MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : மீனாவை அவமானப்படுத்திய விஜயா... அண்ணாமலை கொடுத்த தரமான பதிலடி

Siragadikka Aasai : மீனாவை அவமானப்படுத்திய விஜயா... அண்ணாமலை கொடுத்த தரமான பதிலடி

Siragadikka Aasai Serial 17 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை குழந்தை விஷயத்தில் அவமானப்படுத்துகிறார் விஜயா. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 17 2026, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிரமம் இருப்பதாக சொல்லிவிடுகிறார். ஆஸ்பத்திரியில் இருந்து மீனா வீட்டுக்கு கிளம்பும் போது அந்த வழியாக சென்ற விஜயா, அவரை பார்த்துவிடுகிறார். பின்னர் அவர் சென்ற பின்னர் சீதாவிடம் சென்று மீனாவுக்கு என்ன ஆச்சு என விசாரிக்கிறார். அவரும் வயிற்று வலி என சொல்லி சமாளிக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பொடி வைத்து பேசும் விஜயா
Image Credit : jiohotstar

பொடி வைத்து பேசும் விஜயா

இன்றைய எபிசோடில் மீனாவையும் முத்துவையும் மருத்துவமனையில் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும் விஜயா, பதற்றத்துடன் அனைவரிடமும் அதைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார். என்ன நடந்தது என்று அண்ணாமலை கவலையுடன் விசாரிக்க, "குழந்தை பிறக்கும் மருத்துவமனையில்தான் மீனாவை பார்த்தேன்" என்று விஜயா கூறுகிறார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் முத்து, ஏதாவது சந்தேகம் இருந்தால் நேரடியாக எங்களிடமே கேட்க வேண்டியதுதானே என்று விஜயாவிடம் கேள்வி எழுப்புகிறார். ஆனால் விஜயாவின் மனதில் ஓடுவது வேறு.

Related Articles

Related image1
Siragadikka Aasai : மீனாவின் இங்கிலீஷ் திறமையால் அதிர்ந்த சிந்தாமணி... ரோகிணி எடுத்த அதிரடி முடிவு!
Related image2
Siragadikka Aasai : கர்ப்பமாக இருக்கிறாரா மீனா? சந்தேகப்படும் விஜயாவுக்கு ஆஸ்பத்திரியில் காத்திருந்த ட்விஸ்ட்
35
மீனாவை மட்டம் தட்டிய விஜயா
Image Credit : jiohotstar

மீனாவை மட்டம் தட்டிய விஜயா

மனோஜுக்கு முன்பாக மீனா குழந்தை பெற்றுவிடுவாளோ என்ற பொறாமை காரணமாக, மீனாவை காயப்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசுகிறார். ஏற்கனவே மருத்துவர்கள் கூறிய விஷயத்தால் மனவேதனையில் இருக்கும் மீனா, விஜயாவின் வார்த்தைகளை தாங்க முடியாமல் கண்கலங்குகிறார். இறுதியில் அழுதபடியே தனது அறைக்குள் சென்று விடுகிறார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை மற்றும் சுருதி, விஜயாவை கடுமையாக கண்டிக்கின்றனர். குடும்பத்தினரின் இந்த எதிர்ப்பால் விஜயாவும் அதிர்ச்சியடைகிறார்.

45
மனோஜுக்கு பணம் கொடுத்த கனகாவின் அம்மா
Image Credit : jiohotstar

மனோஜுக்கு பணம் கொடுத்த கனகாவின் அம்மா

மறுபுறம், மனோஜ், ஜோதிடர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கனகா வீட்டிற்கு செல்கிறார்கள். மனோஜை பார்த்ததும் கனகா மிகவும் உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார். அதேசமயம், கனகாவின் தாய் ஜோதிடரிடம் ரூ.10 லட்சம் கொடுத்து, தனது மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் விரைவில் சாந்தி முகூர்த்த தேதி குறித்துத் தருமாறு கேட்கிறார். ஜோதிடரும் அமாவாசை நாளை சுப நாளாக கூறி தேதி குறிப்பிடுகிறார். இந்த முடிவு அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

55
5 லட்சம் பணத்துடன் வீட்டுக்கு வந்த மனோஜ்
Image Credit : jiohotstar

5 லட்சம் பணத்துடன் வீட்டுக்கு வந்த மனோஜ்

இதற்கிடையில், மனோஜ் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து, பணத்தை தயார் செய்து விட்டதாக பெருமையாக பேசுகிறார். ஆனால் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக முத்து, இந்தப் பணம் கடனாக வாங்கப்பட்டதோ என்று சந்தேகப்படுகிறார். ஆனால் மனோஜ், "இது என்னுடைய பிசினஸ் ஐடியாவில் வந்த பணம். நான் யாரிடமும் கடன் வாங்கவில்லை" என்று கூறி சமாளிக்கிறார். ஆனால் மனோஜின் இந்த ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தால், விஜயாவின் நிலை என்ன ஆகும்? குடும்பத்தில் மீண்டும் என்ன பிரச்சினைகள் வெடிக்கப் போகின்றன? என்பதுதான் இனி வரும் எபிசோடுகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!
Recommended image2
Kadhal Kadhal Kadhal : "உங்களை எனக்கு பிடிக்கல"... அர்ஜுனுக்கு ஷாக் கொடுத்த மது... ஸ்வேதாவின் லவ் புரபோசல்
Recommended image3
Siragadikka Aasai : கர்ப்பமாக இருக்கிறாரா மீனா? சந்தேகப்படும் விஜயாவுக்கு ஆஸ்பத்திரியில் காத்திருந்த ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : மீனாவின் இங்கிலீஷ் திறமையால் அதிர்ந்த சிந்தாமணி... ரோகிணி எடுத்த அதிரடி முடிவு!
Recommended image2
Siragadikka Aasai : கர்ப்பமாக இருக்கிறாரா மீனா? சந்தேகப்படும் விஜயாவுக்கு ஆஸ்பத்திரியில் காத்திருந்த ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved