசபையாக மாறிய பிக் பாஸ் வீடு... ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சியாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ் - அனல்பறக்கும் மோதல்...!
Related Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை.. போட்டியாளர்கள் இடையே மோதல்!
Recommended image2
Bigg Boss : சட்டசபையாக மாறிய பிக் பாஸ் வீடு... ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சியாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ் - அனல்பறக்கும் மோதல்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved