MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss : அஸ்மிதாவிடம் அடிதடியில் இறங்கிய சாவின்யா... குமரனுக்கு செம டோஸ் கொடுத்த லட்சுமி பிரியா - சூடுபிடிக்கும் பிக் பாஸ்

Bigg Boss : அஸ்மிதாவிடம் அடிதடியில் இறங்கிய சாவின்யா... குமரனுக்கு செம டோஸ் கொடுத்த லட்சுமி பிரியா - சூடுபிடிக்கும் பிக் பாஸ்

Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், கயிறு டாஸ்க்கில் தன்னுடைய கூட்டாளியான குமரனை வெளுத்துவாங்கி இருக்கிறார் லட்சுமி பிரியா. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 29 2026, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kumaran vs Lakshmi Priya
Image Credit : jiohotstar

Kumaran vs Lakshmi Priya

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் சீசன் 10 உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி இந்த சீசன் தொடங்கிய நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது வாரத்தில் சான்யா வேலு, ஜாவித் மற்றும் லக்ஷ்மி பிரியா ஆகிய மூவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், கதை இத்துடன் முடியவில்லை. புதிய டாஸ்க் ஒன்றின் காரணமாக இந்த மூவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

Bigg Boss 10 : நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஜெயிப்பவர்களுக்கு பிக் பாஸ் வைத்துள்ள மெகா ட்விஸ்ட் பற்றி தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
5 அடி கயிறுடன் வந்த போட்டியாளர்கள்
Image Credit : jiohotstar

5 அடி கயிறுடன் வந்த போட்டியாளர்கள்

மீண்டும் வீட்டிற்குள் வந்த மூவரிடமும் தலா 5 அடி நீளமுள்ள கயிறு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், லக்ஷ்மி பிரியா குமரனையும், சான்யா வேலு அஷ்மிதாவையும், ஜாவித் தன்யாவையும் கயிற்றால் கட்டியுள்ளனர். இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள ஆறு பேரில் மூன்று பேர் அடுத்த கட்டத்தில் வெளியேற வேண்டும் என்பதே இந்த டாஸ்க்கின் முக்கிய விதியாக அமைந்துள்ளது. தங்களுடன் இணைக்கப்பட்டுள்ள போட்டியாளரை டாஸ்க்கில் இருந்து வெளியேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை போட்டியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

35
குமரனை வம்பிழுத்த லக்ஷ்மி பிரியா
Image Credit : jiohotstar

குமரனை வம்பிழுத்த லக்ஷ்மி பிரியா

இதற்கிடையே, லக்ஷ்மி பிரியா மற்றும் குமரன் தொடர்பான புதிய ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்ரோமோவில் குமரனை நோக்கி லக்ஷ்மி பிரியா கடுமையாகப் பேசுவது இடம்பெற்றுள்ளது. குமரன் எந்த டாஸ்க்கிலும் முறையாக விளையாடவில்லை என்றும், தான் மட்டும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் லக்ஷ்மி பிரியா கூறுகிறார். மேலும், ஆவேசமாக சில வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியிருப்பது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

மறுபுறம், முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இருந்த குமரன், லக்ஷ்மி பிரியா கூறிய எதற்கும் பதிலடி கொடுக்காமல் அமைதியாகவே இருந்தார். அவரது முகத்திலும் பெரிய அளவில் எந்த ரியாக்ஷனும் வெளிப்படவில்லை.

45
சாவின்யா - அஸ்மிதா மோதல்
Image Credit : jiohotstar

சாவின்யா - அஸ்மிதா மோதல்

மறுபுறம் அஸ்மிதாவும், சாவின்யாவும் சண்டை போட்டுள்ளனர். சாவின்யாவை பாத்ரூமிற்கு தரதரவென இழுத்து செல்கிறார் அஸ்மிதா. அதனால் கடுப்பான சாவின்யா, அஸ்மிதாவை திட்ட, பின்னர் கடுப்பாகி, மீண்டும் அவரை தான் செல்லும் இடமெல்லாம் இழுத்துச் செல்கிறார். அப்படி டைனிங் ஏரியாவில் சாவின்யாவை இழுத்துச் சென்று, அங்கிருந்த சேரில் அஸ்மிதா அமர, பதிலுக்கு சாவின்யா, அவரை இழுக்கிறார். இதில் அஸ்மிதா கீழே விழுந்துவிடுகிறார். உடனே நான் வேண்டுமென்றே இழுக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் எழுந்திருக்கலாம், இது அவங்களோட ஸ்ட்ராட்டஜி என சொல்லி சமாளிக்கிறார் சாவின்யா. இவர்களின் மோதல் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

55
யார் வெளியேறப் போகிறார்கள்?
Image Credit : jiohotstar

யார் வெளியேறப் போகிறார்கள்?

ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்களே தற்போது மீண்டும் வீட்டிற்குள் வந்து, தங்களுடன் இணைக்கப்பட்டுள்ள போட்டியாளர்களை வெளியேற்றும் பொறுப்பில் இருக்கின்றனர். மறுபுறம், அவர்களுடன் இணைக்கப்பட்டுள்ள மூவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கில் இருக்கும் நிலையில், அவர்களில் மூன்று பேர் கட்டாயமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் அடுத்தடுத்த ப்ரோமோக்களில் என்ன மாதிரியான திருப்பங்கள் அரங்கேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Bigg Boss 10 : தந்தை மரணம்... பிக் பாஸ் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய போட்டியாளர் - ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஜெயிப்பவர்களுக்கு பிக் பாஸ் வைத்துள்ள மெகா ட்விஸ்ட் பற்றி தெரியுமா?
Recommended image2
Bigg Boss 10 : தந்தை மரணம்... பிக் பாஸ் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய போட்டியாளர் - ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்
Recommended image3
Bigg Boss Lakshmi Priya Salary : 18 நாட்களில் எலிமினேட் ஆன லட்சுமி பிரியா... பிக் பாஸ் வாரிவழங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?
Related Stories
Recommended image1
Lakshmi Priya : எலிமினேட் ஆகும் முன் அவினாஷை லெஃப்ட் ரைட் வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா... ஷாக் ஆன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
Recommended image2
Bigg Boss Lakshmi Priya Salary : 18 நாட்களில் எலிமினேட் ஆன லட்சுமி பிரியா... பிக் பாஸ் வாரிவழங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved