MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்

Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்

Cowboys vs Mining Mafia : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கெள பாய்ஸ் மற்றும் மைனிங் மாஃபியா இடையேயான மோதலில் யார் வென்றார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 29 2026, 01:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிக் பாஸ் தமிழ் சீசன் 10
Image Credit : jiohotstar

பிக் பாஸ் தமிழ் சீசன் 10

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிய டாஸ்குகள், போட்டியாளர்களுக்கு இடையிலான மோதல்கள் என விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. முந்தைய சீசன்களில் இடம்பெறாத வகையிலான பல சவால்கள் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தற்போது ஏழு வாரங்களைக் கடந்து எட்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நிகழ்ச்சியில், 15 போட்டியாளர்கள் வீட்டிற்குள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். போட்டி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்வதால், ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் போட்டியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வெற்றிக்கு போராடும் மைனிங் மாஃபியாஸ்
Image Credit : jiohotstar

வெற்றிக்கு போராடும் மைனிங் மாஃபியாஸ்

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்களிடம் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் இருக்கும் நிலையில், மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால், இந்த வார எவிக்‌ஷனில் இருந்து தப்பிக்க போட்டியாளர்கள் தங்களது ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த வார டாஸ்குகளில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் கௌ பாய்ஸ் அணி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று முன்னிலையில் இருக்கிறது, மைனிங் மாஃபியா அணி வெற்றிக்காகப் போராடி வருகிறது நிகழ்ச்சியில் காட்டப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த டாஸ்குகளில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

35
டாஸ்குகளில் கெத்து காட்டிய கெள பாய்ஸ்
Image Credit : jiohotstar

டாஸ்குகளில் கெத்து காட்டிய கெள பாய்ஸ்

இந்த நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 53-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ‘சிந்தாமல்’ என்ற புதிய டாஸ்க் இடம்பெற்றுள்ளது. இந்தச் சவாலில் இரு அணிகளும் தங்களது திறமையை வெளிப்படுத்தத் தயாராகி வருகின்றனர். இந்த டாஸ்கிலும் கெள பாய்ஸ் டீம் தான் வெற்றி பெறுவது போல் தெரிகிறது. இதையடுத்து வாயில் ஸ்ட்ரா வைத்து பந்தை எடுத்து சென்று எதிரே உள்ளே கிளாசில் போடும் டாஸ்க்கும் நடைபெற்றிருக்கிறது. அந்த டாஸ்க்கிலும் மைனிங் மாஃபியாவை கதறவிட்டு வெற்றிபெற்றுள்ளனர் கெள பாய்ஸ்.

45
தன்யா - ஜேசன் மோதல்
Image Credit : jiohotstar

தன்யா - ஜேசன் மோதல்

இப்படி தொடர்ச்சியாக டாஸ்க்குகளில் தோல்வியடைந்த மைனிங் மாஃபியா அணியினர் டைனிங் டேபிளில் வைத்து டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். அப்போது தன்யா மற்றும் ஜேசன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தன்யா எல்லா டாஸ்கிலும் விளையாட விரும்புவதாக ஜேசன் சொல்ல, அதைக்கேட்டு டென்சன் ஆன தன்யா கோபத்தில் கத்துகிறார். அப்போது ஜேசன் குறுக்கிட்டு நீ இதுமட்டும் தான் பண்ணுவ என மட்டம் தட்டி பேசுகிறார். அதனால் கடுப்பான தன்யா, இப்படி சொன்னா நான் அசிங்கமா பேசுவேன் என சொல்கிறார்.

55
செருப்பை காட்டிய தன்யா
Image Credit : jiohotstar

செருப்பை காட்டிய தன்யா

ஒரு கட்டத்தில் வார்த்தை மோதல் முற்றி, நீ அசிங்கமா பேசி பாரு என ஜேசன் சொன்னதும், தன்னுடைய காலில் இருக்கு செருப்பை கழட்டி, நீ இதுக்கு கூட சமமில்லை என சொல்கிறார். அதற்கு ஜேசன், நீயும் அதுவும் ஒன்னு என பதிலடி கொடுக்கிறார். இதனால் இன்றைய எபிசோடில் தன்யா - ஜேசன் மோதல் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே வெற்றிப் பாதையில் இருக்கும் கௌ பாய்ஸ் அணி தனது ஆதிக்கத்தைத் தொடருமா? அல்லது இதுவரை வெற்றியைப் பெறப் போராடி வரும் மைனிங் மாஃபியா அணி இந்த முறை வெற்றிக் கணக்கைத் தொடங்குமா? என்பதற்கான விடை இன்றைய எபிசோடில் தெரியவரும். இதனால் 53-வது நாள் டாஸ்க் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Recommended image3
TTF Vasan Net Worth : யூடியூப்பில் கோடிக்கணக்கில் வருமானம்... டிடிஎஃப் வாசனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
Related Stories
Recommended image1
Bigg Boss : மைனிங் மாஃபியாஸ் டீமின் கொட்டத்தை அடக்க டிடிஎஃப் வாசன் போட்ட பக்கா ஸ்கெட்ச்... தரமான சம்பவம் வெயிட்டிங்..!
Recommended image2
Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved