MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சிந்தாமணியின் பிளானை கேட்டு ஆடிப்போன விஜயா... மனோஜை டேமேஜ் பண்ணிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிந்தாமணியின் பிளானை கேட்டு ஆடிப்போன விஜயா... மனோஜை டேமேஜ் பண்ணிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி நீத்துவின் புது பூக்கடைக்கு பூக்கள் சப்ளை செய்வது தெரிந்த விஜயா, அவரிடம் சென்று பேசியுள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 17 2026, 08:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் நீத்து, தன்னுடைய ரெஸ்டாரண்ட் பிசினஸை விட்டுவிட்டு புதிதாக பூக்கடை ஒன்றை திறந்துள்ளது மட்டுமின்றி, அதற்கு ரவியின் பெயரையும் வைத்திருக்கிறார். அந்த நீத்துவிற்கு சிந்தாமணி தான் பூ சப்ளை செய்து வருகிறார் என்கிற உண்மையையும் மீனா கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி விஜயா அத்தையிடம் நீங்கள் சென்று பேசுங்கள் என்று ஸ்ருதியிடம் கூறி இருக்கிறார் மீனா. அவர்கள் இருவரும் விஜயாவிடம் பேச கிளம்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
விஜயாவிடம் சண்டைபோடும் ஸ்ருதி
Image Credit : jiohotstar

விஜயாவிடம் சண்டைபோடும் ஸ்ருதி

நீத்துவின் பூக்கடை விவகாரம் பற்றி விஜயாவிடம் பேசும் ஸ்ருதி, அவள் ரவி பெயரில் இந்த பூக்கடை திறந்திருப்பதாக சொல்ல, அதற்கு விஜயா, ஊரில் இவன் மட்டும் தான் ரவியா, எத்தனையோ பேரு இருக்காங்க என சொல்ல, அதற்கு பதிலடி கொடுக்கும் ஸ்ருதி, எத்தனையோ பேர் இருந்தாலும் அவ இவனை குறிப்பிட்டு தான் வச்சிருக்கா என சொல்கிறார். அதுமட்டுமின்றி உங்களுடைய ஃபிரெண்டு சிந்தாமணியிடம் பேசி, அவளுக்கு பூ சப்ளை செய்வதை நிறுத்த சொல்லுங்க என ஸ்ருதி சொல்ல, விஜயாவும் சரி நான் அவங்ககிட்ட இதுபத்தி பேசுறேன் என கூறிவிட்டு செல்கிறார்.

Related Articles

Related image1
ரவி பெயரில் நீத்து தொடங்கிய புது பிசினஸ்... முத்து - மீனா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Related image2
வாய்விட்டு மாட்டிக்கொண்ட விஜயா... ஸ்டாப் ஆன மனோஜின் 2ம் திருமணம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
35
மனோஜுக்கு ஆப்பு வைத்த ரோகிணி
Image Credit : jiohotstar

மனோஜுக்கு ஆப்பு வைத்த ரோகிணி

மறுபுறம் மனோஜ் தன்னுடைய ஷோரூமில் இருக்கும் போது, அங்கு வரும் கிரிஷ், டேடி இங்க பாருங்க நான் பர்ஸ்ட் ரேங்க் வாங்கிருக்கேன் என தன்னுடைய ரேங்க் கார்டை காட்டுகிறார். இதைக்கேட்டு கடுப்பான மனோஜ், யாருடா உனக்கு டேடி, ஒழுங்கா இங்க இருந்து வெளிய போடா என கிரிஷை தள்ளிவிடுகிறார். அதை அங்கு பொருள் வாங்க வந்த கஸ்டமர்கள் பார்த்துவிட, எல்லோரும் மனோஜை திட்டுவதோடு, இந்த கொடுமைக்காரன் கடையில் பொருள் வாங்க வேண்டாம் என கிளம்புகிறார்கள். இதையடுத்து மனோஜிடம் வந்து தன்னுடைய வில்லத்தனமான சிரிப்புடன் கிரிஷை அழைத்து செல்கிறார் ரோகிணி.

45
சிந்தாமணியிடம் பேசும் விஜயா
Image Credit : jiohotstar

சிந்தாமணியிடம் பேசும் விஜயா

ஸ்ருதியின் பேச்சைக் கேட்டு விஜயா, கோமதி வீட்டுக்கு சென்று சிந்தாமணியிடம் பேசுகிறார். நீங்க இப்படி பண்ணுவீங்கனு எதிர்பாக்கல சிந்தாமணி என விஜயா, மொட்டை கட்டையாக சொல்ல, சிந்தாமணியோ, நாம் போலி சாமியாரை அனுப்பிய விஷயம் தெரிஞ்சிருக்குமோ என ஷாக் ஆகிறார். பின்னர் தான் நீத்து பூக்கடை மேட்டரை சொல்லி நீங்க ஏன் அவளுக்கு பூ சப்ளை செய்றீங்க என கேட்கிறார். அதற்கு சிந்தாமணி, நான் ஒரு ஐடியாவோட தான் இதை செய்கிறேன் மாஸ்டர், எல்லாம் உங்க நல்லதுக்காக தான் என சொல்லி ஒரு பிட்டை தூக்கிப் போடுகிறார்.

55
சிந்தாமணியின் பிளானை சொல்லும் விஜயா
Image Credit : jiohotstar

சிந்தாமணியின் பிளானை சொல்லும் விஜயா

நீத்துவுக்கு நான் பூ சப்ளை செய்யமாட்டேன் என சொல்லிவிட்டால் அவள் வேறு ஒருவரிடம் பூ வாங்குவாள். அதுவே நான் சப்ளை செய்தால், அவள் போடும் திட்டங்கள் என்னென்ன என்பது எனக்கு தெரியவரும். இதையெல்லாம் நான் உங்க நல்லதுக்காக தான் பண்றேன் மாஸ்டர் என சொல்ல, விஜயாவும் அவர் சொன்னதை உண்மை என நம்பி, அதை வீட்டில் உள்ளவர்களிடமும் சொல்கிறார். மனோஜும் வீட்டுக்கு வந்து ரோகிணி ஷோரூமில் போட்ட டிராமாவை பற்றி சொல்லி ஃபீல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
Latest Videos
Recommended Stories
Recommended image1
தாலியை கழட்டி கொடுத்த சந்திரகலா! நிலைகுலைந்து போன சிவனாண்டி! கார்த்திகை தீபம் சீரியலில் உச்சக்கட்ட அதிர்ச்சி
Recommended image2
மாமனார் அட்வைஸ்; அப்பா போட்ட ரூல்ஸ்; ரூ.10 லட்சத்துக்கு லஞ்சமா? செந்திலின் திட்டம் என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image3
கனிகா அவுட்! எதிர்நீச்சல் 2 சீரியலில் இனி ஈஸ்வரியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
ரவி பெயரில் நீத்து தொடங்கிய புது பிசினஸ்... முத்து - மீனா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
வாய்விட்டு மாட்டிக்கொண்ட விஜயா... ஸ்டாப் ஆன மனோஜின் 2ம் திருமணம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved