- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Bigg Boss 2 promo: ‘டெமோகிரசி ரூம்’ ஓபன்! பிக்பாஸ் வீட்டில் இரு அணிகள் மோதல் ஆரம்பம்!
Bigg Boss 2 promo: ‘டெமோகிரசி ரூம்’ ஓபன்! பிக்பாஸ் வீட்டில் இரு அணிகள் மோதல் ஆரம்பம்!
Bigg Boss 2 promo: பிக்பாஸ் வீட்டில் ‘டெமோகிரசி ரூம்’ அறிமுகமாகியுள்ள நிலையில் போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து மோதும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்டம் சூடுபிடித்துள்ளதால், அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘டெமோகிரசி ரூம்’ ஓபன்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் முதல் நாள் பரபரப்பு இன்னும் முடியாத நிலையில், அடுத்தடுத்த புரோமோக்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ‘டெமோகிரசி ரூம்’ (Democracy Room) என்ற பெயரில் தொடங்கும் புதிய ப்ரோமோ, இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு ஆரம்பத்திலேயே ஜனநாயக முறையில் முடிவெடுக்கும் சூழல் உருவாக்கப்படுவதைக் காட்டுகிறது.
கேப்டன்சி தேர்வு
வீட்டில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் போட்டியாளகளுக்கு இடையில் வாக்குகளுக்கு தொடங்கியுள்ளது. ஏற்கனவே முதல் கேப்டனை தேர்வு செய்யும் பணியும் ஜனநாயக முறையில் தொடங்கியுள்ளது. முதல் வார கேப்டன்சி போட்டியாளர்களை தேர்வு செய்வதற்காக, போட்டியாளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
‘டெமோகிரசி ரூம்’ வெறும் அறையா?
இதனால் ‘டெமோகிரசி ரூம்’ என்பது வெறும் ஒரு அறையா? அல்லது போட்டியாளர்களின் அதிகாரம், வாக்கு, முடிவெடுக்கும் திறனை சோதிக்கும் முக்கிய இடமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கேப்டன்சி போட்டி தொடங்கியுள்ள நிலையில், இந்த புதிய ரூம் மூலமாக யார், யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள்? யார் எதிரணியில் நிற்கிறார்கள், போட்டியாளர்களுக்குள் கூட்டணி உருவாகிறதா? என்பதும் தெரியவரும். இதனால் பிக்பாஸ் வீட்டு அரசியல் முதல் வாரத்திலேயே சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Day1#Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10#Ottikichi#VijaySethupathi#CarniVizha#BiggBossSeason10Tamil#BiggBoss10#BiggBossSeason10#BiggBossTamilBB10#VijayTV#VijayTelevisionpic.twitter.com/1lxSs5vPSG— Vijay Television (@vijaytelevision) September 7, 2026
பிக்பாஸ் வீட்டு அரசியல் ஆரம்பம்
‘டெமோகிரசி ரூம்’ மூலம் போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து மோதும் சூழல் உருவாகியுள்ளது. ஆரம்பத்திலேயே போட்டி, வாக்கு மற்றும் முடிவெடுக்கும் ஆட்டம் சூடுபிடித்துள்ளதால், பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘டெமோகிரசி ரூம்’ மூலம் யாருடைய குரல் ஓங்கி ஒலிக்கப் போகிறது? யார் முதல் வாரத்திலேயே ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள்? என்பதற்கான விடை அடுத்த எபிசோடில் தெரியவரும்.

