- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss : சட்டசபையாக மாறிய பிக் பாஸ் வீடு... ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சியாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ் - அனல்பறக்கும் மோதல்...!
Bigg Boss : சட்டசபையாக மாறிய பிக் பாஸ் வீடு... ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சியாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ் - அனல்பறக்கும் மோதல்...!
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியாக பிரிந்து, பிக் பாஸ் வீடே சட்டசபையாக மாறி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் சட்டசபை
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் தொடங்கிய முதல் நாளே பல்வேறு ட்விஸ்டுகளை மக்களுக்கு கொடுத்தது. வழக்கமாக அறிமுக நிகழ்ச்சியில், உள்ளே வரும் போட்டியாளர்கள் எல்லாம் நேராக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் இம்முறை, மேடையில் இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்களை ஒன்றாக நிற்க வைத்து, அவர்களில் உள்ளே செல்ல தகுதியான நபர் யார் என்பதற்காக அங்கிருந்த ஆடியன்ஸ் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களில் யாருக்கு கம்மியாக வாக்கு கிடைத்துள்ளதோ அந்த நபரை தவிர்த்து மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்
இதன் காரணமாக நேற்று துவக்க நாளிலேயே 8 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் பிரபல விமர்சகரான பிரசாந்தும் ஒருவர், பிக் பாஸ் உள்ளே செல்ல அத்தனை தகுதியும் கொண்ட போட்டியாளராக பிரசாந்த் இருந்தும், அவருக்கு போட்டியாக வந்த இரண்டு புதுமுகங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது போல் காட்டி பிரசாந்தை எலிமினேட் செய்தனர். இதனால் இந்த ஸ்பாட் எலிமினேஷன் முறை பேசு பொருள் ஆகி உள்ளது. இதையடுத்து முதல் நாளில் மொத்தம் 19 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றுள்ளனர். இவர்களில் மூவர் காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து தேர்வானவர்களாவர்.
முதல் கேப்டன் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் கேப்டன் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த சீசனிலும் கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டதில், அதில் வென்று, ஷாதிகா இந்த சீசனின் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் கேப்டன் ஆன உடனே அவருக்கு செக் வைக்கும் விதமாக ஒரு புது ரூலை கொண்டு வந்துள்ளார் பிக் பாஸ். இந்த சீசனில் புதிதாக டெமாகிரசி ரூம் என ஒரு தனி அறை கொண்டுவரப்பட்டு உள்ளது. அதைப் பார்க்கும் போதே ஒரு தனி சட்டமன்றம் போல தெரிந்தது.
மினி சட்டசபை
நாம் எதிர்பார்த்தபடியே ஒரு மினி சட்டசபை தான் அது. அங்கு கேப்டன் தான் தலைவராக இருக்கிறார். அவர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு சில போட்டியாளர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். அந்த எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு தலைவராக வினோத் பாபு இருக்கிறார். அவர்களின் வேலை என்னவென்றால், கேப்டனின் செயல்பாடுகளை கண்காணிப்பது தான். கேப்டன்சியில் ஏதேனும் தவறு நடக்கிறதா, வீட்டில் ஏதேனும் முறைகேடு நடக்கிறதா, போட்டியாளர்கள் விதிகளை மீறுகிறார்களா என்பதை கண்காணிப்பதே அவர்களின் வேலை.
வினோத் பாபு தலைமையிலான எதிர்க்கட்சியில், ஷாமா, சாவின்யா, சாந்தினி, அஸ்மிதா, ஜேசன் மற்றும் ஜாவித் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். அவர்களிடம் டாஸ்கில் அவர்கள் செய்யும் தவறுகளை நாம் சுட்டிக்காட்ட வேண்டும் என கூறுகிறார் வினோத் பாபு. மறுபுறம் ஷாதிகா தன் தரப்பினருடன் லிவ்விங் ஏரியாவில் வைத்து டிஸ்கஸ் பண்ணுகிறார். இதனால் இந்த சீசன் சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.

