MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Varshini Venkat : பிக் பாஸ் நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்... புழல் சிறையில் அடைக்கப்பட்டதன் ஷாக்கிங் பின்னணி

Varshini Venkat : பிக் பாஸ் நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்... புழல் சிறையில் அடைக்கப்பட்டதன் ஷாக்கிங் பின்னணி

Bigg Boss Varshini Venkat Arrested : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகை வர்ஷினி வெங்கட் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 23 2026, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Varshini Venkat Arrested
Image Credit : instagram

Bigg Boss Varshini Venkat Arrested

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான வர்ஷினி வெங்கட், இளைஞர் ஒருவரை மிரட்டி பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கிண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வர்ஷினி உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
புகாரின் பின்னணி என்ன?
Image Credit : instagram

புகாரின் பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த 26 வயதான தருண் என்பவருக்கு குறும்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக வர்ஷினி வெங்கட் கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த குறும்படத்தை தயாரிக்க முதலீடு செய்யுமாறும் அவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய தருண், வர்ஷினியிடம் ரூ.5 லட்சம் வரை பணம் வழங்கியுள்ளார்.

ஆனால், பணம் பெற்ற பிறகும் குறும்படம் தயாராகாததால், தான் கொடுத்த தொகையை திரும்ப வழங்குமாறு தருண் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கிண்டி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு வர்ஷினி அழைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டல் அறையில் குறும்படம் தொடர்பாக இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, வர்ஷினியுடன் வந்ததாகக் கூறப்படும் சிலர் தருணை மிரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது தருணிடம் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்துடன், இரண்டு விலையுயர்ந்த செல்போன்களும் பறிக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

34
பணம் கேட்டு மிரட்டல்
Image Credit : instagram

பணம் கேட்டு மிரட்டல்

இதுமட்டுமின்றி, ஏற்கனவே ரூ.5 லட்சம் பெற்றிருந்த நிலையில், மேலும் ரூ.27 லட்சம் பணத்தை தருணிடம் கேட்டு மிரட்டியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பணத்தை வழங்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக தருண் அளித்த புகாரின் பேரில் கிண்டி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், தருணிடம் இருந்து கூடுதல் பணத்தை பெறும் நோக்கில் வர்ஷினி தனது கூட்டாளிகள் சிலருடன் இணைந்து திட்டமிட்டு அவரை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வர்ஷினி வெங்கட் உள்ளிட்ட நான்கு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வர்ஷினி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவான மூவரையும் கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கிண்டி போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட வர்ஷினியிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து வர்ஷினி வெங்கட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிமன்றக் காவல் உத்தரவிடப்பட்டதை அடுத்து, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

44
பிக் பாஸ் மூலம் பிரபலமான வர்ஷினி
Image Credit : instagram

பிக் பாஸ் மூலம் பிரபலமான வர்ஷினி

வர்ஷினி வெங்கட், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கியவர். நிகழ்ச்சிக்குள் நுழைந்த சில வாரங்களிலேயே அவர் வெளியேறினார். தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தாண்டி திரைப்படங்களிலும் வர்ஷினி நடித்துள்ளார். 'லாரா', 'ஸ்ருதி', 'சொட்ட சொட்ட நனையுது' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான வர்ஷினி வெங்கட், தற்போது பணம் பறிப்பு மற்றும் மிரட்டல் தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் வர்ஷினி வெங்கட் மீதான புகார்கள் குறித்தும், தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் மூன்று பேரின் தொடர்பு குறித்தும் கிண்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து அமையும்.

Bigg Boss : “சிம்ப்ளி வேஸ்ட்”... பிக்பாஸ் வீட்டில் சாந்தினியை கதறி அழவைத்த டாஸ்க்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : “சிம்ப்ளி வேஸ்ட்”... பிக்பாஸ் வீட்டில் சாந்தினியை கதறி அழவைத்த டாஸ்க்!
Recommended image2
Bigg Boss 10 : அன்சரின் அடாவடியால் அப்செட் ஆன ஷாதிகா... சாப்பிடாமல் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
Recommended image3
Bigg Boss Eviction : பிக் பாஸ் சீசன் 10-ல் நடந்த ஷாக்கிங் எலிமினேஷன்... இந்த வாரம் எவிக்ட் ஆனது இவரா?
Related Stories
Recommended image1
Bigg Boss double eviction: ஒரே வாரத்தில் டபுள் எவிக்ஷன்..ஜாவித்தை தொடர்ந்து இன்று யார் வெளியேறுகிறார்?
Recommended image2
Bigg Boss 10 : அன்சரின் அடாவடியால் அப்செட் ஆன ஷாதிகா... சாப்பிடாமல் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved