MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss promo: ஜனநாயகத்தின் ஆட்டம்! பிக்பாஸ் முதல் கேப்டன் யார்? வெளியான புரோமோ!

Bigg Boss promo: ஜனநாயகத்தின் ஆட்டம்! பிக்பாஸ் முதல் கேப்டன் யார்? வெளியான புரோமோ!

Bigg Boss promo: பிக்பாஸ் தமிழ் 10 முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், முதல் வார கேப்டனை தேர்வு செய்யும் “ஜனநாயகத்தின் முதல் ஆட்டம்” தொடங்கியுள்ள நிலையில், வாக்குகள் மூலம் கேப்டன்சி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

2 Min read
Author : Vishnupriya
| Updated : Sep 07 2026, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிக்பாஸ் தமிழ் சீசன் 10
Image Credit : @vijaytelevision - x page

பிக்பாஸ் தமிழ் சீசன் 10

பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் பிரம்மாண்ட தொடக்கம் நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் தங்களது புதிய பயணத்தை தொடங்கியுள்ளனர்.

நேற்றைய கிராண்ட் லாஞ்சில், வழக்கமான அறிமுக முறையிலிருந்து மாறுபட்டு பல்வேறு சுவாரஸ்யமான திருப்பங்களுடன் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். குறிப்பாக, சில போட்டியாளர்களை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் புதிய முயற்சியும் இடம்பெற்றது. லட்சுமி பிரியா, ஷதிகா, ஷபி ஷப்னம் ஆகியோரில் இருவர் மட்டுமே வீட்டிற்குள் செல்லும் வகையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் லட்சுமி பிரியா மற்றும் ஷதிகா வீட்டுக்குள் நுழைந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
யார் யார் பிக்பாஸ் வீட்டுக்குள்?
Image Credit : @vijaytelevision - x page

யார் யார் பிக்பாஸ் வீட்டுக்குள்?

நேற்று உறுதி செய்யப்பட்ட 19 போட்டியாளர்களில் ‘மகாநதி’ காவேரியாக பிரபலமான லட்சுமி பிரியா, ஷதிகா, பிரித்வி, ஜாவீத் ஷெரிப், ஜேசன் கௌஷி, முனியம்மாள், ஷாமா, முத்தழகி, அஸ்மிதா, அவினாஷ் அசோக், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவின்யா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா பல்லத், முகேஷ் மற்றும் CWC முகமது அன்சார் என பல பரிச்சயமான முகங்களும் இந்த சீசனில் உள்ளனர்.

குறிப்பாக, காமன் மேன் பிரிவில் இருந்து ஷாமா, முனியம்மாள், ஜேசன் கௌஷி ஆகிய மூவரும் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

Related Articles

Related image1
Bigg Boss Tamil 10: விஜய் சேதுபதியை கவர்ந்த ஜாலி பேச்சு... யார் இந்த முகேஷ்?
Related image2
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் ஆக வந்த பெங்களூரு தமிழச்சி... யார் இந்த சாவின்யா?
35
முதல் வார கேப்டன் யார்?
Image Credit : @vijaytelevision - x page

முதல் வார கேப்டன் யார்?

இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு வெளியாகியுள்ள பிக்பாஸின் முதல் புரோமோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்வதற்கான ஆட்டம் தொடங்கியுள்ளது. அதனால், இந்த சீசனின் முதல் கேப்டன் யார்? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. கேப்டன் பதவி கிடைத்தால் அந்த வாரத்தில் வீட்டில் ஒரு முக்கியமான அதிகாரமும், சக போட்டியாளர்களுடன் முடிவெடுக்கும் சூழலும் உருவாகும். இதனால் யார் கேப்டனாக வரப்போகிறார்கள் என்பதிலும், போட்டியாளர்கள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதிலும் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.

45
ஜனநாயகத்தின் முதல் ஆட்டம்!
Image Credit : @vijaytelevision - x page

ஜனநாயகத்தின் முதல் ஆட்டம்!

முதல் வாரமே “ஜனநாயகத்தின் முதல் ஆட்டம்” என்ற பெயரில் கேப்டன்சி போட்டி தொடங்கியிருப்பதால், போட்டியாளர்களுக்குள் கூட்டணி, ஆதரவு, எதிர்ப்பு ஆகியவை உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நேற்று தான் வீட்டுக்குள் சென்றவர்கள், இன்று அதிகாரத்துக்காக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதில் பேசிய ஷதிகா, “மன்னர் ஆட்சி மாதிரி இல்லாமல் அனைவரும் சேர்ந்து ஒரு செயலை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய வினோத் பாபு, “ஜனநாயகத்தை பொறுத்தவரை எதிர் அணியின் கருத்துகளும் கேட்கப்பட வேண்டும்” என்று தன் கருத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வாக்குகள் மூலம் கேப்டன்சி போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

#Day1#Promo1 of #BiggBossTamil 

Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10#Ottikichi#VijaySethupathi#CarniVizha#BiggBossSeason10Tamil#BiggBoss10#BiggBossSeason10#BiggBossTamilBB10#VijayTV#VijayTelevisionpic.twitter.com/evB173imWk

— Vijay Television (@vijaytelevision) September 7, 2026

55
வாக்கெடுப்பு
Image Credit : @vijaytelevision - x page

வாக்கெடுப்பு

ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு தோன்றும் நபரை ஓட்டு போட்டு முதல் வார கேப்டனை தேர்வு செய்கின்றனர். அதனால், பிக்பாஸ் தமிழ் 10-ன் முதல் வார கேப்டன் யார்? யாருடைய ஆதிக்கம் முதல் வாரத்திலேயே தொடங்கப் போகிறது? என்பதை இன்றைய எபிசோடில் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

About the Author

V
Vishnupriya
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Tamil 10: விஜய் சேதுபதியை கவர்ந்த ஜாலி பேச்சு... யார் இந்த முகேஷ்?
Recommended image2
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் ஆக வந்த பெங்களூரு தமிழச்சி... யார் இந்த சாவின்யா?
Recommended image3
Bigg Boss Tamil 10 : தூத்துக்குடியில் இருந்து காமன்மேன் ஆக களமிறங்கிய தங்கமகன்... யார் இந்த ஜேசன்?
Related Stories
Recommended image1
Bigg Boss Tamil 10: விஜய் சேதுபதியை கவர்ந்த ஜாலி பேச்சு... யார் இந்த முகேஷ்?
Recommended image2
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் ஆக வந்த பெங்களூரு தமிழச்சி... யார் இந்த சாவின்யா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved