MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss : நாமினேஷனில் பிக் பாஸுக்கே ஷாக் கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்... இந்த வாரம் சிக்கியது யார்... யார்?

Bigg Boss : நாமினேஷனில் பிக் பாஸுக்கே ஷாக் கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்... இந்த வாரம் சிக்கியது யார்... யார்?

Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் செம ட்விஸ்ட் நடந்துள்ளது. அது யார்... யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 26 2026, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Nominations
Image Credit : jiohotstar

Bigg Boss Nominations

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது ஏழு வாரங்களைக் கடந்து எட்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்ற டேக் லைனுக்கு ஏற்றவாறு, நேற்றைய எபிசோடில் அரங்கேறிய சம்பவம் போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஃப்ரீ பாஸ் இருந்தும் வந்த சிக்கல்!
Image Credit : jiohotstar

ஃப்ரீ பாஸ் இருந்தும் வந்த சிக்கல்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று ஏழாவது வாரத்திற்கான எவிக்‌ஷன் நடைபெற்றது. இந்த வாரம் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் வைத்திருந்த மூன்று போட்டியாளர்களில் ஜேசன் மற்றும் வாசன் ஆகியோர் ஏற்கெனவே காப்பாற்றப்பட்டிருந்தனர். ஆனால், மற்றொரு பாஸ் வைத்திருந்த ஷாமா மட்டும் டேஞ்சர் சோனில் சிக்கியிருந்தார். அவருடன் மேலும் நான்கு போட்டியாளர்களும் வெளியேற்றப்படும் அபாயத்தில் இருந்தனர்.

இந்தச் சூழலில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன், ஷாமாவிடம் அவருடைய எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை பயன்படுத்த விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பினார். தன்னுடைய ரசிகர்களின் வாக்குகள் தன்னைக் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையிலோ என்னவோ, தற்போது அந்த பாஸை பயன்படுத்தப் போவதில்லை என்று ஷாமா தெரிவித்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த பிக்பாஸ் வீட்டையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

35
ஷாமாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Image Credit : jiohotstar

ஷாமாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளராக ஷாமா அறிவிக்கப்பட்டார். இதனால் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் கையில் இருந்தும் அதைப் பயன்படுத்தாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். கடைசி நேரத்தில் பாஸை பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டும் அதை நிராகரித்த ஷாமாவின் முடிவு அவருக்கே பாதகமாக அமைந்தது. அவர் வெளியேற்றப்பட்டதை அறிந்ததும் சக போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதுகாப்பாக அடுத்த வாரத்திற்குச் செல்ல கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட ஷாமாவின் எவிக்‌ஷன், இந்த சீசனில் எதிர்பாராத திருப்பங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

45
50-வது நாள் புரோமோவில் அடுத்த ட்விஸ்ட்!
Image Credit : jiohotstar

50-வது நாள் புரோமோவில் அடுத்த ட்விஸ்ட்!

ஷாமாவின் வெளியேற்றம் குறித்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 50-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் எட்டாவது வாரத்திற்கான நாமினேஷன் வழக்கத்திற்கு மாறாக ஓபன் நாமினேஷன் முறையில் நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதனால் போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் நபர்களை மற்றவர்கள் முன்னிலையிலேயே வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதில் மற்றொரு பெரிய திருப்பமாக, தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 15 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

55
அடுத்த வாரம் வெளியேறப்போவது யார்?
Image Credit : jiohotstar

அடுத்த வாரம் வெளியேறப்போவது யார்?

வீட்டில் உள்ள அனைவருமே நாமினேஷனில் சிக்கியிருப்பதால் இந்த வார எவிக்‌ஷன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓபன் நாமினேஷன் காரணமாக போட்டியாளர்களிடையே புதிய மோதல்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் கூட்டணி மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த வாரம் ஃப்ரீ பாஸ் இருந்தும் ஷாமா வெளியேறிய நிலையில், இந்த வாரம் யாருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும், யார் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்கள் என்பது வார இறுதி எபிசோடில் தெரியவரும். மொத்தத்தில், எட்டாவது வாரத்தின் தொடக்கமே அதிரடியாக அமைந்திருப்பதால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Shama : எலிமினேட் ஆன ஷமாவுக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் ஹோஸ்ட் திடீரென மாற்றம்... விஜய் சேதுபதிக்கு பதில் இவரா?
Recommended image3
Bigg Boss : ரெட் டீமில் இருந்துகொண்டே ப்ளூ டீமுக்கு சப்போர்ட்.. ஜேசனின் டபுள் கேமால் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த பஞ்சாயத்து!
Related Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் ஹோஸ்ட் திடீரென மாற்றம்... விஜய் சேதுபதிக்கு பதில் இவரா?
Recommended image2
Bigg Boss Shama : எலிமினேட் ஆன ஷமாவுக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved