- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss 10 : பிக் பாஸ் எலிமினேஷனில் சூப்பர் ட்விஸ்ட்... இந்த வாரம் கண்ணீரோடு வெளியேறியது யார்?
Bigg Boss 10 : பிக் பாஸ் எலிமினேஷனில் சூப்பர் ட்விஸ்ட்... இந்த வாரம் கண்ணீரோடு வெளியேறியது யார்?
Bigg Boss Tamil : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் டிடிஎஃப் வாசன், அக்ஷிதா, அவினாஷ், ஷமா, சாந்தினி, ஷாதிகா, கரீஷ்மா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். அவர்களில் யார் வெளியேறியது என்பதை பார்க்கலாம்.

Bigg Boss Tamil Season 10
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 40 நாட்களை நெருங்கியுள்ளது. போட்டியாளர்களுக்கு இடையேயான மோதல்கள், சுவாரஸ்யமான டாஸ்க்குகள், எதிர்பாராத சம்பவங்கள் என பிக் பாஸ் வீடு பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக அன்சர் பொறுப்பேற்றுள்ள நிலையில், போட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதிலும் வீட்டின் விதிமுறைகளைப் பின்பற்ற வைப்பதிலும் அவருக்குப் பல சவால்கள் இருந்தன.
டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க்!
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டைமண்ட் ஹெய்ஸ்ட் மற்றும் டான்ஸ் மாரத்தான் போன்ற டாஸ்க்குகள் நடைபெற்றன. குறிப்பாக வைரத்தைக் கொள்ளையடித்து, மற்ற போட்டியாளர்களிடம் சிக்காமல் பாதுகாக்க வேண்டிய டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டாஸ்க்கில் டிடிஎஃப் வாசன் வைரத்தைக் கைப்பற்றி, கிட்டத்தட்ட மூன்று நாளுக்கும் மேலாக மற்ற போட்டியாளர்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் மறைத்து வைத்திருந்தார். இதனால் வைரம் யாரிடம் இருக்கிறது? அதை அடுத்ததாக யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்ற பரபரப்பு போட்டியாளர்கள் மத்தியில் நிலவியது.
வைரத்திற்காக சோபாவையே சேதப்படுத்திய கரீஷ்மா!
வாசன் மறைத்து வைத்திருந்த வைரம் யாராலும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர் சக போட்டியாளர்களை பிராங்க் செய்யும் வகையில் டைமண்ட் வடிவில் உள்ள செண்ட் பாட்டிலை வைத்து கரீஷ்மா உடன் கேம் ஆடினார். இந்தச் சூழலில் டம்மி வைரத்தை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கும் முயற்சியில் கரீஷ்மா ஈடுபட்டுள்ளார். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்த சோபா ஒன்றை அவர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. டாஸ்க்கில் வெற்றி பெறுவதற்காக வீட்டில் உள்ள பொருளையே சேதப்படுத்திய சம்பவம் தற்போது புதிய பிரச்சனையாக வெடித்தது.
விசாரணையில் இறங்கிய கேப்டன் அன்சர்!
சோபா சேதமடைந்த விவகாரம் தெரியவந்ததும், அதற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த வார கேப்டன் அன்சர் இறங்கினார். இது தொடர்பான விசாரணையின் போது சோபாவைச் சேதப்படுத்தியது யார் என்பதை அறிய அன்சர் விசாரணை நடத்திய நிலையில், அந்தச் செயலைத் தான்தான் செய்ததாக கரீஷ்மா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இந்த விவகாரம் சாதாரண டாஸ்க் பிரச்சனையாக முடியாமல், போட்டியாளர்களுக்கு இடையே புதிய மோதலை உருவாக்கியது. மோதலுடன் இந்த வார டாஸ்க்குகள் முடிவுக்கு வந்தன.
வெளியேறியது யார்?
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் யாருமே எலிமினேட் செய்யப்படவில்லை. இந்த நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற வாய்ப்புள்ளதாம். அதில் மக்கள் அளித்த வாக்குகளில் கம்மியான வாக்குகளை பெற்ற போட்டியாளர் எலிமினேட் ஆக உள்ளார். அதன்படி சாந்தினி தான் கம்மியான வாக்குகளை பெற்றிருக்கிறார். அவர் கன்பார்ம் எலிமினேட் ஆக உள்ளார். சாந்தினிக்கு அடுத்தபடியாக கம்மியான வாக்குகளை வாங்கிய போட்டியாளர் என்றால் அது ஷமா தான். ஆனால் அவரிடம் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் உள்ளதால், அவர் இந்த வாரம் எலிமினேட் ஆக முடியாது. அவருக்கு அடுத்தபடியாக கம்மியான வாக்குகளை வாங்கி உள்ள போட்டியாளர்கள் என்றால் அக்ஷிதா மற்றும் அவினாஷ் தான். அவர்கள் இருவரில் ஒருவர் எலிமினேட் ஆக வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்தவர்களில், டிடிஎஃப் வாசன் தான் அதிகபட்சம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பெற்றிருந்தார். அதுமட்டுமின்றி இந்த வாரம் நடந்த டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க்கிலும் டிடிஎஃப் வாசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

