MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • TTF Vasan : பிக் பாஸ் வரலாற்றில் டிடிஎஃப் வாசன் படைத்த மிகப்பெரிய சாதனை...!

TTF Vasan : பிக் பாஸ் வரலாற்றில் டிடிஎஃப் வாசன் படைத்த மிகப்பெரிய சாதனை...!

Bigg Boss TTF Vasan : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்துள்ள டிடிஎஃப் வாசன் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 13 2026, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TTF Vasan New Record in Bigg Boss
Image Credit : youtube

TTF Vasan New Record in Bigg Boss

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 5 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே அதன் டைட்டில் வின்னர் யார் என்பதை ஈஸியாக கணிக்க முடியும். ஆனால் இந்த சீசனில் எந்த ஒரு போட்டியாளரும் பெரியளவில் சோபிக்காமல் இருந்ததால், டைட்டில் வின்னராக யார் வருவார்கள் என்பது யூகிக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 4ந் தேதி பிக் பாஸ் 10-ல் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்றார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த டிடிஎஃப் வாசன்
Image Credit : instagram

வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த டிடிஎஃப் வாசன்

மொத்தம் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அதில் ஒருவர் தான் டிடிஎஃப் வாசன். இன்றைய ஜென் ஸி கிட்ஸுக்கு இவரைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். யூடியூப்பில் பைக்கில் சாகசம் செய்து வீடியோ பதிவிட்டு அதன் மூலம் இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் டிடிஎஃப் வாசன். இதையடுத்து அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கி ஜெயிலுக்கும் சென்றார் வாசன். சில மாத சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வந்த வாசன், சினிமாவில் நடிக்கப்போவதாக அறிவித்து, மஞ்சள் வீரன் என்கிற படத்தில் கமிட் ஆனார்.

35
பைக்கில் மாஸ் எண்ட்ரி கொடுத்த வாசன்
Image Credit : jiohotstar

பைக்கில் மாஸ் எண்ட்ரி கொடுத்த வாசன்

அப்படம் அறிவிப்போடு நின்று போக, அதைத்தொடர்ந்து ஐபிஎல் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் வாசன். அப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் எந்த படத்தில் நடிப்பார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருந்த நேரத்தில் தான் யாரும் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார் வாசன். அவரின் எண்ட்ரியை யாருமே எதிர்பார்க்கவில்லை. உள்ளே எண்ட்ரியாகும் போதே பைக்கில் மாஸாக வீட்டுக்குள் வந்தார் வாசன்.

45
சண்டைபோட்ட வாசன்
Image Credit : jiohotstar

சண்டைபோட்ட வாசன்

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்து டிடிஎஃப் வாசனுக்கும் ஜேசனுக்கும் இடையே மோதல் முற்றத் தொடங்கியது. இது கடந்த வாரம் எல்லை மீறிப் போய் இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்க பாயும் அளவுக்கு சென்றது. மறுபுறம் வீக் எண்ட் டாஸ்கின் போது விஜய் சேதுபதியும், டிடிஎஃப் வாசனை நோஸ் கட் பண்ணும் விதமாக சில கேள்விகளை கேட்க, அதற்கெல்லாம் பிடிகொடுக்காத வாசன், அவருக்கே அல்வா கொடுத்து எஸ்கேப் ஆனார். இப்படி வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்த டிடிஎஃப், இந்த வாரம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

55
வாசன் படைத்த சாதனை என்ன?
Image Credit : X

வாசன் படைத்த சாதனை என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடக்கும். அந்த வகையில் நேற்று ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் டிடிஎஃப் வாசன் பெயரை தான் சொன்னார்கள். அதனால் இந்த வாரம் டிடிஎஃப் வாசன் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளார். அவருடன் 7 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி உள்ளனர். இதில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாக்குப் பதிவில் தான் டிடிஎஃப் வாசன் சாதனை படைத்துள்ளார். இதில் 82 ஆயிரத்திற்கும் மேல் வாக்குகளை வாங்கி இருக்கிறார் வாசன்.

அவருக்கு அடுத்த இடத்தில் ஷாதிகா உள்ளார். அவருக்கு 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. பிக் பாஸ் வரலாற்றில் இம்புட்டு வாக்குவித்தியாசம் இதுவரை எந்த ஒரு போட்டியாளருக்கும் கிடைத்ததில்லை. இதனால் டிடிஎஃப் வாசன் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று நெட்டிசன்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக டிடிஎஃப் வாசனுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள் என்பதால் தான் அவருக்கு இந்த அளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் அசைக்க முடியாத ஒரு போட்டியாளராக டிடிஎஃப் மாறி இருக்கிறார்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : பிக் பாஸில் முதல் ஓபன் நாமினேஷன்... இந்த வாரம் சிக்கியது யார்... யார்? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Bigg Boss : விஜய் சேதுபதி முன்பே வைல்டு கார்டு போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த ஹவுஸ்மேட்ஸ்... கரீஷ்மா, வாசனுக்கு வந்த சோதனை!
Recommended image3
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
TTF vasan vs Jason : அடாவடி செய்த ஜேசன்... அடிதடியில் இறங்கிய டிடிஎஃப் வாசன்! போர்களமாக மாறிய பிக் பாஸ் வீடு
Recommended image2
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved