- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Bigg Boss Nomination: ஊரோடு ஒத்துபோகனும்..சத்தம் மட்டும்தான் இருக்கு - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!
Bigg Boss Nomination: ஊரோடு ஒத்துபோகனும்..சத்தம் மட்டும்தான் இருக்கு - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!
Bigg Boss Nomination: பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் பரபரப்பாக தொடங்கியுள்ளது. இந்த வார கேப்டனாக இருக்கும் ஷாதிகா, போட்டியாளர் முனியம்மாளை நாமினேஷன் செய்துள்ளார். இவர்களுக்கு இடையேயான இந்த நாமினேஷன் உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாமினேஷன் ஸ்டாட்ர்ட்
பிக்பாஸ் வீட்டில் போட்டி தொடங்கியுள்ள நிலையில், முதல் வாரத்திலேயே நாமினேஷன் பரபரப்பு சூடுபிடித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோவில், இந்த வார கேப்டனாக இருக்கும் ஷாதிகா, போட்டியாளர் முன்னியம்மாளை நாமினேஷன் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
”ஊரோடு ஒத்துபோகனும்.. சத்தம் மட்டும்தான் பெருசா இருககு”
முனியம்மாளை நாமினேஷன் செய்த ஷாதிகா, அதற்கான காரணத்தையும் புரோமோவில் தெரிவித்துள்ளார். “அவர் ஊரோடு ஒத்துப்போக வேண்டும். பேசுவதற்கான எந்த விஷயத்தையும் அவர் செய்வதில்லை. அவருடைய வேலையையும் அவர் எந்த வகையிலும் செய்வதில்லை. சத்தம் மட்டும்தான் பெரிதாக இருக்கிறது. ஆனால் அந்த சத்தத்தால் எந்தவித பயனும் இல்லை” என ஷாதிகா தனது நாமினேஷன் காரணத்தை தெரிவித்துள்ளார்.
ஷாதிகாவின் இந்தக் கருத்து பிக்பாஸ் வீட்டில் அடுத்தகட்டமாக சலசலப்பை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
#Day2#Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10#Ottikichi#VijaySethupathi#CarniVizha#BiggBossSeason10Tamil#BiggBoss10#BiggBossSeason10#BiggBossTamilBB10#VijayTV#VijayTelevisionpic.twitter.com/m0YusejEoO— Vijay Television (@vijaytelevision) September 8, 2026
முக பாவனையுடன் பதிலடி
இதற்கு முனியம்மாள் தனது வழக்கமான பாவனையுடன் பதிலடி கொடுக்கிறார். ஷாதிகாவின் கருத்துக்கு குறுக்கிட்டு, “நான் வைத்த சாம்பார் நல்லா இருக்கு என்று சொன்னாயே!” என அவர் கூறுகிறார். முனியம்மாளின் இந்த பதில், நாமினேஷன் காட்சியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இடையிலான இந்த உரையாடல் தொடர்ந்து விவாதமாகுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நாமினேஷன்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் நாமினேஷன் சுற்று போட்டியாளர்களுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. யாரை நாமினேட் செய்வது, அதற்கான காரணம் என்ன என்பதில் போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வார நாமினேஷனும் பரபரப்புடன் தொடங்கியுள்ளது.
மேலும், இந்த வார நாமினேஷனில் அதிகமாக பெயர்கள் இடம்பெறப்போகும் போட்டியாளர்கள் யார், அவர்களுக்கு எதிராக கூறப்படும் காரணங்கள் என்ன என்பது நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பகுதிகளில் தெரியவரும்.

