- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss 10 : அன்சரின் அடாவடியால் அப்செட் ஆன ஷாதிகா... சாப்பிடாமல் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
Bigg Boss 10 : அன்சரின் அடாவடியால் அப்செட் ஆன ஷாதிகா... சாப்பிடாமல் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் அன்சருக்கும், ஷாதிகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி உள்ளது. அதுகுறித்த ப்ரோமோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் வெடித்த மோதல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது மூன்றாவது வாரத்தில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சீசனையும் போலவே இந்த முறையும் வாரந்தோறும் வீட்டின் தலைவரைத் தேர்வு செய்வதற்காக போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த சீசனின் முதல் வாரத்தில் சாதிகா வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இரண்டாவது வாரத்தில் ஷமா லீடராக பொறுப்பேற்றார். இந்த சீசனில் வழக்கமான முறையில் இல்லாமல், சட்டமன்ற செயல்பாடுகளைப் போன்ற ஒரு அமைப்பில் போட்டி நடைபெற்று வருகிறது.
அதன்படி லீடர் தலைமையில் ஆளும் அணியும், அதற்கு எதிராக மற்றொரு அணியும் அமைக்கப்பட்டு வீட்டின் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், முதல் இரண்டு வாரங்களில் தலைவர்களாக இருந்த சாதிகா மற்றும் ஷமாவின் செயல்பாடுகள் குறித்து சில போட்டியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக இருவரும் தங்களது தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்த சம்பவமும் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மூன்றாவது வார லீடர் யார்?
இந்நிலையில், மூன்றாவது வாரத்திற்கான வீட்டின் தலைவராக அவினாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் மீண்டும் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வீட்டில் வழக்கமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தலைமை மாற்றம் ஏற்பட்ட பிறகும் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. போட்டியாளர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
சாப்பாட்டால் சாதிகா – அன்சர் இடையே மோதல்!
மூன்றாவது வாரத்திற்கான அணிகள் பிரிக்கப்பட்டபோதே சாதிகா மற்றும் அன்சர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த பிரச்சனை மீண்டும் பூதாகரமாகியுள்ளதாக வெளியாகியுள்ள புரோமோ காட்சிகள் காட்டுகின்றன. பிக்பாஸ் வெளியிட்டுள்ள இரண்டாவது புரோமோவில், போட்டியாளர்களுக்கு உணவு பகிர்ந்து கொடுக்கும் நேரத்தில் சாதிகாவுக்கும் அன்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையிலான பேச்சு சூடுபிடித்த நிலையில், கோபமடைந்த சாதிகா “எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
லீடரின் பேச்சை மதிக்காத போட்டியாளர்கள்
இதனால் பிக்பாஸ் வீடு மீண்டும் பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே அணிகள் பிரிக்கப்பட்டதில் தொடங்கிய கருத்து வேறுபாடு, தற்போது உணவு விவகாரம் வரை சென்றிருப்பது போட்டியாளர்கள் மத்தியில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புரோமோ வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்த வார கேப்டனான அவினாஷ், வீட்டில் சண்டை வரக்கூடாது என உறுதிமொழி ஏற்ற நிலையில், அவரது பேச்சைக்கேட்காமல் அன்சர் மற்றும் ஷாதிகா மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bigg Boss : ஷமாவின் கேப்டன் பதவி பறிபோகிறதா? பிக் பாஸ் டெமாகிரசி ரூமில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்

