MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

Karthigai Deepam Serial 08 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி கனடா செல்வதற்காக ஏர்போர்ட் சென்றிருந்த நிலையில் அங்கு அவரது பாஸ்போர்ட் காணாமல் போகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 08 2026, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Karthigai Deepam Serial Today Episode
Image Credit : youtube

Karthigai Deepam Serial Today Episode

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் மற்றும் ரேவதியை சுற்றி அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்றைய எபிசோடில் கார்த்திக் எப்படியாவது ஏர்போர்ட்டை சென்றடைய வேண்டும் என்ற அவசரத்தில் பயணித்த நிலையில், இன்றைய கதைக்களம் இன்னும் விறுவிறுப்பாக நகர்கிறது. கார்த்திக்கின் பயணத்தை தடுத்து நிறுத்த எதிரிகள் திட்டம் தீட்ட, மறுபுறம் ரேவதிக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஏர்போர்ட்டில் ரேவதிக்கு ஏற்பட்ட விபரீதம்

இன்றைய எபிசோடில் ரேவதி ஏர்போர்ட்டுக்குள் செல்லும்போது, எதிரே வந்த ஒருவரின் ட்ராலி மீது எதிர்பாராதவிதமாக மோதுகிறார். இதில் அவரது காலில் காயம் ஏற்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்கின்றனர். அப்போது சிலர், பயணம் தொடங்கும் நேரத்தில் இப்படியொரு சம்பவம் நடந்தது அபசகுனம் என பேசுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி, தேவையில்லாமல் பேசாமல் அவரவர் வேலையை பார்க்கும்படி கடுமையாக கூறுகிறார்.

Karthigai Deepam : கார்த்திக் - ரேவதியை பிரிக்க சாமுண்டீஸ்வரி போடும் மாஸ்டர் பிளான்... சக்சஸ் ஆகுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
கார்த்திக்கை தடுக்க எதிரிகளின் திட்டம்
Image Credit : youtube

கார்த்திக்கை தடுக்க எதிரிகளின் திட்டம்

இதற்கிடையே, கார்த்திக் ஏர்போர்ட்டை சென்றடைந்துவிட்டால் தங்களது திட்டம் தோல்வியடையும் என்பதை உணர்ந்த சந்திரகலா, சிவனாண்டி மற்றும் முத்துவேலுக்கு தகவல் தெரிவிக்கிறார். கார்த்திக்கின் பயணத்தை தாமதப்படுத்துவதற்காக பல்வேறு தடைகளை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் எதிர்பார்த்தபடி கார்த்திக் சிக்கிக்கொள்ளாமல், தொடர்ந்து ஏர்போர்ட்டை நோக்கி முன்னேறுகிறார். இதனால் எதிரிகளின் பதற்றம் மேலும் அதிகரிக்கிறது.

மாயமான பாஸ்போர்ட்... ரேவதிக்கு ஷாக்!

ஒருபுறம் விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு வெளியாக, ரேவதி விமானத்தில் செல்ல தயாராகிறார். அந்த நேரத்தில் அவரது பாஸ்போர்ட் கையில் இல்லாதது தெரியவருகிறது. பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டதாக ரேவதி பதற்றத்துடன் கூற, சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். முக்கியமான நேரத்தில் பாஸ்போர்ட் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தவிக்கின்றனர்.

அப்போது சந்திரகலாவுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ரேவதியின் பர்ஸை எடுத்துச் சென்றபோது பாஸ்போர்ட் கீழே விழுந்திருக்கலாம் என்பதை அவர் நினைவுபடுத்திக் கொள்கிறார். இதையடுத்து பாஸ்போர்ட்டை தேடி எடுத்துவருவதாக கூறிவிட்டு அவசரமாக காரை நோக்கி செல்கிறார்.

Karthigai Deepam : ரேவதியின் கனடா பயணத்திற்கு பின்னால் அதிர்ச்சி சதி... காப்பாற்ற ஓடும் கார்த்திக்!

Related Articles

Related image1
Karthigai Deepam : ரேவதியின் கனடா பயணத்திற்கு பின்னால் அதிர்ச்சி சதி... காப்பாற்ற ஓடும் கார்த்திக்!
Related image2
Karthigai Deepam : கார்த்திக் - ரேவதியை பிரிக்க சாமுண்டீஸ்வரி போடும் மாஸ்டர் பிளான்... சக்சஸ் ஆகுமா?
33
கார்த்திக் ஏர்போர்ட்டை அடைவாரா?
Image Credit : youtube

கார்த்திக் ஏர்போர்ட்டை அடைவாரா?

பாஸ்போர்ட் சரியான நேரத்தில் கிடைக்குமா? ரேவதி விமானத்தில் செல்ல முடியுமா? கார்த்திக் ஏர்போர்ட்டை குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்றடைவாரா? அவரை தடுத்து நிறுத்த எதிரிகள் போடும் திட்டம் வெற்றி பெறுமா? இப்படி அடுத்தடுத்து எழும் கேள்விகளால் இன்றைய எபிசோட் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. கார்த்திக் மற்றும் ரேவதியின் பயணம் எந்த திருப்பத்தை சந்திக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Karthigai Deepam : கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பலிக்குமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : முத்து சொன்ன அடுக்கடுக்கான பொய்கள்... பாட்டியிடம் சிக்கி படாதபாடுபடும் விஜயா..!
Recommended image2
Karthigai Deepam : கார்த்திக் - ரேவதியை பிரிக்க சாமுண்டீஸ்வரி போடும் மாஸ்டர் பிளான்... சக்சஸ் ஆகுமா?
Recommended image3
Siragadikka Aasai : சிந்தாமணியின் சதி வலையில் சிக்கும் சத்யா... அருணுக்கு அதிர்ச்சி கொடுத்த சீதா..!
Related Stories
Recommended image1
Karthigai Deepam : ரேவதியின் கனடா பயணத்திற்கு பின்னால் அதிர்ச்சி சதி... காப்பாற்ற ஓடும் கார்த்திக்!
Recommended image2
Karthigai Deepam : கார்த்திக் - ரேவதியை பிரிக்க சாமுண்டீஸ்வரி போடும் மாஸ்டர் பிளான்... சக்சஸ் ஆகுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved