- Home
- Cinema
- Trisha : என்ன கழட்டி விட்டுட்டா கல்யாணத்துக்கு போற... அரசியலில் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் திரிஷா - கொளுத்திப்போட்ட ப்ளூ சட்டை மாறன்
Trisha : என்ன கழட்டி விட்டுட்டா கல்யாணத்துக்கு போற... அரசியலில் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் திரிஷா - கொளுத்திப்போட்ட ப்ளூ சட்டை மாறன்
Blue Sattai Maran About Trisha : நடிகை திரிஷா பெயரில் நெல்லையில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதை விமர்சிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு வைரல்
நடிகை திரிஷாவின் அடுத்தடுத்த பொது நிகழ்ச்சி பங்கேற்புகள் தற்போது திரையுலகைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்யுடன் அவர் இணைந்து கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது திருநெல்வேலியில் திரிஷாவின் பெயரில் புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ள கிண்டல் கருத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக பல ஆண்டுகளாகப் பயணித்து வருபவர் நடிகை திரிஷா. பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர், தற்போதும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அரசியல் வருகை குறித்த பேச்சு!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், திரிஷாவின் பெயரும் அரசியல் தொடர்பான விவாதங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, விஜய்யுடன் அவர் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொண்டது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.
இதற்கிடையே, திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திரிஷாவை வேட்பாளராக நிறுத்தத் திட்டமிடப்படுவதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இருப்பினும், இத்தகைய தகவல்களுக்கு திரிஷா தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் திரிஷா பங்கேற்றதும், அப்போது அவர் மேற்கொண்ட ரோடு ஷோவும் இணையத்தில் கவனம் பெற்றது.
திரிஷா பெயரில் தொடங்கப்பட்ட புதிய நற்பணி இயக்கம்!
இந்தச் சூழலில்தான் திருநெல்வேலியில் 'இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை' என்ற பெயரில் புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்காக வெளியிடப்பட்டுள்ள லோகோவில் திரிஷா கைகூப்பி வணங்குவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், 'பதவிக்காக அல்ல, தமிழக மக்களின் உரிமைக்காக' என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது.
இந்த இயக்கத்தைத் தொடங்கியவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் காணப்பட்ட ஆளுமைத் திறன் திரிஷாவிடமும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்குப் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றும், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகத் திரிஷாவைப் பார்ப்பதாகவும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இதனால் திரிஷா உண்மையிலேயே அரசியலில் களமிறங்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ப்ளூ சட்டை மாறனின் கிண்டல் பதிவு!
திரிஷா பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட்ட விவகாரம் இணையத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். அதில், "என்ன கழட்டி விட்டுட்டா கல்யாணத்துக்கு போற, இனி ருத்ர தாண்டவத்தை நீ பாப்ப. நற்பணி மன்றம் நடிகை திரிஷாவுக்கு இன்று திறக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மட்டும் பங்கேற்றிருந்த நிலையில், அதனுடன் திரிஷாவின் பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ள நிகழ்வையும் தொடர்புபடுத்தி ப்ளூ சட்டை மாறன் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். அவரது கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இருப்பினும், திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ள இந்த நற்பணி இயக்கத்திற்கும் நடிகை திரிஷாவுக்கும் நேரடியாகத் தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல், அவர் அரசியலுக்கு வருவது குறித்தும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் திரிஷாவின் பெயரைச் சுற்றியுள்ள அரசியல் யூகங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.















