MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bigg Boss : மைனிங் மாஃபியாஸ் டீமின் கொட்டத்தை அடக்க டிடிஎஃப் வாசன் போட்ட பக்கா ஸ்கெட்ச்... தரமான சம்பவம் வெயிட்டிங்..!

Bigg Boss : மைனிங் மாஃபியாஸ் டீமின் கொட்டத்தை அடக்க டிடிஎஃப் வாசன் போட்ட பக்கா ஸ்கெட்ச்... தரமான சம்பவம் வெயிட்டிங்..!

Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெறும் டாஸ்க்கில் டிடிஎஃப் வாசன் ஒரு பக்கா பிளான் போட்டுள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 27 2026, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிக் பாஸ் தமிழ் சீசன் 10
Image Credit : jiohotstar

பிக் பாஸ் தமிழ் சீசன் 10

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி, நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 51 நாட்களைக் கடந்து 8வது வாரத்தில் விறுவிறுப்பாகப் பயணித்து வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராகக் களமிறங்கியிருந்தார். அவரது வித்தியாசமான தொகுப்பு முறை ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
புதிய டாஸ்க்!
Image Credit : jiohotstar

புதிய டாஸ்க்!

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ரெட் மற்றும் ப்ளூ என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ப்ளூ டீம் வெற்றியைத் தட்டிச் சென்ற நிலையில், ரெட் டீம் தோல்வியைச் சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து 8வது வாரத்திலும் போட்டியாளர்களுக்கு புதிய சவாலை பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த வாரம் 'குவிக் கன் கெளபாய்ஸ் Vs மைனிங் மாஃபியாஸ்' என்ற பெயரில் வித்தியாசமான டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

35
பிக் பாஸ் வீட்டு கிச்சனுக்கு வந்த ஆபத்து!
Image Credit : jiohotstar

பிக் பாஸ் வீட்டு கிச்சனுக்கு வந்த ஆபத்து!

இந்த வார டாஸ்க்கில் போட்டியாளர்கள் குவிக் கன் கௌபாய்ஸ் மற்றும் மைனிங் மாஃபியாஸ் என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் குவிக் கன் கௌபாய்ஸ் அணியினர் கொள்ளையர்களாகச் செயல்பட உள்ளனர். இவர்கள் டாஸ்க்கில் வெற்றிபெறும் பட்சத்தில், பிக் பாஸ் வீட்டின் கிச்சனுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களைக் கொள்ளையடிப்பதுடன், அவற்றைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் அதிகாரத்தையும் பெறுவார்கள்.

மறுபுறம், மைனிங் மாஃபியாஸ் அணியினர் வீட்டின் உழைப்பாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போட்டியில் வெற்றிபெற்றால், கௌபாய்ஸ் அணியின் கொள்ளை முயற்சியை முறியடித்து கிச்சனைப் பாதுகாக்க முடியும். இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் சமையலறையை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

45
டிடிஎஃப் போட்ட ஸ்கெட்ச்
Image Credit : jiohotstar

டிடிஎஃப் போட்ட ஸ்கெட்ச்

இந்த டாஸ்கில் டிடிஎஃப் வாசனின் குவிக் கன் கௌபாய்ஸ் அணியினர் ஒன்றாக அமர்ந்து பிளான் போடுகிறார்கள். அதில் பேசிய டிடிஎஃப், நாம் நம்முடைய காயினை அவர்களுக்கு தெரியும்படியே ஒளித்துவைத்து நமக்கு தேவையான சாப்பாடு எல்லாத்தையுமே வரவைத்துவிடலாம். அவங்களை வெறுப்பேத்தி, அந்த டீமையே சிதைத்துவிடுவோம் என கூறுகிறார். இதன்பின்னர் கெளபாய்ஸ் டீமை சேர்ந்த வீராவாக உள்ள டிடிஎஃப் வாசனின் காயினை ஒளித்து வைக்கிறார்கள். அதை வினோத் பாபு கண்டுபிடித்துவிடுகிறார். காயினோடு வினோத் பாபு வர, அவரிடம் அவன் உங்கள்கிட்ட மாட்டலடா, நீங்கதான் அவன்கிட்ட மாட்டியிருக்கீங்க என அன்சர் கிண்டலடிக்கிறார். இதனால் இன்றைய எபிசோடு அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
கிச்சனுக்காக வெடிக்குமா மோதல்?
Image Credit : jiohotstar

கிச்சனுக்காக வெடிக்குமா மோதல்?

ஏற்கெனவே கடந்த வாரம் நடைபெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், இந்த வாரம் அறிமுகமாகியுள்ள புதிய டாஸ்க் போட்டியாளர்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களைக் கைப்பற்றுவதும், அவற்றைப் பாதுகாப்பதும் இந்த டாஸ்க்கின் முக்கிய அம்சமாக இருப்பதால், இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

குவிக் கன் கௌபாய்ஸ் அணி கிச்சனை கொள்ளையடிக்குமா? அல்லது மைனிங் மாஃபியாஸ் அணி தங்களது உழைப்பால் கிச்சனைக் காப்பாற்றுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ, பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சமையலறையை மையமாக வைத்து ஒரு புதிய ஆட்டம் தொடங்கியிருக்கிறது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana Songs: ராமாயணம் படப் பாடல்களால் வெடித்த சர்ச்சை... ஏ.ஆர். ரகுமான் கொடுத்த கூல் ரிப்ளை!
Recommended image2
TTF Vasan Net Worth : யூடியூப்பில் கோடிக்கணக்கில் வருமானம்... டிடிஎஃப் வாசனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
Recommended image3
OTT Releases : பத்தா முதல் அக்கா வரை... இந்த வாரம் ஓடிடியில் புது வரவுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
Bigg Boss : நாமினேஷனில் பிக் பாஸுக்கே ஷாக் கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்... இந்த வாரம் சிக்கியது யார்... யார்?
Recommended image2
Bigg Boss Shama : எலிமினேட் ஆன ஷமாவுக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved