- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss double eviction: ஒரே வாரத்தில் டபுள் எவிக்ஷன்..ஜாவித்தை தொடர்ந்து இன்று யார் வெளியேறுகிறார்?
Bigg Boss double eviction: ஒரே வாரத்தில் டபுள் எவிக்ஷன்..ஜாவித்தை தொடர்ந்து இன்று யார் வெளியேறுகிறார்?
Bigg Boss double eviction: பிக்பாஸ் சீசன் 10-ல் இருந்து ஜாவித் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரம் மேலும் ஒரு போட்டியாளர் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய முதல் நாளில் இருந்தே இந்த சீசனில் வழக்கமான முறையில் இல்லாமல், போட்டியாளர்களைத் தேர்வு செய்வதிலேயே புதிய வாக்குப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று பேர் கொண்ட குழுக்களில் மக்கள் வாக்களித்து, தேர்வு செய்யப்பட்ட 19 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
புதிய நாமினேஷன் முறை
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முறைதான் மாறியது என்று நினைத்தால், எவிக்ஷன் முறையும் இந்த சீசனில் வித்தியாசமாக அமைந்துள்ளது. வழக்கமாக நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களுக்கு மக்கள் வாக்களித்து, குறைந்த வாக்குகளைப் பெறுபவர் வெளியேறுவார்.
ஆனால் சீசன் 10-ல் புதிய முறையாக, டாஸ்கில் மோசமாக செயல்பட்டதாக கருதப்படும் 3 போட்டியாளர்களை கேப்டன் தேர்வு செய்கிறார். அந்த மூவரில் யார் வெளியேற வேண்டும் என்பதை சக போட்டியாளர்களே வாக்களித்து முடிவு செய்கிறார்கள்.
வைல்டு கார்டு என்ட்ரி
இந்த முறையின் மூலம் முதல் வாரத்தில் சாவின்யா வெளியேற்றப்பட்டார். அதே நேரத்தில் பிளாக் பாண்டி உடல்நலக் காரணமாக ஆரம்ப நாட்களிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக மணிவண்ணன் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தார். பின்னர் ஆனந்தியும் வைல்டு கார்டாக வீட்டுக்குள் வந்தார்.
இந்த வாரம் ஜாவித் எப்படி எவிக்ட் ஆனார்?
இந்த வாரம் கேப்டன் ஷாமா, டாஸ்கில் குறைவாக செயல்பட்டதாக கூறி ஜாவித், ஜேசன் கௌஷிக், அஸ்மிதா ஆகிய மூவரை தேர்வு செய்தார். இந்த மூவரில் ஒருவரை வெளியேற்றுவதற்காக வீட்டில் இருந்த போட்டியாளர்கள் வாக்களித்தனர். அதில் அதிக வாக்குகளைப் பெற்ற ஜாவித் ஷெரிப் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
டபுள் எவிக்ஷன் இருக்கிறதா?
ஜாவித் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாரம் மேலும் ஒரு போட்டியாளர் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இரண்டாவது எவிக்ஷனில் அஷ்மிதா அல்லது அவினாஷ் ஆகிய இருவரில் ஒருவர் வெளியற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்த வார இறுதி எபிசோடில் இன்னொரு போட்டியாளர் வெளியேற்றப்படுகிறாரா என்பதே பிக்பாஸ் ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

