MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss 10 : பிக் பாஸ் சர்வைவல் டாஸ்க்கில் ட்விஸ்ட்... ரெட் டீம் முதுகில் குத்திய ஜேசன்; திடீரென ப்ளூ டீமுக்கு தாவியதால் பரபரப்பு

Bigg Boss 10 : பிக் பாஸ் சர்வைவல் டாஸ்க்கில் ட்விஸ்ட்... ரெட் டீம் முதுகில் குத்திய ஜேசன்; திடீரென ப்ளூ டீமுக்கு தாவியதால் பரபரப்பு

Jason Supports Blue Team : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெறும் சர்வைவல் டாஸ்கில், ரெட் டீமில் இருந்த் ஜேசன் திடீரென் ப்ளூ டீம் பக்கம் சாய்ந்துள்ளதால் பரபரப்பு நிலவி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 20 2026, 04:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Survival Task
Image Credit : jiohotstar

Bigg Boss Survival Task

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கியது. தற்போது 44 நாட்களைக் கடந்து ஏழாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு இடையேயான மோதல்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சர்வைவல் டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் புதிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. போட்டியாளர்கள் ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியும் தங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் வசதிகளுக்காக மற்ற அணியிடம் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கிச்சனுக்காக வெடித்த மோதல்!
Image Credit : jiohotstar

கிச்சனுக்காக வெடித்த மோதல்!

அக்டோபர் 20ஆம் தேதியான இன்று சர்வைவல் டாஸ்க்கின் முதல் நாள் நடைபெறும் நிலையில், ஆரம்பத்திலேயே ப்ளூ டீம் வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதனால் அந்த அணிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வாரத்திற்கான பட்ஜெட் டாஸ்க் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கிச்சனைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

அப்போது ரெட் அணியைச் சேர்ந்த அவினாஷ், வாரத்திற்கான பட்ஜெட்டை இரு அணிகளும் சரிபாதியாகப் பிரித்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கிறார். மேலும், ப்ளூ டீம் கிச்சனில் உள்ள கேஸ் அடுப்பை வைத்துக்கொள்ளலாம் என்றும் தனது தரப்பிலிருந்து நிபந்தனையை முன்வைக்கிறார். ரெட் அணியின் தலைவரைப் போல அவினாஷ் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நிலையில், அவரது கோரிக்கையை ஏற்க விரும்பாத ப்ளூ டீம் போட்டியாளர்கள் அங்கிருந்து எழுந்து செல்கின்றனர்.

35
அவினாஷுக்கு எதிராகத் திரும்பிய ஜேசன்!
Image Credit : jiohotstar

அவினாஷுக்கு எதிராகத் திரும்பிய ஜேசன்!

இந்த விவகாரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஜேசன் நடந்துகொண்டதுதான் ப்ரோமோவின் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. ரெட் அணியில் இருக்கும் ஜேசன், தனது அணியைச் சேர்ந்த அவினாஷுக்கு ஆதரவாகப் பேசாமல், ப்ளூ டீம் முன்வைக்கும் கோரிக்கைதான் சரியானது என்ற வகையில் கருத்து தெரிவிக்கிறார். இதனால் இரு அணிகளுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு மேலும் அதிகரிக்கிறது. ஜேசனின் பேச்சைக் கேட்ட ப்ளூ அணியைச் சேர்ந்த அன்சர், அவரை ரெட் டீமிலிருந்து வெளியேறி தங்களுடைய அணிக்கு வந்துவிடுமாறு அழைக்கிறார்.

ஏற்கெனவே கடந்த வாரம் அவினாஷுக்கும் ஜேசனுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது. அந்தப் பிரச்சினையின் தொடர்ச்சியாகத்தான் தற்போது ஜேசன் தனது அணிக்கு எதிராகப் பேசுகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜேசன் உண்மையிலேயே ப்ளூ டீமுக்கு மாறுவாரா அல்லது சர்வைவல் டாஸ்க்கில் புதிய உத்தியைப் பயன்படுத்துகிறாரா என்பது முழு எபிசோடில் தெரியவரும்.

45
எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் இருந்தும் வாசனுக்கு வந்த சிக்கல்!
Image Credit : jiohotstar

எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் இருந்தும் வாசனுக்கு வந்த சிக்கல்!

மறுபுறம், இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஃப்ரீ பாஸை டிடிஎஃப் வாசன் பெற்றுள்ளார். இருப்பினும், பிக் பாஸ் வீட்டில் அவரது செயல்பாடுகள் குறித்து சக போட்டியாளர்களிடையே அதிருப்தி இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, வாசன் வீட்டிற்குள் தனது முழுமையான பங்களிப்பை வழங்கவில்லை என்றும், போட்டியில் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை என்றும் கூறி முகேஷ் மற்றும் லட்சுமி பிரியா ஆகிய இருவரும் அவரை நாமினேட் செய்துள்ளனர். எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்திருக்கும் சூழலிலும் வாசனின் ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

55
இனி பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடுபிடிக்குமா?
Image Credit : jiohotstar

இனி பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடுபிடிக்குமா?

ஏழாவது வாரத்தின் தொடக்கத்திலேயே சர்வைவல் டாஸ்க், கிச்சன் பிரச்சினை, அணிகளுக்கிடையேயான அதிகாரப் போட்டி என அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதிலும் அவினாஷ் - ஜேசன் இடையேயான கருத்து வேறுபாடு தற்போது அணிகளுக்கிடையேயான மோதலாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.

இனி வரும் நாட்களில் போட்டியாளர்கள் தங்களுடைய அணிக்காக ஒற்றுமையாக விளையாடுவார்களா அல்லது தனிப்பட்ட பிரச்சினைகளால் அணிக்குள்ளேயே பிளவு ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மொத்தத்தில், இந்த வார சர்வைவல் டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் எலிமினேஷனில் சூப்பர் ட்விஸ்ட்... இந்த வாரம் கண்ணீரோடு வெளியேறியது யார்?
Recommended image2
Bigg Boss : வைரத்தை அபேஸ் பண்ணியது யார்? விசாரணை வளையத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் - உண்மையை கண்டுபிடிப்பாரா ஜேசன்?
Recommended image3
பிக் பாஸ் வீட்டில் அனல்பறக்கும் டாஸ்க்... டைமண்ட் பாக்ஸை திறந்த கரிஷ்மா; அவினாஷிடம் பொங்கிய ஜேசன்.. என்ன நடந்தது?
Related Stories
Recommended image1
பிக் பாஸ் வீட்டில் அனல்பறக்கும் டாஸ்க்... டைமண்ட் பாக்ஸை திறந்த கரிஷ்மா; அவினாஷிடம் பொங்கிய ஜேசன்.. என்ன நடந்தது?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் எலிமினேஷனில் சூப்பர் ட்விஸ்ட்... இந்த வாரம் கண்ணீரோடு வெளியேறியது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved