- Home
- Cinema
- Bigg Boss Muthukumaran controversy: தாலி கட்டுவதாகக் கூறி ஏமாற்றினாரா? பிக் பாஸ் முத்துக்குமரன் மீது இளம்பெண் புகார்... தற்கொலை முயற்சியால் பரபரப்பு!
Bigg Boss Muthukumaran controversy: தாலி கட்டுவதாகக் கூறி ஏமாற்றினாரா? பிக் பாஸ் முத்துக்குமரன் மீது இளம்பெண் புகார்... தற்கொலை முயற்சியால் பரபரப்பு!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மீது சமூக வலைதளப் பிரபலமான வஹிதா பேகம் என்பவர் கடுமையான ஏமாற்றுப் புகார்களை முன்வைத்து, இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் முத்துக்குமரன் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது, சமூக வலைதள பிரபலமான வஹிதா பேகம் என்ற பெண் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முத்துக்குமரனும் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
வஹிதா வெளியிட்ட வீடியோவும் குற்றச்சாட்டுகளும்!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வஹிதா வெளியிட்டு (பின்னர் நீக்கப்பட்ட) வீடியோக்களில் தெரிவித்திருப்பதாவது;
கடந்த அக்.4-ம் தேதி கத்திப்பாராவில் முத்துக்குமரனைச் சந்தித்ததாகவும், அப்போது அவர் தன்னை அன்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் (அதை ஒருவகையான ‘க்யூட் கடத்தல்’ என்றும்) வஹிதா கூறியுள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணமாகி, 5 வயதில் ஒரு மகன் இருப்பதும், தான் ஒரு காதல் முறிவில் (breakup) இருப்பதும் முத்துக்குமரனுக்கு முன்பே தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 மாதங்களாகத் தான் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தபோது முத்துக்குமரன் தன்னிடம் ஆறுதலாகப் பழகியதாகக் கூறியுள்ள அவர், சிறுவயது முதலே இந்த அன்பிற்காகத் தான் ஏங்கினேன்; அவர் பேசியே என்னை மயக்கிவிட்டார். 'உன் விருப்பம் இல்லாமல் உன்னைத் தொட மாட்டேன்', 'நாளைக்கே உனக்குத் தாலி கட்டுகிறேன்' என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி ஆயிரக்கணக்கான முத்தங்களைக் கொடுத்தார். தாலி கட்டுவதாகச் சொன்னதை நம்பி, இருவரும் உடல் ரீதியாகவும் இணைந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் அதிகாலை தன்னை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு, பின்னர் மெசேஜ் அனுப்பியதாகவும், ஆனால் அதன்பின் தொடர்ந்து உறவில் (relationship) இருக்க முடியாது எனக் கூறி கழற்றிவிட்டதாகவும், இதனால் தான் முற்றிலும் உடைந்து போய்விட்டதாகவும் வேதனை உடன் பகிர்ந்துள்ளார்.
லைவ் வீடியோவில் தற்கொலை முயற்சி!
என்னை எல்லோரும் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை; இனி நான் இந்த உலகத்தில் இருக்கப் போவதில்லை என்பதால் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிவிடுகிறேன் என்று கூறிய வஹிதா, பேசிக் கொண்டிருக்கும்போதே அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டும், மது அருந்தியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதே நேரத்தில், என்னுடைய தற்கொலைக்கு முத்துக்குமரன் காரணம் என்றும் சொல்லலாம்; அல்லது யாரோ ஒருவர் தாலி கட்டுவதாகச் சொன்னதை முட்டாள்தனமாக நம்பிய நானேதான் காரணம் என்றும் சொல்லலாம் எனக் கூறி மிகுந்த மன உளைச்சலை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து, அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளார். பின்னர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், மருத்துவமனையில் நலமாக, உயிருடன் இருக்கிறேன்; கவலைப்பட வேண்டாம் என்று சிகிச்சை பெறும் வீடியோவையும் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
முத்துக்குமரன் தரப்பு விளக்கம்
இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து முத்துக்குமரன் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், நானும் வஹிதாவும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை; அது குறித்து அவரிடமே தெளிவு (clarity) கேட்டிருக்கிறேன். அவர் ஏற்கனவே மன உளைச்சலில் (distorted/disturbed) இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வலுக்கும் விமர்சனங்கள்
முத்துக்குமரன் வஹிதாவின் முகத்தைப் பிடித்துக் கொண்டு, இந்த மூஞ்சியை எனக்குப் பிடிச்சி இருக்கு என்று பேசிய பழைய வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சோஷியல் மீடியாவில் மேடைப் பேச்சுகள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முற்போக்கு கருத்துகளைப் பேசி முன்மாதிரியாகக் காட்டிக்கொண்ட முத்துக்குமரன் மீது இப்படி ஒரு புகார் எழுந்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது. பெண்ணியம் பேசும் நபர்கள் நான்கு சுவருக்குள் இப்படித்தான் நடந்துகொள்வார்களா? என்றும், உங்களை அண்ணன் போல் நம்பினோமே, இது தான் உங்கள் நிஜ வாழ்க்கையா? என்றும் பெண்கள் உட்பட பல நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், வஹிதா குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி கேட்பவர்களை முத்துக்குமரன் பிளாக் செய்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சிலர், தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து, வஹிதாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், இந்த விவகாரம் குறித்து முத்துக்குமரனிடம் முறையான காவல்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

