- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Bigg Boss Tamil Wild Card Entry : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக டிடிஎஃப் வாசன் உள்ளே செல்ல உள்ளாராம். அவருடன் உள்ளே போகும் 2 பேர் யார் என்பதை பார்க்கலாம்.

Bigg Boss Tamil Wild Card Contestant Details
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 10-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் கடந்த வார இறுதியில் லீடர் எக்ஸிட் முறையில் வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அவர்கள் வீட்டிற்கு சென்றபோதே இந்த நிகழ்ச்சியின் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்
தொடர்ந்து உள்ளே சென்ற மூன்று போட்டியாளர்கள் வீட்டில் உள்ள மூன்று போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுடன் தங்களது கைகளை கட்டிக்கொண்டனர். இந்த கயிறை குளிக்கும் போது கூட கழட்ட கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைகளைக் கட்டிக் கொண்ட போட்டியாளர்களிடையே தொடர்ந்து வாரம் முழுவதும் சலசப்பு நிலவி வந்தது. அது மட்டும் இன்றி அஸ்மிதா மற்றும் சாவ்வன்யா இடையே வாரம் முழுவதும் தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி வாரத்தின் தொடக்கத்திலேயே இந்த 6 போட்டியாளர்களில் மூன்று பேர் நிச்சயமாக வெளியேறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
டபுள் எவிக்ஷன்
இதில் குமரன் முன்னதாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டியாளர்கள் நிச்சயமாக இந்த வாரம் வெளியேறுவது உறுதியானது. அதிலும் லட்சுமி பிரியா சேவ் ஆகிவிட்டதால், எஞ்சியுள்ள அஸ்மிதா, சாவின்யா, ஜாவித், தன்யா ஆகிய நான்குபேரில் இருந்து இருவர் தான் எலிமினேட் ஆக உள்ளனர். இவர்கள் இருவர் வெளியே சென்றாலும், அடுத்ததாக 3 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளனர். அவர்கள் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
வைல்டு கார்டு யார்... யார்?
அதன்படி பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் அவினாஷின் தங்கை அக்ஷிதா மற்றும் பிக் பாஸ் காமன்மேன் போட்டியாளரான கரிஷ்மா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க உள்ளார்களாம். இவர்கள் மூவரின் எண்ட்ரிக்கு பின் ஆட்டம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டிடிஎஃப் வாசன் மீது தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அதோடு அவருக்கு அதிகளவில் சம்பளம் கொடுத்து இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி உள்ளார்களாம்.
Bigg Boss : பணப்பெட்டியோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்? அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்
