MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss Shama: காமன் மேன் டு பிக்பாஸ் போட்டியாளர்! யார் இந்த ஷாமா?

Bigg Boss Shama: காமன் மேன் டு பிக்பாஸ் போட்டியாளர்! யார் இந்த ஷாமா?

Bigg Boss Shama: பிக்பாஸ் தி காமன் மேன்’ நிகழ்ச்சியில் பல கட்ட சவால்களை எதிர்கொண்டு இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள ஷாமாவின் பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 07 2026, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிக்பாஸ் சென்றுள்ள ஷாமா
Image Credit : @vijaytelevision - x page

பிக்பாஸ் சென்றுள்ள ஷாமா

பிக்பாஸ் தமிழ் 10-ல் இந்த முறை பிரபலங்களுடன் சாமானியர்களுக்கும் (Common Man) நேரடியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை கடுமையான போட்டிகளைக் கடந்து பெற்ற மூன்று பேரில் ஒருவர் தான் ஷாமா. ‘தி காமன் மேன்’ நிகழ்ச்சியில் பல கட்ட சவால்களை எதிர்கொண்டு இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள ஷாமாவின் பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
‘பிக்பாஸ் – தி காமன் மேன்’
Image Credit : @vijaytelevision - x page

‘பிக்பாஸ் – தி காமன் மேன்’

பிக்பாஸ் தமிழ் 10-ல் இந்த முறை அதிரடியான மாற்றமாக ‘பிக்பாஸ் – தி காமன் மேன்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிரபலமாக இல்லாத சாமானியர்களுக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான ஆன்லைன் நேர்காணல், குழு கலந்துரையாடல், போட்டிகளும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்டங்களை கடந்து போட்டியாளர்கள் இறுதிச்சுற்றை நோக்கி முன்னேறினர்.

இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சுவாரஸ்யம், போட்டியாளர்களை மதிப்பீடு செய்த நடுவர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்களான ஓவியா, ஆரி அர்ஜுனன் மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோர் நடுவர்களாக இடம்பெற்றனர். நிகழ்ச்சியை மாயா எஸ். கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

Related Articles

Related image1
Bigg Boss promo: ஜனநாயகத்தின் ஆட்டம்! பிக்பாஸ் முதல் கேப்டன் யார்? வெளியான புரோமோ!
Related image2
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் ஆக வந்த பெங்களூரு தமிழச்சி... யார் இந்த சாவின்யா?
35
டாஸ்க்குகள் மூலம் நடந்த கடும் போட்டி!
Image Credit : @vijaytelevision - x page

டாஸ்க்குகள் மூலம் நடந்த கடும் போட்டி!

இது வெறும் ஆடிஷன் நிகழ்ச்சி கிடையாது. போட்டியாளர்களின் தன்னம்பிக்கை, பொறுமை, புத்திசாலித்தனம், உடல் மற்றும் மன வலிமை, பேசும் திறன், குழுவாக செயல்படும் திறன் உள்ளிட்ட பல விஷயங்கள் வெவ்வேறு டாஸ்க்குகள் மூலம் சோதிக்கப்பட்டன. பஸ் டாஸ்குகளில் போட்டியாளர்கள் தங்களுடைய சகிப்புத்தன்மையை நிரூபிக்க வேண்டியிருந்தது.

அதேபோல், BB School Task போன்ற வித்தியாசமான டாஸ்க்குகளும் இடம்பெற்றன. ஒவ்வொரு சுற்றிலும் சிலர் வெளியேற்றப்பட்ட நிலையில், சிறப்பாக செயல்பட்டவர்களில் ஒருவரான ஷாமா அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார்.

45
யார் இந்த ஷாமா?
Image Credit : @vijaytelevision - x page

யார் இந்த ஷாமா?

ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களுடன் போட்டியிட்டு, பல்வேறு சுற்றுகளை கடந்து இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்களில் ஒருவர்தான் ஷாமா.

‘தி காமன் மேன்’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஷாமா, டாஸ்குனு வந்துட்டா நான் விடமாட்டேன் என்று கூறியிருந்தார்.தொடர்ந்து வெளியான புரோமோவில் அவர் சாத்தான் (Devil) போன்று வேடமணிந்து பல விஷயங்களை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

55
எதற்காக பிக்பாஸ் வந்தார்?
Image Credit : @vijaytelevision - x page

எதற்காக பிக்பாஸ் வந்தார்?

எதற்காக பிக்பாஸ் வந்தீர்கள் என மாயா கேட்டதற்கு பதில் அளித்த ஷாமா, நான் senior product analyst இருக்கிறேன். எனது வாழ்க்கையை நான் செட்டில் பண்ணிட்டன். ஆனால் எனக்கென்று ஒரு அடையாளம் கூட இல்லை. நான் இப்போது ஆசிரியராக வேலை பார்க்கிறேம். அதுமட்டுமில்லாமல் நன்றாக நடனம் ஆடுவேன், NGO-ல வேலை செய்கிறேன். இப்படி பல வேலைகள் செய்வதற்கு எனக்கு பிடிக்கும்.

ஆனால், எனக்கு மிடில் கிளாஸ் டேக் இருந்தது. நான் இன்னும் எதுவும் செய்யவில்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்துட்டே இருக்கிறது என்று கூறியிருந்தார்.

‘தி காமன் மேன்’ நிகழ்ச்சியில் பல கட்ட சவால்களை எதிர்கொண்டு இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள ஷாமா அனைத்து போட்டியாளர்களையும் எதிர்கொள்வாரா? என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

V
Vishnupriya
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss promo: ஜனநாயகத்தின் ஆட்டம்! பிக்பாஸ் முதல் கேப்டன் யார்? வெளியான புரோமோ!
Recommended image2
Bigg Boss Tamil 10: விஜய் சேதுபதியை கவர்ந்த ஜாலி பேச்சு... யார் இந்த முகேஷ்?
Recommended image3
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் ஆக வந்த பெங்களூரு தமிழச்சி... யார் இந்த சாவின்யா?
Related Stories
Recommended image1
Bigg Boss promo: ஜனநாயகத்தின் ஆட்டம்! பிக்பாஸ் முதல் கேப்டன் யார்? வெளியான புரோமோ!
Recommended image2
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் ஆக வந்த பெங்களூரு தமிழச்சி... யார் இந்த சாவின்யா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved