MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மூன்றாவது மனுஷியோட மூன்றாம் தர ட்வீட்... நான் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது - த்ரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி

மூன்றாவது மனுஷியோட மூன்றாம் தர ட்வீட்... நான் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது - த்ரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி

நடிகர் பார்த்திபன் விருது விழாவில் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் நடிகை த்ரிஷாவுக்கு பதிலடி கொடுத்து பேசி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 10 2026, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Parthiban vs Trisha
Image Credit : X, Trend Talks

Parthiban vs Trisha

நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் தனது யூடியூப் சேனல் மூலம் விரிவான விளக்கமளித்துள்ளார். குறிப்பாக நடிகை த்ரிஷா குறித்து அவர் பேசியதாக வெளியான வீடியோ ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியதையடுத்து, இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரு தனியார் நிகழ்ச்சியில் த்ரிஷாவின் புகைப்படம் திரையில் காட்டப்பட்டபோது, அதனைத் தொடர்ந்து பார்த்திபன் கூறிய கருத்துகள் இணையத்தில் வைரலானது. இதற்கு பதிலளிக்கும் வகையில் த்ரிஷாவும் தனது சமூக வலைதளப் பதிவில் மறைமுகமாக கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதாகியது.

24
பார்த்திபன் விளக்கம்
Image Credit : our own

பார்த்திபன் விளக்கம்

இதுகுறித்து தனது விளக்க வீடியோவில் பார்த்திபன் கூறியதாவது: “அந்த நிகழ்ச்சியின் இடைவேளையில், திரைப்பட விமர்சகர் அந்தணன் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பேசிய விமர்சனங்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென த்ரிஷாவின் படம் திரையில் வந்தது. அந்த தருணத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் குழப்பத்திலேயே நான் அந்தக் கருத்தை கூறிவிட்டேன். அது திட்டமிட்டு சொன்னது அல்ல,” என்று தெரிவித்தார்.

மேலும், “நிகழ்ச்சி முடிந்தவுடன் என் நண்பர் ஒருவர் இந்த விஷயம் பெரிய சர்ச்சையாக மாறக்கூடும் என்று கூறினார். உடனே அந்த நிகழ்ச்சி சேனலுக்கு தொடர்பு கொண்டு, அந்த பகுதியை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அதற்குள் ஒரு ரசிகர் அந்த வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டார்,” என்றும் அவர் கூறினார்.

Related Articles

Related image1
பார்த்திபன் இப்படி சொல்லிட்டாரே... முட்டாள்தனமான பேச்சு என திரிஷா பதிலடி
Related image2
த்ரிஷா உடன் ஜோடிபோட்டு வந்த விஜய்... கடுமையாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி
34
த்ரிஷாவுக்கு பதிலடி
Image Credit : our own

த்ரிஷாவுக்கு பதிலடி

அதனைத் தொடர்ந்து, “வீடியோ வைரலானதும் உடனே மன்னிப்பு கேட்கும் வகையில் ஒரு வீடியோ பதிவு செய்தேன். ஆனால் அதை எடிட் செய்து வெளியிடுவதற்குள் த்ரிஷா தனது பதிலை வெளியிட்டுவிட்டார்,” என்றும் விளக்கம் அளித்தார்.

விஜய் – த்ரிஷா குறித்து பார்த்திபன் பேசும்போது, “விஜய் என் நெருங்கிய நண்பர். அவருடைய விவாகரத்து விவகாரம் இன்னும் சட்டரீதியாக முடிவடையவில்லை. அதனால் அவர் இன்னும் சங்கீதாவின் கணவர்தான். இப்படியான சூழலில் மூன்றாவது நபராக நான் த்ரிஷாவைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. யாரையும் தரக்குறைவாக பேசும் மனிதன் நான் அல்ல,” என்று உறுதியாக கூறினார்.

மேலும், “த்ரிஷாவின் புகைப்படத்தை காட்டி நான் பதில் சொல்லும் வகையில் நிகழ்ச்சியில் திட்டமிட்டு சூழல் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறு. பெண்களை மதிக்கும் குணம் கொண்டவன் நான்,” என்றும் தெரிவித்தார்.

44
பார்த்திபன் ஆதங்கம்
Image Credit : our own

பார்த்திபன் ஆதங்கம்

அதே சமயம் அந்த கருத்து ஏன் வெளிப்பட்டது என்பதையும் பார்த்திபன் விளக்கினார். “நிகழ்ச்சி இடைவேளையில் சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்களைப் பார்த்தபோது, விஜய் அரசியலில் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் இத்தகைய சர்ச்சைகள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையே எனக்குள் இருந்தது. அந்த ஆதங்கத்தில்தான் அந்த வார்த்தை வந்துவிட்டது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “விஜய் அந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றதில் எனக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் த்ரிஷாவும் அவருடன் சென்றது சில ரசிகர்களிடம் எதிர்வினையை ஏற்படுத்தியதாக பேசப்பட்டது. த்ரிஷா அனுபவமுள்ளவர் என்பதால் அந்த தருணத்தில் வேறு விதமாக நடந்திருக்கலாம் என்ற கருத்தையே சிலர் வெளியிட்டனர். அதையே நான் அப்படியே வெளிப்படுத்திவிட்டேன்,” என்று தெரிவித்தார்.

இத்துடன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பார்த்திபன் விளக்கம் அளித்திருந்தாலும், அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் எனக் கூறி தனக்கு மிரட்டல் போன் கால் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அழைப்பு யார் மூலம் வந்தது என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
'குளிக்கும்போது பாதியிலயே வந்தீங்களா?' - ட்ரோல்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி நச் பதிலடி
Recommended image2
கனவு நனவானது! ஆகாயத்தில் பறக்கும் மகன் - நெகிழ்ச்சியில் எதிர்நீச்சல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
Recommended image3
100 ஏக்கர் நிலம் வேணும், சமையல் தெரியணும்! வருங்கால கணவருக்கு கோட் பட நாயகி போட்ட கண்டிஷன்ஸ்
Related Stories
Recommended image1
பார்த்திபன் இப்படி சொல்லிட்டாரே... முட்டாள்தனமான பேச்சு என திரிஷா பதிலடி
Recommended image2
த்ரிஷா உடன் ஜோடிபோட்டு வந்த விஜய்... கடுமையாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved