- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அக்ஷிதா, டாஸ்கின் போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Bigg Boss Tamil 10
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 10, நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்றுடன் 54வது நாளை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், அடுத்தடுத்த எவிக்ஷன்கள் மற்றும் வைல்ட் கார்டு என்ட்ரிகளுக்குப் பிறகு தற்போது 15 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த வாரங்களில் நடைபெற்ற டைமண்ட் ஹெய்ஸ்ட் உள்ளிட்ட டாஸ்க்குகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த வாரம் போட்டியாளர்களுக்கு மேலும் சவாலான புதிய டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
கெளபாய்ஸ் Vs மாஃபியாஸ்.. சூடுபிடிக்கும் போட்டி!
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் 'கெளபாய்ஸ் Vs மாஃபியாஸ்' என்ற பெயரில் புதிய டீம் டாஸ்க் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சுற்றிலும் தங்களது அணியின் வெற்றிக்காகப் போராடி வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதங்கள், மோதல்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் என நிகழ்ச்சி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அக்டோபர் 30ஆம் தேதிக்கான எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டாஸ்க்கின் நடுவே மயங்கி விழுந்த அக்ஷிதா!
இன்றைய தினம் போட்டியாளர்களுக்கு 'பாலை தள்ளு கோலை அல்லு' என்ற பெயரில் புதிய டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் கெளபாய்ஸ் மற்றும் மாஃபியாஸ் அணியினர் தங்களுக்கான கோலைப் பெறுவதற்காகத் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மாஃபியாஸ் அணியில் இடம்பெற்றிருந்த அக்ஷிதாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அவர் நிலைதடுமாறி மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத சக போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அக்ஷிதாவைத் தூக்கிக்கொண்டு மருத்துவ அறைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.
சகோதரியின் நிலையைப் பார்த்து கலங்கிய அவினாஷ்!
அக்ஷிதா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதே நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள அக்ஷிதாவின் சகோதரர் அவினாஷ், தனது சகோதரியின் நிலையைப் பார்த்து மிகுந்த கவலையடைந்தது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. அக்ஷிதாவுக்கு என்ன ஆனது? அவர் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? மீண்டும் டாஸ்க்கில் பங்கேற்பாரா? எனப் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இருப்பினும், அக்ஷிதா மயங்கி விழுந்ததற்கான காரணம் மற்றும் அவரது தற்போதைய உடல்நிலை குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. இன்றைய எபிசோடில் இதற்கான விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்?
ஒருபுறம் கெளபாய்ஸ் Vs மாஃபியாஸ் டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் இந்த வார எவிக்ஷன் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் யார் வெளியேறுவார்கள் என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினமாகியுள்ளது. இதற்கிடையில், அக்ஷிதா அல்லது அஷ்மிதா ஆகிய இருவரில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.





