- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- பிக் பாஸ் வீட்டில் அனல்பறக்கும் டாஸ்க்... டைமண்ட் பாக்ஸை திறந்த கரிஷ்மா; அவினாஷிடம் பொங்கிய ஜேசன்.. என்ன நடந்தது?
பிக் பாஸ் வீட்டில் அனல்பறக்கும் டாஸ்க்... டைமண்ட் பாக்ஸை திறந்த கரிஷ்மா; அவினாஷிடம் பொங்கிய ஜேசன்.. என்ன நடந்தது?
Jason Clashes with Avinash : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெறும் ஹீய்ஸ்ட் டாஸ்க்கில் கரிஷ்மா பெட்டியை திறந்ததால் ஜேசன் மற்றும் அவினாஷ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இருந்து வருகிறது. தொடங்கிய முதல் நாளிலிருந்தே போட்டியாளர்களுக்கு இடையே பல்வேறு மோதல்கள், வாக்குவாதங்கள் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பிரபலங்களுடன் சாதாரண மக்களும் போட்டியாளர்களாகக் களமிறங்கியுள்ளதால், ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
மொத்தம் 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், வெளியேற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். ஐந்து வாரங்களைக் கடந்துள்ள நிலையில், நிகழ்ச்சி தற்போது ஆறாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டியும் வியூகங்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன.
இரண்டு டாஸ்குகளால் சூடுபிடிக்கும் ஆறாவது வாரம்!
வழக்கமாக ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கிய டாஸ்க் நடைபெற்று வந்த நிலையில், இந்த வாரம் போட்டியாளர்களுக்கு இரண்டு வித்தியாசமான சவால்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ‘டைமண்ட் ஹீய்ஸ்ட்’ டாஸ்க். மற்றொன்று நடனம் சார்ந்த ‘டான்ஸ் மாரத்தான்’ போட்டியாகும். டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்க்கில் வைரத்தைத் திருடுவதற்கான முயற்சியில் போட்டியாளர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுவாக இணைந்தோ செயல்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள், யாருடைய திட்டம் வெற்றிபெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், டான்ஸ் மாரத்தான் டாஸ்க்கில் இரண்டு பேர் கொண்ட ஜோடிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் நடனமாட வேண்டும். இந்த இரண்டு டாஸ்குகளும் வீட்டிற்குள் புதிய சவால்களையும் சுவாரஸ்யமான தருணங்களையும் உருவாக்கி வருகின்றன.
டைமண்ட் பாக்ஸை திறந்த கரிஷ்மா
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 38-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் புரோமோவில், கரிஷ்மா டைமண்ட் பாக்ஸை திறப்பது தொடர்பாக அவினாஷ் கேள்வி எழுப்புகிறார். கரிஷ்மா அவ்வாறு செய்வதற்கான காரணம் என்ன என்று அவினாஷ் கேட்க, அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஜேசன் தனது கருத்தை முன்வைக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்குச் சென்று இருக்க உரிமை உண்டு என்ற கருத்தில் அவர் பேசுகிறார்.
ஜேசன் - அவினாஷ் மோதல்
இதனால் அவினாஷுக்கும் ஜேசனுக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைவது புரோமோவில் தெரியவருகிறது. டைமண்ட் பாக்ஸை திறந்த விவகாரம் தற்போது வீட்டிற்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக என்ன திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. போட்டியாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் புதிய விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், கரிஷ்மா, அவினாஷ் மற்றும் ஜேசன் இடையேயான இந்த மோதல் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் மேலும் பரபரப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

