MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி

Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி

Wild Card entry: பிக்பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிய போட்டியாளராக ஆனந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இதுதொடர்பான புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2 Min read
Author : Asianet News
| Updated : Sep 14 2026, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
புதிய போட்டியாளராக ஆனந்தி என்ட்ரி
Image Credit : @vijaytelevision - x page

புதிய போட்டியாளராக ஆனந்தி என்ட்ரி

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கிய முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், கேப்டன்சி விவகாரம், நாமினேஷன் என பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையே தற்போது வெளியாகியுள்ள இன்றைய புரோமோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக ஆனந்தி என்ட்ரி கொடுப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிக்பாஸ் வீட்டின் கதவு திறக்கப்பட்டதும் ஆனந்தி உள்ளே வருகிறார். அவரை பார்த்ததும் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். இதைத்தொடர்ந்து, வீட்டிற்குள் வரும் ஆனந்தி, அங்குள்ள சூழல் மற்றும் போட்டியாளர்கள் குறித்து தனது பார்வையை வெளிப்படையாக கூறுகிறார். வீட்டிற்குள் வந்தவுடன் அவர் பேசும் விதம், ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஓவர்லேப் பன்றீங்க
Image Credit : @vijaytelevision - x page

ஓவர்லேப் பன்றீங்க

போட்டியாளர்களுடன் பேசும் ஆனந்தி, “ஓவர்லேப் பன்றீங்க” என்ற கருத்தை முன்வைக்கிறார். ஆனந்தியின் இந்த கருத்துக்கு லட்சுமி பிரியா, “முடிந்தால் மேல பேசி உன் வாய்ஸை கேட்க வை”, வேற எப்படி பேசுவது என்று காட்டமாக பேசுகிறார்.

புதிய போட்டியாளராக வீட்டிற்குள் வந்த சில நேரத்திலேயே ஆனந்தி மற்றும் லட்சுமி பிரியா இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து மோதல், பிக்பாஸ் வீட்டில் புதிய பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வீட்டில் கேப்டன்சி, நாமினேஷன் உள்ளிட்ட விவகாரங்களால் போட்டியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், தற்போது “ஓவர்லேப்” என்ற ஒரு விஷயம் புதிய விவாதமாக மாறியுள்ளது.

குறிப்பாக முதல் வாரத்தில் கேப்டன்சி தொடர்பாக ஷாதிகா உள்ளிட்ட போட்டியாளர்களிடையே விவாதங்கள் ஏற்பட்டிருந்தன. வார இறுதி நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களின் தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

#Day8#Promo1 of #BiggBossTamil 

Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10#Ottikichi#VijaySethupathi#CarniVizha#BiggBossSeason10Tamil#BiggBoss10#BiggBossSeason10#BiggBossTamilBB10#VijayTV#VijayTelevisionpic.twitter.com/oNuQRuOnlQ

— Vijay Television (@vijaytelevision) September 14, 2026

Related Articles

Related image1
Bigg Boss 10 : எஸ்கேப் ஆன முனியம்மா... எலிமினேட் ஆனது யார்? பிக் பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு எவிக்‌ஷனா..!
Related image2
Bigg Boss promo: புளியோதரைக்கு இப்படி ஒரு ரியாக்ஷன்..18 பேரும் வெளியே போங்க -பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சர்ச்சை
33
பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய பஞ்சாயத்து
Image Credit : @vijaytelevision - x page

பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய பஞ்சாயத்து

ஏற்கனவே முதல் வாரத்திலேயே வீட்டிற்குள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், புதிய போட்டியாளரின் வருகை ஆட்டத்தின் போக்கையே மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே குழுக்களாகவும் தனித்தனியாகவும் செயல்பட்டு வரும் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஆனந்தியின் வருகை புதிய கூட்டணி மற்றும் கருத்து மோதல்களுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆனந்தியின் என்ட்ரி, ஏற்கனவே உருவாகியுள்ள குழு கணக்குகளை மாற்றக்கூடியதாக இருக்குமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவர் யாருடன் நெருக்கமாக இருப்பார்? யாருடைய கருத்துக்கு எதிராக பேசுவார்? ஏற்கனவே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் அவரது முதல் உரையாடல் எப்படி அமையும்? என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

புதிய போட்டியாளர் வந்த முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் வெடித்த இந்த பஞ்சாயத்து, இன்றைய எபிசோடில் மேலும் சூடுபிடிக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

AN
Asianet News
Asianet News is a trusted name in Indian journalism, known for delivering accurate, timely, and impactful news. With decades of experience, we excel in covering regional, national, and international stories, ensuring our readers stay informed about the topics that matter most.Whether through breaking news, investigative features, or nuanced opinion pieces, Asianet News remains your reliable source for comprehensive and credible content.Stay connected with Asianet News for stories that matter
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : எஸ்கேப் ஆன முனியம்மா... எலிமினேட் ஆனது யார்? பிக் பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு எவிக்‌ஷனா..!
Recommended image2
Zee Tamil : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புத்தம் புது படங்கள்; ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னென்ன?
Recommended image3
Bigg Boss promo: புளியோதரைக்கு இப்படி ஒரு ரியாக்ஷன்..18 பேரும் வெளியே போங்க -பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சர்ச்சை
Related Stories
Recommended image1
Bigg Boss 10 : எஸ்கேப் ஆன முனியம்மா... எலிமினேட் ஆனது யார்? பிக் பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு எவிக்‌ஷனா..!
Recommended image2
Bigg Boss promo: புளியோதரைக்கு இப்படி ஒரு ரியாக்ஷன்..18 பேரும் வெளியே போங்க -பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சர்ச்சை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved