- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரவி பெயரில் நீத்து தொடங்கிய புது பிசினஸ்... முத்து - மீனா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
ரவி பெயரில் நீத்து தொடங்கிய புது பிசினஸ்... முத்து - மீனா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் தன் ரெஸ்டாரண்ட் எரிந்து சாம்பலான நிலையில், தற்போது ரவி பெயரில் புது பிசினஸ் தொடங்கி இருக்கிறார் நீத்து. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்திருந்தார் விஜயா. அந்தப் பெண் வீட்டாருக்கும் மனோஜை மிகவும் பிடித்திருந்தது. இதனால் திருமணம் செய்துவைக்கலாம் என பேச்சை எடுத்தபோது, ஒரு முதியவர் விஜயாவிடம் அவரது குடும்பம் பற்றி விசாரிக்க, அவர் அந்த பெண்ணுக்கு தூரத்து சொந்தம் போல் தெரிந்தது. இறுதியாக மனோஜுக்கு பெண் தங்கச்சி முறை வருவதால், இந்த சம்மந்தம் ஒத்துவராது என சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
வேலைக்காரி அட்ராசிட்டி
இன்றைய எபிசோடில் விஜயா வீட்டில் இருக்கும் போது ஒரு பெண் விறுவிறுவென வீட்டிற்குள் வருகிறார். அவர் வந்ததும் தான் இந்த வீட்டிற்கு வேலை செய்ய ஆள் தேவைப்படுவதாக கேள்விப்பட்டேன். அதனால் தான் வந்திருக்கிறேன் என கூறுகிறார். அவர் விஜயாவுக்கு சில கண்டிஷன்களையும் போடுகிறார். தான் வாரத்தின் 5 நாட்கள் தான் வேலைக்கு வருவேன், சனி, ஞாயிறு வரமாட்டேன். இந்த வீட்டில் ஆம்பளைங்க இருப்பதால், எனக்கு பாதுகாப்புக்காக விஜயா எப்பவும் கிச்சன் வாசலிலேயே இருக்க வேண்டும். மாசம் 10 ஆயிரம் சம்பளம் வேண்டும் என கூறுகிறார். இதைக்கேட்டு ஆடிப்போன விஜயா, உனக்கு இங்க வேலை கிடையாது போ என துரத்துவிடுகிறார்.
சண்டை போடும் மீனா
வீட்டில் வேலைக்காரி வந்து கண்டிஷன் போட்ட விஷயத்தை மீனாவிடம் கூறும் முத்து, நீ சீக்கிரம் வீட்டுக்கு வர பாரு, இல்லேனா அம்மா வேலைக்காரியை போட்டுருவாங்க என சொல்ல, அதைக்கேட்டு கடுப்பான மீனா, அப்போ அந்த வீட்டுல என்னையும் நீங்க வேலைக்காரியா தான் பாக்குறீங்களா என சொல்ல, அதெல்லாம் இல்லை, உன்னோட பலமே சமையல் தான் அதனால் தான் அப்படி சொன்னேன் என முத்து சமாளிக்கிறார். இருப்பினும் மீனாவின் கோபம் குறையாத நிலையில், காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் முத்து. இதையடுத்து சமாதானம் ஆன மீனாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்புகிறார் முத்து.
ரவி கொடுத்த சர்ப்ரைஸ்
மறுபுறம் ரவி, ரெஸ்டாரண்டில் ஸ்ருதியை அழைத்து, அவருக்காக தான் தயார் செய்த ஒரு புது உணவை கொடுத்து டேஸ்ட் பண்ண சொல்கிறார். ஸ்ருதியும் டேஸ்ட் பண்ணி பார்த்துவிட்டு, சூப்பராக இருப்பதாக சொல்லி ரவியை பாராட்டுகிறார். இந்த உணவு உன்னைப்போலவே வெளியே கரடுமுரடாகவும், உள்ளே மெதுவாகவும் இருப்பதால், உன் பெயரையே இதற்கு வைக்கலாம் என இருக்கிறேன் என சொல்கிறார் ரவி. அதைக்கேட்ட ஸ்ருதி, என்னடா என்னைய கிண்டல் பண்றியா என ரவியிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு மீனா, பதற்றத்துடன் வருகிறார். அவரிடம் என்ன ஆச்சு என இருவரும் விசாரிக்கிறார்கள்.
நீத்துவின் புது பிசினஸ்
அப்போது மீனா ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். அதன்படி நீத்து புதிதாக பூக்கடை ஒன்றை திறந்திருப்பதாகவும், அதற்கு ரவி பெயரை வைத்துள்ளதாகவும் கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ஸ்ருதிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை சொல்லும் மீனா, நீத்துவுக்கு பூ சப்ளை செய்வது வேறுயாருமில்லை அந்த சதிகாரி சிந்தாமணி தான் என கூறுகிறார். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என முடிவெடுத்த மீனா, ஸ்ருதி மற்றும் ரவியிடம் சொல்லி, நீங்கள் இருவரும் இதுகுறித்து விஜயா அத்தையிடம் பேசுமாறு கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

