MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss : பிக் பாஸில் முதல் ஓபன் நாமினேஷன்... இந்த வாரம் சிக்கியது யார்... யார்? முழு லிஸ்ட் இதோ

Bigg Boss : பிக் பாஸில் முதல் ஓபன் நாமினேஷன்... இந்த வாரம் சிக்கியது யார்... யார்? முழு லிஸ்ட் இதோ

Bigg Boss 10 Open Nomination : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்று உள்ளது. அதில் யார்... யார் சிக்கி இருக்கிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 12 2026, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss 10 Open Nomination
Image Credit : jiohotstar

Bigg Boss 10 Open Nomination

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி, நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. செப்டம்பர் 6ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது ஐந்து வாரங்களைக் கடந்து ஆறாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே எதிர்பாராத சம்பவங்கள், வித்தியாசமான டாஸ்க்குகள், போட்டியாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் எனப் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் கொடுக்கும் புதிய சவால்கள் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் உண்மையான முகங்களை வெளிக்கொண்டு வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய முதல் ஓபன் நாமினேஷன்!
Image Credit : jiohotstar

பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய முதல் ஓபன் நாமினேஷன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று நாமினேஷன். பொதுவாக, போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற்ற விரும்பும் நபர்களைத் தேர்வு செய்து அதற்கான காரணங்களை பிக் பாஸிடம் தெரிவிப்பார்கள். ஆனால், ஓபன் நாமினேஷன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் யாரை வெளியேற்ற விரும்புகிறோம் என்பதையும், அவரை ஏன் நாமினேட் செய்கிறோம் என்பதையும் சம்பந்தப்பட்ட போட்டியாளர் உட்பட அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படையாகக் கூற வேண்டும்.

இதனால் அதுவரை நண்பர்களாகப் பழகிய போட்டியாளர்களுக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் சாதாரணமாகத் தொடங்கும் நாமினேஷன், மிகப்பெரிய வாக்குவாதமாக மாறுவதும் பிக் பாஸ் வீட்டில் வழக்கமான ஒன்றுதான்.

34
இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியது யார்?
Image Credit : jiohotstar

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியது யார்?

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் ஓபன் நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது. அதில், இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெறுவதாக பிக் பாஸ் அறிவிக்கிறார். இதையடுத்து, போட்டியாளர்கள் தாங்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கும் சக போட்டியாளர்களின் பெயர்களை அனைவர் முன்னிலையிலும் தெரிவிக்கின்றனர். அதற்கான காரணங்களையும் நேரடியாகக் கூறுவதால் வீட்டிற்குள் பரபரப்பான சூழல் உருவாகிறது.

அதன்படி முதலாவதாக வந்த லட்சுமி பிரியா, வைல்டு கார்டு போட்டியாளரான கரிஷ்மாவை நாமினேட் செய்துள்ளார். அவர் கடந்த வாரம் ஷமாவின் சீக்ரெட் டீலிங் பற்றி சொன்னதால் மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது. அதனால் கரிஷ்மாவை நாமினேட் செய்துள்ளார் லட்சுமி பிரியா. இதையடுத்து ஜேசனும், வினோத்தும் ஒருவரை ஒருவர் மாறி மாறி நாமினேட் செய்துகொண்டனர். பின்னர் வந்த சாந்தினி அவினாஷை நாமினேட் செய்தார். அவர் அக்‌ஷிதாவின் எண்ட்ரிக்கு பின் ஆக்ரோஷமாக விளையாடுவதாக கூறினார்.

இதுதவிர டிடிஎஃப் வாசன், ஷமா, ஷாதிகா, அக்‌ஷிதா, ஆகியோரும் இந்த வாரம் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இதுவரை ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தவர்கள் கூட இந்த நாமினேஷனில் எதிரெதிராக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், ஆறாவது வாரத்தின் தொடக்கமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

44
நட்பு உடையுமா? புதிய கூட்டணி உருவாகுமா?
Image Credit : jiohotstar

நட்பு உடையுமா? புதிய கூட்டணி உருவாகுமா?

பிக் பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெறும்போது போட்டியாளர்களின் உண்மையான நிலைப்பாடு வெளிப்படுவதுடன், வீட்டிற்குள் இருக்கும் நட்பு வட்டாரங்களிலும் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் எந்தப் போட்டியாளர் கூறும் காரணம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தப்போகிறது? இதுவரை ஒற்றுமையாக இருந்தவர்களுக்கு இடையே விரிசல் ஏற்படுமா? போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. மேலும், இந்த நாமினேஷனுக்குப் பிறகு போட்டியாளர்களின் அணுகுமுறையிலும், வீட்டிற்குள் இருக்கும் கூட்டணிகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : விஜய் சேதுபதி முன்பே வைல்டு கார்டு போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த ஹவுஸ்மேட்ஸ்... கரீஷ்மா, வாசனுக்கு வந்த சோதனை!
Recommended image2
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image3
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!
Related Stories
Recommended image1
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image2
Bigg Boss : விஜய் சேதுபதி முன்பே வைல்டு கார்டு போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த ஹவுஸ்மேட்ஸ்... கரீஷ்மா, வாசனுக்கு வந்த சோதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved