MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss : விஜய் சேதுபதி முன்பே வைல்டு கார்டு போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த ஹவுஸ்மேட்ஸ்... கரீஷ்மா, வாசனுக்கு வந்த சோதனை!

Bigg Boss : விஜய் சேதுபதி முன்பே வைல்டு கார்டு போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த ஹவுஸ்மேட்ஸ்... கரீஷ்மா, வாசனுக்கு வந்த சோதனை!

Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள டிடிஎஃப் வாசன், கரீஷ்மா ஆகியோரை சக போட்டியாளர்கள் வறுத்தெடுத்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 10 2026, 08:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிக் பாஸ் தமிழ் சீசன் 10
Image Credit : jiohotstar

பிக் பாஸ் தமிழ் சீசன் 10

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 10, தற்போது ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, இதுவரை ஒன்பது சீசன்களைக் கடந்து, தற்போது பத்தாவது சீசனில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், அக்டோபர் 10ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ள வார இறுதி புரோமோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வழக்கம்போல போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் விஜய் சேதுபதி, இந்த வாரம் வீட்டிற்குள் நடைபெற்ற போட்டிகள் மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விஜய் சேதுபதி வைத்த ட்விஸ்ட்
Image Credit : jiohotstar

விஜய் சேதுபதி வைத்த ட்விஸ்ட்

வெளியான ஒரு புரோமோவில், இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்குகளைப் பற்றி விஜய் சேதுபதி பேசுகிறார். ஒரு போட்டியாளர் தனது வியூகத்தை வகுத்ததாகவும், மற்றொருவர் போட்டியை வழிநடத்தியதாகவும், இறுதியில் வெற்றி வேறொருவருக்குக் கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தச் சூழல் எப்படி உருவானது என்பதைப் போட்டியாளர்களுடன் விவாதிக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார். இதனால், இந்த வார விளையாட்டில் யாருடைய திட்டம் பலித்தது, யார் உண்மையில் போட்டியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

34
வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு ஆப்பு
Image Credit : jiohotstar

வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு ஆப்பு

மற்றொரு புரோமோவில், புதிதாக வீட்டிற்குள் வந்த வைல்டு கார்டு போட்டியாளர்களான டிடிஎஃப் வாசன், கரீஷ்மா மற்றும் அக்ஷிதா குறித்து மற்ற போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி கருத்துகளைக் கேட்கிறார். அப்போது, சிலர் தெரிவித்த விமர்சனங்கள் விவாதத்தை மேலும் சூடாக்குகின்றன.

முதலில் பேசிய முனியம்மாள், டிடிஎஃப் வாசனைப் பார்க்கும்போது தனக்குக் குழந்தையைப் போலத் தோன்றுவதாகக் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அன்சர், கரீஷ்மாவின் பெயரில் இருக்கும் பொலிவு அவரது விளையாட்டில் தெரியவில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார். இதன் மூலம், கரீஷ்மாவின் தற்போதைய ஆட்டம் குறித்த தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில், ஜேசன் தனது கருத்தை இன்னும் வித்தியாசமான முறையில் பதிவு செய்தார். கரீஷ்மா வீட்டிற்குள் வந்த முதல் நாளில் தனக்கு எம்டி குப்பைத்தொட்டி ஒன்றைக் கொடுத்ததாகவும், அந்தப் பொருள் மீண்டும் கிடைத்தால் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்றும் அவர் கூறினார்.

அதேபோல், அக்ஷிதாவின் செயல்பாடு குறித்தும் வினோத் பாபு தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் பயன்படுத்திய ஈயம் பூசியது, பூசாதது என்ற ஒப்பீடு, அக்ஷிதாவின் ஆட்டம் இன்னும் தெளிவான நிலையை எட்டவில்லை என்பதுபோன்ற விமர்சனமாக அமைந்துள்ளது.

44
இந்த வாரம் எலிமினேஷன் இருக்குமா?
Image Credit : jiohotstar

இந்த வாரம் எலிமினேஷன் இருக்குமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தற்போது ஐந்தாவது வாரத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போட்டியாளர்களின் செயல்பாடுகள், வீட்டிற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரிகளின் தாக்கம் ஆகியவை இந்த வாரத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இருப்பினும், இந்த வாரம் எலிமினேஷன் நடைபெறாது என்றும் சில தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் வெளியாகும் வரை யார் வெளியேறுவார்கள் அல்லது எலிமினேஷன் இருக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது.

வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி முன்வைக்கும் கேள்விகளும், போட்டியாளர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிவிக்கும் கருத்துகளும் பிக் பாஸ் வீட்டில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளன.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image2
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!
Recommended image3
Bigg Boss கொடுத்த புதிய டாஸ்க்கால் வெடிக்கும் சண்டை! லட்சுமி பிரியாவை கதறவிட்ட முனியம்மாள்... செம நோஸ் கட் வாங்கிய முத்தழகி
Related Stories
Recommended image1
Bigg Boss Muthukumaran controversy: தாலி கட்டுவதாகக் கூறி ஏமாற்றினாரா? பிக் பாஸ் முத்துக்குமரன் மீது இளம்பெண் புகார்... தற்கொலை முயற்சியால் பரபரப்பு!
Recommended image2
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved