- Home
- Cinema
- Anushka : சினிமாவை விட்டு விலகுகிறாரா அனுஷ்கா ஷெட்டி? ஐதராபாத்தில் உள்ள வீட்டை விற்றுவிட்டு சொந்த ஊருக்கு ஷிஃப்ட் ஆனது ஏன்?
Anushka : சினிமாவை விட்டு விலகுகிறாரா அனுஷ்கா ஷெட்டி? ஐதராபாத்தில் உள்ள வீட்டை விற்றுவிட்டு சொந்த ஊருக்கு ஷிஃப்ட் ஆனது ஏன்?
Anushka Sells her House : நடிகை அனுஷ்கா ஷெட்டி சமீப காலமாக படங்களில் அதிகம் நடிப்பதில்லை. இதற்கிடையே அவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டை விற்றுவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடம்பர வீட்டை விற்ற அனுஷ்கா ஷெட்டி!
சினிமா ரசிகர்கள் செல்லமாக 'ஸ்வீட்டி' என அழைக்கும் அனுஷ்கா ஷெட்டி பற்றிய ஒரு செய்தி தான் இப்போது திரையுலகில் ஹாட் டாபிக். ஐதராபாத்தின் மிக முக்கிய விஐபி ஏரியாவில் இருந்த தனது சொகுசு வீட்டை அவர் விற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வீட்டை அவர் விற்ற தகவல் வெளியானதும், அனுஷ்கா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துவிட்டாரா? தனது சொந்த ஊரான மங்களூரில் நிரந்தரமாக குடியேறப் போகிறாரா? என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஜூபிலி ஹில்ஸில் உள்ள வீடு விற்பனை!
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ஷெட்டி, ஐதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் இருந்த தனது வீட்டை விற்றுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அனுஷ்கா பெயரில் பதிவு செய்யப்பட்ட இந்த சொத்து இப்போது கைமாறியுள்ளது. தகவல்களின்படி, இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.12 கோடியாம்.
பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்களது தொழில் சார்ந்த முக்கிய நகரங்களில் வீடு வாங்கி செட்டில் ஆவது வழக்கம். அந்த வகையில் ஐதராபாத் தான் அனுஷ்காவின் சினிமா பயணத்திற்கு முக்கிய மையமாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அங்கிருந்த வீட்டை அவர் விற்றுவிட்டார் என்ற செய்தி இயல்பாகவே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது குறித்து அனுஷ்கா தரப்பிலோ அல்லது அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை. வீட்டை விற்றதற்கான காரணமும் வெளியாகவில்லை. அவர் ஐதராபாத்திலேயே வேறு பகுதிக்கு மாறுகிறாரா அல்லது நகரத்தை விட்டே செல்கிறாரா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் தான்.
சினிமாவில் இருந்து விலகுகிறாரா ஸ்வீட்டி?
கடந்த சில ஆண்டுகளாகவே அனுஷ்கா ஷெட்டி படங்களில் அதிகம் தலைகாட்டுவதில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் அவரை பார்க்க முடிவதில்லை. கதைகளை தேர்ந்தெடுப்பதில் எப்போதுமே மிகவும் கவனமாக இருக்கும் அவர், சமீபத்திய ஆண்டுகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே படங்களில் நடித்துள்ளார்.
2018ல் வெளியான 'பாகமதி' படத்திற்குப் பிறகு, 2020ல் 'நிசப்தம்', 2023ல் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி', மற்றும் 2025ல் 'காட்டி' ஆகிய படங்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் தேவசேனா கேரக்டரில் நடித்து நாடு முழுவதும் மிகப்பெரிய பிரபலமடைந்தார். பிரபாஸ் உடனான அவரது கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் இன்றும் கொண்டாடுகின்றனர்.
இப்போது அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதும், வீட்டை விற்ற செய்தியும் அவர் சினிமாவை விட்டு விலகுகிறாரா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. அவர் தற்போது குடும்பத்தினருடன் மங்களூரில் வசித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளன.
மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா!
இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அனுஷ்காவின் சினிமா பயணம் முழுமையாக முடிந்துவிடவில்லை. புதிய மொழியில் அவர் தடம் பதிக்க தயாராகிவிட்டார். ரோஜின் தாமஸ் இயக்கத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் 'கத்தனார் - தி வைல்ட் சோர்சரர்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அனுஷ்கா அறிமுகமாகிறார்.
இந்த ஃபேண்டஸி படத்தில் 'நீலா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தின் மீது சினிமா ரசிகர்களிடம் இப்போதே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இது தவிர, யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் மற்றொரு தெலுங்கு படத்திலும் அனுஷ்கா நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் இது குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
ஸ்வீட்டியின் அடுத்த முடிவு என்ன?
2005ல் 'சூப்பர்' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த அனுஷ்கா, அதன்பிறகு 'அருந்ததி', 'வேதம்', 'ருத்ரமாதேவி' என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் தனது திறமையை நிரூபித்தவர் இவர். இந்நிலையில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐதராபாத் வீட்டை அவர் விற்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அனுஷ்கா ஷெட்டி நிஜமாகவே சினிமாவில் இருந்து விடைபெறுகிறாரா? அல்லது இது வெறும் தனிப்பட்ட முடிவா? தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் மீண்டும் ரசிகர்கள் முன் வரப்போகும் ஸ்வீட்டி, இந்த கேள்விகளுக்கு எப்போது பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.















